ஜூன் 21, 2025 • Makkal Adhikaram

ஒவ்வொரு நாட்டுக்குள்ளும், இருக்கின்ற தீய சக்திகளால், அந்த நாட்டுக்கு ஆபத்து. இதற்கு பல உதாரணங்கள் சொல்ல முடியும். ஒரு ஊரில் ஒரு கெட்டவன் இருந்தால், அந்த ஊரே அழிப்பான். பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. அவன் பின்னால் ஒரு கூட்டத்தை சேர்ப்பான். ஒன்று அந்த ஜாதிக்கும், இல்லையென்றால் அந்த ஊரின் காலனிக்கும் சண்டையை ஏற்படுத்துவார்கள். இதன் மூலம் அழிவை ஏற்படுத்துவார்கள்.

இன்னும் கொஞ்சம் நகரங்களில் ரவுடிகளால், வெட்டிக்கொண்டு, சண்டையிட்டுக் கொண்டு, அந்த நகரப் பகுதிக்கும், வேற்று நகர பகுதிக்கும் சண்டையை உருவாக்குவார்கள். அது மட்டுமல்ல, இவர்களுடைய அரசியல் செல்வாக்கால் அந்த இடத்தில் இவர்கள் டான் ஆகிவிடுவார்கள். அதே நிலைமைதான் நாட்டிற்கும், இன்று தீவிரவாதத்தை ஒழிக்க வந்த இஸ்ரேல், பல நாடுகளுடன் போரை உருவாக்கி வைத்துக் கொண்டு நிற்கிறது. இவ்வளவும் சமாளிக்க இன்று வளர்ந்த விஞ்ஞானம்! நாட்டின் பேரழிவு ,ஆபத்து என்ற நிலைக்கு கொண்டு போய் ஈரான் – இஸ்ரேல் போரின் நிலைமை. மேலும்,

போர் என்று வந்தால், இரண்டு நாடுகளுக்கு இடையே பொதுமக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். எந்த விஞ்ஞானம் மக்களுக்கான வளர்ச்சி, தேவை என்று நினைத்தார்களோ ,அதுவே இன்றைய அழிவு, ஆபத்து ஆக மக்கள் ஒவ்வொரு நாளும் மரண பீதியில், இரு நாட்டு மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தவிர,

ஏவுகணைகள், அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடு தங்களை பலம் பொருந்திய நாடாக நினைத்துக் கொண்டாலும், உலக நாடுகள் மத்தியில் தங்களை பார்த்து மற்ற நாடுகள் பயப்பட வேண்டும் என்று இதை குவித்துக் கொண்டிருந்தாலும் ,மக்களுக்கு இதனால், எந்த பயனும் இல்லை. மக்கள் அமைதி, சந்தோஷம், நிம்மதி இதுதான் மனித வாழ்க்கை. போர் எந்த விதத்திலும், மக்களுக்கு நன்மை தரப்போவதில்லை. அது தீமையும், அழிவும் தான் என்பதை ஒவ்வொரு நாளும் உணர்ந்து கொள்ள வேண்டும்.மேலும்,

ஒரு நாடு, இன்னொரு நாட்டுடன் போர் புரிவதால் ,இரு நாட்டின் பொருளாதாரம் மிகவும் கேள்விக்குறியாகும். வறுமை, நோய் வாழ்க்கையின் போராட்டம், தொழில், வேலை வாய்ப்பு அத்தனையும், அந்த நாட்டில் பெரும் சிக்கலில் மக்கள், ஒவ்வொரு நாளும் செத்து ,செத்து பிழைக்கும் நிலைமைதான், இந்த போரால் ஏற்படக்கூடிய விளைவு. இப்படிப்பட்ட போரை எந்த நாட்டு மக்களும் விரும்புவதில்லை.

ஆனால், இன்று ஈரானும், இஸ்ரேலும் போரின் உச்சத்தில் இருந்து வருகிறது. இங்கே நானா? நீயா? யார், யாரை அழிப்பது ?இந்தப் போட்டியில் விஞ்ஞான வளர்ச்சியில் சண்டை. இந்த சண்டையை யார் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து, அந்த ,அந்த நாட்டின் தலைவர்கள் தேவை என்று முடிவெடுக்கிறார்கள்? ஆனால், முடிவு ஒரு நாட்டுக்கு பாதகமாகவும், ஒரு நாட்டுக்கு சாதகமாகவும், தான் இருக்கும். போர் என்று வந்தாலே யாரோ ஒருவருக்கு, தான் வெற்றி ,ஒருவருக்கு தோல்வி தான் வரும்.

