பத்திர பதிவுத்துறையில் ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கில் பத்திரப்பதிவு அலுவலர்களுக்கு லஞ்சமா ? இதை ஒழிக்க அரசே பத்திர எழுத்தாளர்களை கொண்டு வருமா ? அல்லது அதற்கான நிர்ணயிக்கும் கட்டணத்தை அறிவிக்குமா? சமூக ஆர்வலர்கள் வேதனை.

அரசியல் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

நவம்பர் 19, 2024 • Makkal Adhikaram

பத்திர பதிவுத் துறையில் ஒரு நாளைக்கு சுமார் 50 லட்சத்திற்கு பத்திர பதிவு அலுவலர்களுக்கு ,லஞ்சம் வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பணம் ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலரும், சொத்துக்களை வாங்கி குவித்திருக்கிறார்கள்.இது தவிர, போலி பத்திரங்களை பதிவு செய்வது, அரசாங்க புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு  செய்திருப்பவர்கள் இதையெல்லாம் கூட பத்திர பதிவு நடந்திருக்கிறது .இது தவிர ஒருவருடைய சொத்தை மற்றொருவர் அபகரிக்க பத்திரப்பதிவு செய்து இருப்பது பத்திரப்பதிவு துறையில் உள்ள உள்ளடி வேலைகள் . பணம் கொடுத்தால் எல்லாம் மறைத்துக் கொள்வார்கள். பணம் கொடுக்கவில்லை என்றால் பட்டா நிலமாக இருந்தாலும் ,அங்கே எங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் சென்றாலும், 100 கேள்வி கேட்பார்கள் . மற்றொரு பக்கம் லஞ்ச ஒழிப்பு துறையில் மாட்டி இருக்கிறார்கள்.  மற்றொரு பக்கம் லஞ்ச ஒழிப்பு துறையில் மாட்டி இருக்கிறார்கள். 

மேலும், இந்த பணம் பத்திரப்பதிவு ஐஜி அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு செல்கிறதா? அல்லது சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்கு செல்கிறதா? இதுவும் உள்ளடி வேலையாக நடக்க வாய்ப்பு உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும், இந்த மிகப்பெரிய ஊழல்! பொதுமக்களிடையே பேசப் பட்டு வருகின்றன. மேலும் சமூக வலைதளங்களிலும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த ஊழலுக்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள். பத்திரப்பதிவு எழுத்தர்கள் என்பது தற்போது பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள்தான் ஒரு பத்திரப்பதிவு செய்து தர இவ்வளவு ஆகும் என்று ஆரம்பத்திலேயே சொல்லி, பொதுமக்களிடம் பணத்தை வசூல் செய்கிறார்கள். 

இதில் இவர்கள் வருமானம் மட்டும் ஒரு நாளைக்கு பத்தாயிரம் முதல் 50 ஆயிரம் கூட இருக்கும் என்கிறார்கள். அதற்கு பத்திரவு பதிவு செய்பவர்கள் காத்துக் கிடப்பது, அவர்களை அலைகழிப்பது, இது எல்லாம் அவர்களின் வியாபார டெக்னிக்.

இந்த வியாபாரத்தில் பத்திரப்பதிவு அலுவலர்களுக்கு என்று ஒரு தொகை இவர்கள் பத்திர எழுத்துக் கூலி மற்றும் பதிவு செய்து தரும் கூலி எல்லாவற்றையும் அநியாயத்திற்கு தெரியாத அப்பாவி மக்களிடம் வசூலிக்கிறார்கள். சிலர் அந்த பத்திரம் வாங்குவதிலிருந்து ,இவ்வளவு தொகை என்று கூட தெரியாத மக்களிடம் ,அதிலும் பணம் பார்க்கிறார்கள். இப்படி எந்தெந்த வகையில் பொதுமக்களை ஏமாற்றும் கும்பலாக பத்திரப்பதிவு எழுத்தர்கள் இதற்கு முக்கிய காரணமானவர்கள். 

இவர்களுக்கு பதிலாக அரசே இவர்களில் தகுதியானவர்களை ஏஜெண்டுகளாக நியமிக்க வேண்டும் .அவர்களுக்கு ஒரு பத்திர எழுத்துக் கூலி இவ்வளவுதான் என்று நிர்ணயம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால்! இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும் . மேலும், பத்திரம் விற்பவர்கள் அவர்களும் அரசின் ஏஜெண்டாக இருக்க வேண்டும் . 

இது தவிர, ஒவ்வொரு பத்திர பதிவு செய்யும்போது அந்தத் தொகையினை பத்திர பதிவு செய்யும் வாங்குபவர்கள் பெயரிலே பணத்தை ஆன்லைனில் கட்ட வேண்டும் . அவ்வாறு செய்தால், பத்திர பதிவுத்துறையில் உள்ள லஞ்சத்தை 99 சதவீதம் குறைக்க முடியும் . தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *