மே 19, 2024 • Makkal Adhikaram
நாட்டில் ஊடகங்களின் பணி சமூக நலனுக்கும், நாட்டு நலனுக்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும், சமூக ஒற்றுமைக்கும், அமைதிக்கும் முக்கியத்துவமான பணி. இப் பணியை மேற்கொண்டுள்ள நடுநிலையான ஊடகங்களுக்கு பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முக்கியத்துவம் அளிப்பாரா ? இது ஏன் நாட்டில் பேசு பொருளாக ஆகியுள்ளது? பல அரசியல் கட்சிகள் தங்களுக்காக ஊடகங்களை உருவாக்கி அதன் மூலம் அவர்களுடைய கருத்துக்களையும், செய்திகளையும் மக்களிடம் கொண்டு செல்வதற்கு ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
இவையெல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களாக இன்று வலம் வந்து கொண்டிருக்கிறது. இதில் தொலைக்காட்சி பத்திரிக்கை என்று எல்லாமே அவரவர்க்கு வேண்டிய நிறுவனங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதைப் பற்றி பிரதமர் மோடி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் 10 வருடமாக ஏன் நீங்கள் ஊடக சந்திப்பு நடத்தவில்லை என்ற கேள்விக்கு பிரதமர் மோடி ஊடகங்கள் நடுநிலையுடன் இல்லை என்று தெரிவித்துள்ளார். அது 100% மக்களுக்குத் தெரிந்த உண்மை.
ஆனால், நடுநிலையுடன் செயல்படுகின்ற ஊடகங்கள் விரல்விட்டு தான் எண்ண முடியும். அப்படிப்பட்ட ஊடகங்களுக்கு இதுவரையில் மத்திய மாநில அரசு எந்த முக்கியத்துவமும் தராமல், சமூக நலனுக்காக போராடி பத்திரிக்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக பிரதமர் மோடிக்கே தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதை அவர் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு அனுப்பி வைத்து விட்டார். அங்கிருந்து மீண்டும் உங்களுடைய தெளிவான கருத்தை தெரிவியுங்கள் என்று இரண்டு முறை கடிதம் வந்துள்ளது. மீண்டும் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை எந்த பதிலும் வெளிவரவில்லை.
மேலும், இது சம்பந்தமாக தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா மற்றும் தமிழ்நாடு செய்தித்துறை இயக்குனர் செயலாளர் மற்றும் மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு துறைக்கு விரைவில் லீகல் நோட்டீஸ் அனுப்ப தமிழ்நாடு சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது. இதில் பழையமேலும் ,பேச்சுரிமை, கருத்துரிமை இவற்றிற்கெல்லாம் ஒரு நெருக்கடி தமிழ்நாட்டில் சவுக்கு சங்கர் கைது மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றுதான் சொல்ல வேண்டும். காவல்துறையை இழிவாக பேசியது என்று காவல்துறை கைது செய்து, கையை உடைக்க யார் இவர்களுக்கு அந்த அதிகாரம் கொடுத்தது ? சட்டத்தை மீறுகின்ற செயலாகவும், மனித உரிமை மீறல்களாகவும் இருந்து வருகிறது. இது தவிர, இவரை பேட்டி எடுத்த பிலிக்ஸ் ஜெரால்ட் ,அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.சில யூ டியூபர்கள், ஆட்சியாளர்களுக்கு ஜால்ரா அடிக்கக்கூடிய ஊடகங்கள், அதையும் நியாயப்படுத்துகிறது. மேலும்,
நாட்டில் பத்திரிக்கை சுதந்திரம் நியாயத்திற்கு குரல் கொடுக்கும் போது, இப்படிப்பட்ட அநியாய கைதுகள், ஆட்சியாளர்கள், காவல்துறை மூலம் ஏற்படுத்துகிறார்கள். அப்படி என்றால் காவல்துறை சட்டப்படி இயங்குகிறதா? அல்லது ஆட்சியாளர்களின் எடுபிடியாக வேலை செய்கிறதா? இந்த ரெண்டு கேள்விக்கும், நீதிமன்றம் தான். இனி சட்டத்தின் உரிமையை நிலைநாட்ட முடியும் இங்கே சட்டம் ஆட்சி செய்கிறதா? இல்லை சட்டத்தை காவல்துறை கையில் எடுத்துக் கொண்டதா ? இதற்கெல்லாம், நீதிமன்றம் தான் நாட்டின் பத்திரிகை சுதந்திரத்தையும், கருத்து சுதந்திரத்தையும் நிலை நாட்ட வேண்டிய முக்கிய கட்டாயத்தில் நீதிமன்றம் இருந்து வருகிறது .
மேலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அரசின் செய்தித் துறை கார்ப்பரேட் பத்திரிகை ஏஜென்ட்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதாவது நான் தற்போது சந்தித்ததில் செய்தித் துறை செயலாளர் முனைவர் சுப்பிரமணியன், மிகவும் மனசாட்சி உள்ள அதிகாரி அதில் மாற்றுக் கருத்து இல்லை. இது தவிர, அவரைப்பற்றி கேள்விப்பட்டதில் அவர் கீழ் மட்டத்திலிருந்து வாழ்க்கையை ஆரம்பித்தவர் என்று கேள்விப்பட்டேன்.