இதற்கு அந்த நாட்டு தெய்வ சக்தி, அந்த நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன் எண்ணம், பிறரை அழித்து தான் மட்டும் வாழ வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அவனோடு அந்த நாடும் அழியும். அப்படிதான் ஹிட்லர், முசோலினி போன்ற தலைவர்களால், அந்த நாடுகளின் அன்றைய அழிவு சரித்திர வரலாறு.
அதே போல் தான் இன்றைய ஈரான் – இஸ்ரேல் நாட்டுத் தலைவர்கள் எண்ணங்களால், அந்த நாட்டு மக்கள் இன்று போரால் அழிக்கிறார்கள். இதே இரண்டு நாடுகளும் 50 ஆண்டுகளுக்கு முன்னாள், இதனுடைய நிலைமை என்ன ?அப்போது வாழ்ந்த மக்கள் தலைவர்கள், அவர்களுடைய எண்ணங்கள் எப்படி இருந்தது? அப்போது இரண்டு நாடுகளின் விஞ்ஞான வளர்ச்சி என்ன? என்னை வளத்தால் ஈரான் வளர்ந்தது .

அதன் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்தது ,வளர்ச்சியடைந்த விஞ்ஞான வாழ்க்கை, அழிவைத்தான் நோக்கி எல்லா நாடுகளும் போய்க்கொண்டிருக்கிறது. விஞ்ஞானம் ஓரளவு தான் தேவை. விஞ்ஞானம் வளர்ச்சி இல்லாமல் 50 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மக்களின் நிம்மதி, சந்தோஷம், கௌரவம் இப்பொழுது இருக்கிறதா? அந்த மக்களின் எண்ணங்களும் இல்லை, தெய்வ நம்பிக்கை உடன் வாழ்ந்த மக்கள் இல்லை, மனசாட்சியுடன் வாழ்ந்த மக்கள் இல்லை, பேராசை இல்லாமல் வாழ்ந்த மக்கள் இல்லை, இவை அத்தனையும் அந்த நாட்டு மக்களும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களும், ஒருவருக்கொருவர் விதியின் பிணைப்பால் அனுபவிக்க பிறந்தவர்கள்.

எப்படியோ இந்தியா ஒரு மாபெரும் மோடி என்ற மகான் தலைவராக இந்தியாவின் தெய்வ சக்தி நியமித்துள்ளது. அந்த தெய்வ சக்திக்கு இந்திய மக்கள் நன்றி சொல்ல வேண்டும். இல்லையென்றால் ஆபரேஷன் சிந்தூரே இன்னும் போரை கொண்டு போய் எங்கே நிறுத்திருப்பார்களோ, போர் புரிவது வீரமாக இருந்தாலும், அல்லது நாமே வெற்றி பெற்று இருந்தாலும், அதனால் மற்றொரு பக்கம் பொருளாதார இழப்பு, நிச்சயம் ஏற்பட்டிருக்கும் .அது இந்திய மக்களுக்கு வாழ்க்கையே, போராட்டமாக மாற்றி விட்டால் என்ன செய்வது? அந்த விதத்தில் மோடி சாணக்கியத்தனமாக கையாண்டார்.

இப்படி ஒவ்வொரு நாளும் போரில் இரண்டு நாடும் (ஈரான் – இஸ்ரேல் ) எவ்வளவு இழப்புகளை சந்தித்து இருக்கிறார்கள்? இதுவரை அதை கணக்கெடுத்தால், இன்னும் 10 ஆண்டுகள் ஆனாலும், இந்த பத்து நாள் சண்டைகள் இரு நாடுகளின் இழப்பின் வளர்ச்சி, ஈடு செய்ய முடியாது. இப்படி இழப்பதற்கு போர் அதுதான் விஞ்ஞானத்தின் வளர்ச்சியா? நிதானம் மக்களின் வாழ்க்கைக்கு தேவையானதாக இருக்க வேண்டுமே தவிர, அது மக்களின் உயிர்களை அழிக்கும் சக்தியாக பயன்படுத்தினால், மக்கள் ஒவ்வொரு நாளும் செத்துப் ,பிழைக்கும் நிலைமைதான்.

யாரிடம் இருக்கின்ற ஏவுகணைகள், அணு ஆயுதங்கள் ஒருவரை ,ஒருவர் அழிக்க போட்டி போட்டால்! இரு நாட்டு மக்களின் வாழ்க்கை நிம்மதி, சந்தோஷம் அழித்து விடுவார்கள். அதனால், ஒவ்வொரு நாடும் போர் அவசியமா? எத்தனை ஏவுகணைகள் இருந்தாலும், எத்தனை அணுகுண்டுகள் இருந்தாலும், அவையெல்லாம் இந்த நாட்டு மக்களை காப்பாற்ற போவதில்லை. ஒருவரை அழித்து இன்னொருவர் வாழ முடியாது.மேலும், இரண்டு நாடுகளும் போரை நிறுத்தி, சமாதான பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும்.போர், வன்முறை, மனித வாழ்க்கைக்கு தீர்வாகாது.