ஏப்ரல் 21, 2024 • Makkal Adhikaram
நாட்டில் அரசியல் என்றால் என்ன? அரசியல் கட்சி என்றால் என்ன? தேர்தல் என்றால் என்ன? தேர்தலில் வாக்களிக்கும் ஜனநாயக கடமை என்றால் என்ன? தன்னுடைய வாக்கு அதிகார உரிமையை அர்த்தம் தெரியாமல், பணத்திற்கு விற்கும் மக்கள் இருக்கிற வரைக்கும் ,அதேபோல். சமூக நலன் பத்திரிகைகளை புறக்கணித்துவிட்டு, தங்களுடைய ஊழல் ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் கார்ப்பரேட் பத்திரிகை ,தொலைக்காட்சிகளுக்கு அரசின் சலுகை விளம்பரம் நிறுத்தும் வரை எந்த அரசியல் கட்சிகள் வந்தாலும், நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த முடியாது .
காரணம் மக்கள்தான் எஜமானர்கள் .இவர்கள் வாக்களிக்கும் தகுதி சுயநலத்திற்காக இருக்கும் போது, சுயநலவாதிகள் தான் இவர்கள் தேர்வு செய்வார்கள்.சுயநலவாதிகள் தான் அரசியலில் ஊழலை செய்து கொண்டிருக்கிறார்கள் . படிப்பறிவு இல்லாத காலங்களில் பொதுநலனுக்கும், கௌரவத்திற்கும், வந்தார்கள்.
பல இடங்களில் திமுக கள்ள ஓட்டு வாக்காளர்கள் புகார் .
அவர்களுக்கு ஊழல் என்றால் என்ன? என்று தெரியாது. எப்படி ஊழல் செய்ய வேண்டும்? என்பதும் தெரியாது. எல்லாவற்றையும் கருணாநிதி ஆட்சிக்கு வந்தது பிறகு தான், தமிழ்நாட்டில் மக்களுக்கு ஊழல் என்றால் என்ன? என்று தெரியும் .அதை எப்படி செய்வது என்பதும் திமுகவிற்கு தெரியும். கற்றுக் கொடுத்து முதல் அரசியல் கட்சி திமுக தான் .
அரசியலை பற்றி தெரியாத மக்களிடம் ஊழல் ஆட்சி நடத்திக் கொண்டு, எவ்வளவு பெரிய ஆராஜகங்கள், தவறுகள் ,ஊழல்கள் நடந்தாலும் அதையெல்லாம் அங்கீகரிக்கப்பட்ட பெரிய பத்திரிகைகள் என்று தினமலர், தினத்தந்தி, தினகரன், சன் டிவி, நியூஸ் 7, புதிய தலைமுறை இப்படி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களை தான் இந்த மக்கள் நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். உண்மை எது ?என்று புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு வாழ்க்கையின் அர்த்தமும் தெரியாது.
பணம் மட்டுமே வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் எதைப் பற்றியும் சிந்திக்க மாட்டார்கள் . அவர்கள் பொய்யை உண்மை போல் பேசினால் நம்பி விடுவார்கள். உண்மை பொய் என்று சொன்னாலும், நம்பி விடுவார்கள். அது மட்டுமல்ல,இன்றைய அரசியல் கட்சி தலைவர்களுக்கும், கட்சியினருக்கும், வாய் தான் மூலதனமே தவிர, செயல்பாடுகள், அவருடைய ஒழுக்கம் ,நேர்மை, மனசாட்சி எதுவுமே இல்லாமல், ஒருவருடைய அரசியல் எப்படி ?மக்களுக்கு நல்லது செய்ய முடியும்?
