
கடந்த திமுக ஆட்சியில் பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலத்தை கையகப்படுத்தியதில் 1700 ஏக்கர் தனியார் நிலம் என்று கணக்கு காட்டுகிறார்கள்.
அரசு புறம்போக்கு நிலம் அப்படியேதான் இருக்கப் போகிறது .அது யாரிடமும் இல்லை. மேலும் இவர்கள் சொல்லும் புள்ளி விவரம் உண்மையானது தானா? பத்திரிக்கை செய்திகளை வைத்து இந்த புள்ளி விவரத்தை பேசிக்கொண்டு இருக்கிறார்களா?
1700 வருவாய்த் துறையில் !நிலத்தை யார்? யாரிடம் எவ்வளவு கையகப்படுத்தி, பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற புள்ளி விவரம் இன்னும் தெளிவாக வருவாய்த்துறை அதிகாரிகள் ,அதை வெளியிடவில்லை.
2025 ஜூலை 17.52 ஏக்கர் நிலம் TIDCO பெயரில் ,பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு எவ்வளவு நிலம் ?எந்தெந்த தேதியில் வருவாய் துறை அதிகாரிகள் நிலத்தை பத்திரப்பதிவு செய்துள்ளார்கள்? என்ற விவரம் தெளிவாக தெரியவில்லை.
இது தவிர, அவர்கள் சொல்லும் கணக்கு ஜூலை மாதத்தில் 17 .5 2 நவம்பர் மாதத்தில் 1075 ஏக்கர், நவம்பர் மாத இறுதியில் 1100 ஏக்கர் இதற்குப் பின்னர் 1700 ஏக்கர் இதற்கான பத்திரப்பதிவு ஆவணங்கள் உள்ளனவா?

மேலும், இந்த பதிவுக்காக சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட தொகை2025 செப்டம்பர்
566 ஏக்கர்;2025 நவம்பர் 5 வருவாய்த்துறை தகவல்
சுமார் 1,000 ஏக்கர்
₹284 கோடி
அதே நாள் வெளியான மற்றொரு அதிகாரிகள் கணக்கு
சுமார் 1,000 ஏக்கர்
சுமார் ₹400 கோடி

2025 நவம்பர் 6 ,மற்றொரு அதிகாரப்பூர்வத் தகவலை மேற்கோள் காட்டிய செய்தி
1,100 ஏக்கர்
₹680 கோடி இப்படி கொடுக்கப்பட்ட தொகை, பத்திரப்பதிவு செய்யப்பட்ட நிலத்தின் ஏக்கர், எல்லாமே முன்னுக்குப் பின் முரணாகவே பத்திரிக்கை செய்திகள் வெளிவந்துள்ளது.

இதனுடைய உண்மையான நிலவரத்தை காஞ்சிபுரம் தற்போதைய மாவட்ட ஆட்சியர் சினேகா சொன்னால்தான் தெரியவரும் என்கின்றனர் பொதுமக்கள்.
