
நீட் தேர்வை வைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் ,கரப்பான் பூச்சி போன்ற அமைப்புகள் தமிழகத்தில் இனி அரசியல் செய்ய முடியாது.
மேலும்,மாணவர்கள் யாரும் நீட் தேர்வு வேண்டாம் என்று போராடப் போவது கிடையாது. அப்படியே போராடுபவர்கள், எந்த அரசியல் கட்சியாவது அவர்களை தூண்டி விட்டு போராடுவார்கள். உண்மையான மாணவர்கள் மருத்துவக் கல்வி நீட் தேர்வு மூலம் சாமானிய மக்களுக்கு போய் சேருகிறது என்பதை பொதுமக்களும், பெற்றோர்களும், மாணவ, மாணவிகளும் உணர்ந்து விட்டனர்.

மேலும்,இதில் அரசியல் கட்சிக்கு ஆதரவான ஊடகங்களோ அல்லது அவர்களை தூக்கி பிடிக்கும் ஊடகங்களோ, அது சார்ந்த சமூக ஊடகங்களோ, இனி மக்களை ஏமாற்ற முடியாது .இனி நீட் தேர்வு இருந்தால் தான், நம்மை போன்ற ஏழை எளிய மாணவர்கள், மருத்துவக் கல்விக்கு அது சாத்தியமானது என்பதை உணர்ந்துவிட்டனர்.

மேலும், இனி அரசியல் கட்சிகள், அமைப்புகள் , கரப்பன் பூச்சி ஜனதா கட்சி அமைப்புகள் மருத்துவக் கல்வி படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கக்கூடிய மாணவர்கள் போராட வரமாட்டார்கள்.
அப்படியே போராடினாலும்,எதிர்க்கட்சிகளின் அரசியல் சூழ்ச்சிக்கு பணத்தை வாங்கிக் கொண்டு, போராடுபவர்கள் தான் போராடுவார்கள்.

மேலும்,டெல்லி காக்ரோச் ஜனதா கட்சி கம்பெனி மாணவர் இயக்கத்துக்கு டெல்லி போலீசார் நன்றாக கவனித்து இருப்பதாக தகவல் தெரிய வருகிறது. ஆரம்பத்தில் அவர்கள் எல்லாவற்றையும் பொறுமையாகவும் , நிதானத்துடன் செயல்பட்டதால், இவர்கள் போலீசார் மீது கை வைக்க ஆரம்பித்தார்கள்.
அதற்கு இவர்களை உளவுத்துறை முதல் காவல்துறை வரை நன்றாக கவனித்து இருப்பதாக தகவல்.எனவே, இவர்கள் டெல்லி பக்கம் திரும்புவார்களா? என்பது மிகப்பெரிய சந்தேகம்.