இந்த அடிப்படை அறிவு இல்லாததால், தமிழ்நாட்டில் இன்று வரை, இந்த மக்கள் எப்படி எல்லாம் ஏமாறுகிறார்கள்? என்பதை தெளிவாக பார்ப்போம் .ஒரு பக்கம் ஜாதியை முன்னிறுத்துகிறார்கள். ஜாதியில் இட ஒதுக்கீடு பிரச்சனை, அடுத்தது மதத்தை அரசியலாக்குகிறார்கள். மதம் என்பது கடவுளை வழிபடுவதற்கு தான் மதமே தவிர, இவர்கள் இந்து மதத்துடன் போட்டி போடுவதற்கு அல்ல, மேலும்,
இந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்வதற்கு ,அரசியல் தேவைப்படுகிறது. இது தவிர ,மதத்தை வைத்து குறுக்கு வழிகளில் ,சட்டத்துக்கு புறம்பான (illegal) விஷயங்களில் பணத்தை சம்பாதிக்க கிறித்துவம், முஸ்லிம்கள் பயன்படுத்துகிறார்கள். கிறிஸ்தவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து ஹவாலா பணம், பிளாக் மணி இது எல்லாம் என் ஜி ஓ நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பணத்தை தடுத்து நிறுத்துவதால், பிஜேபிக்கு வாக்களிக்க மாட்டோம்.
அதே போல், நாங்கள் நாட்டில் குண்டுவெடிப்பு செய்தாலும் , போதை பொருள் கடத்தினாலும், கள்ளக் கடத்தல் செய்தாலும்,தீவிரவாதம், கள்ள நோட்டுகள் கொண்டு வந்தாலும், எங்களை தடுக்கக்கூடாது. இது முஸ்லிம் மக்கள் மத உணர்வு, அந்த மதத்தை இவர்கள் புண்படுத்துகிறார்கள் என்று தமிழ்நாட்டு ஊடகங்கள் ,அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் இதையெல்லாம் கூவிக் கொண்டிருப்பார்கள். முட்டாள்கள் அதையும் நம்பிக்கொண்டு, வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
அரசியலுக்கும் ,இதற்கும் என்ன சம்பந்தம் ? மதத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ? இதற்கெல்லாம் பதில் சொல்ல இவர்களால் முடியுமா ? அது மட்டுமல்ல, புறம்போக்கு நிலங்களில் சர்ச் கட்டிக் கொள்வது, பல நூறு ஏக்கர் நிலத்தை டரஸ்ட் பெயரில் ஆக்கிரமிப்பு செய்து கொள்வது, இவையெல்லாம் தவறு என்று எந்த அரசாங்கமும், இவர்களை தட்டிக் கேட்கக் கூடாது. என்ன நியாயம்? என்ன சட்டம்? என்ன ஆட்சி?இதுதான் மக்களாட்சியா?
தவிர,சிறுபான்மையினருக்கு ஒரு சட்டம், இந்துக்களுக்கு ஒரு சட்டம், பணக்காரனுக்கு ஒரு சட்டம், ஏழைக்கு ஒரு சட்டம், ஆட்சியாளர்களுக்கு ஒரு சட்டம், அதிகாரிகளுக்கு ஒரு சட்டம், இப்படி சட்டம் ஆளாளுக்கு ஒரு சட்டமா ? அம்பேத்கர் எழுதிய சட்டம் ?அப்படி ஒரு சட்டமே தேவையில்லை. அந்த சட்டங்களால் குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே ஆதாயமாக இருக்கும் போது, அதை எப்படி சட்டம் என்று ஏற்றுக் கொள்வது? எதன் அடிப்படையில் அதை சட்டம் என்று பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்?
அரசியல் விழிப்புணர்வும், தேர்தல் விழிப்புணர்வும், அரசியல் தெரியாத மக்களுக்கு மிகவும் முக்கியமானது .மேலும், பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து ,அடிப்படை அறிவு கூட இல்லாத மக்களுக்கு தேர்தல் நடத்துவது வீணானது .தேர்தல் ஆணையத்திற்கு பலமுறை மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதளத்தில் இது பற்றி கருத்துக்கள் தெரிவித்துள்ளது .எந்த நடவடிக்கையும் இல்லை. கடமைக்கு தேர்தல் நடத்துவது, தேர்தலின் நோக்கம் நாட்டு மக்களுக்கு அதன் பயன்கள் எக்காலத்திலும், முழுமையாக அது பயன்தராது .