மேலும், ஆட்சியராக பணியில் இருந்த போது கூட, அவர் சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்கள் பாதிக்கக்கூடிய செயல்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பார் என்றுதான் எனக்கு வந்த தகவல். நான் இரண்டு, மூன்று முறை சென்று பார்த்தேன். அவர் நான் கொடுத்த மனுவை இயக்குனருக்கு அனுப்பி விட்டேன் என்று தெரிவித்தார். இயக்குனர் தான் இதுவரையில் அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார் என்று தெரியவில்லை. மேலும், ஐந்து ஆண்டுகளாக இந்த பத்திரிக்கை துறையில் இருக்கின்ற அவலங்களை தொடர்ந்து எழுதி வந்த ஒரே பத்திரிகை மக்கள் அதிகாரம் மட்டும்தான் இங்கே நான் ஆர்.டி.ஐ மூலம் கேட்ட கேள்விக்கு இதுவரையில் இரண்டு ஆட்சியிலும் எந்த பதிலும் இல்லை.
அப்படி என்றால் தவறுகளை இந்த செய்தி துறை ஏற்றுக் கொண்டுள்ளது. நான் எழுதுகின்ற உண்மையான செய்திகளை ஏற்கனவே இயக்குனராக இருந்த மோகன் ஐஏஎஸ், பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ் உண்மை என்று என்னிடம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், இங்கே அரசியல் தலையீடு இருப்பதால் இந்த பத்திரிகைகளுக்கு எல்லாம் எதுவும் செய்ய முடியாது என்ற நிலைமை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இப்போது இப்ப பிரச்சனை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும்போது, எத்தனை பத்திரிகைகள் நடுநிலை ஆனது? எத்தனை பத்திரிகைகள் கட்சி சார்ந்தது? எத்தனை பத்திரிகைகள் சமூக நலனுக்கான செய்திகள்? இப்படி ஒவ்வொன்றையும் அங்கே கேள்வி கேட்கப் போகிறார்கள்.
அங்கே பதில் சொன்னால் செய்தித்துறையின் கொள்கை முடிவு. அப்போதுதான் இந்த பத்திரிகைகளுக்கெல்லாம் ஒரு விடியலை ஏற்படுத்த முடியும். நாட்டில் பயனற்ற செய்திகளை மக்களிடம் இதுதான் பெரிய பத்திரிகை என்று சொல்லிக் கொள்வதில், எந்த பயனும் இல்லை. இப்போது அந்த நிலைமை எல்லாம் மாறிவிட்டது. தொடர்ந்து மக்களும் அந்த பத்திரிகைகளை வாங்கி படிக்க தயாராக இல்லை. ஒரு மாவட்டத்திற்கு மாலை பத்திரிக்கை அதாவது மாலை முரசு என்ற பத்திரிகை திருவள்ளூர் மாவட்டத்திற்கு 100 பத்திரிக்கை வருகிறது என்கிறார்கள்.
இதில் விற்பனை எவ்வளவு ரிட்டன் எவ்வளவு? இந்த கணக்கு ஒரு பொய்யான ஆடிட்டர் ரிப்போர்ட் தான் செய்தித் துறையில் கொடுத்து சலுகை, விளம்பரங்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது சர்குலேஷன் என்ற விதிமுறை எவ்வளவு ஏமாற்று வேலை? என்பது ஊடகத் துறையில் இதுபோல் பல பத்திரிகைகள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. மேலும், மக்கள் படிக்கக்கூடிய செய்திகள் ,மக்களுக்கு தேவையான செய்திகள், கொடுக்கக்கூடிய பத்திரிகைகள் மாதமாக இருந்தால் என்ன? வாரமாக இருந்தால் என்ன? தினசரியாக இருந்தால் என்ன? அல்லது இணையதளத்தில் இருந்தால் என்ன ?
அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தனக்கு வேண்டிய பத்திரிகைகள், ஆட்சியாளர்களின் ஜால்ராவாக இருக்கக்கூடிய பத்திரிகைகள், இதற்கு தான் நாங்கள் சலுகை விளம்பரம் கொடுப்போம் என்றால், இது பத்திரிக்கை சுதந்திரம் மற்றும் மக்களின் வரிப் பணம் கோடிக்கணக்கில் வீணடிக்க அரசு அதிகாரிகள் துணை போகிறார்கள். இதற்கெல்லாம் முடிவு கட்ட தான் தமிழ்நாடு சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு நீதிமன்றத்தை நாட உள்ளது. இனியாவது, மத்திய ,மாநில அரசுகள் பத்திரிக்கை துறையை வரைமுறை படித்தி, நெறிமுறை படுத்தவில்லை என்றால், சமூகத்திற்கு அதனால், எந்த நன்மையும் இல்லை.நானும் பத்திரிகை, நானும் செய்தியாளர், இப்படி தான் பத்திரிக்கை துறை இருக்கும்.அப்படிப்பட்ட பத்திரிகைகள் மக்களுக்கு தேவையும் இல்லை.
மேலும், மத்திய அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தி, பத்திரிக்கையை வரைமுறை படுத்த நடுநிலையான முடிவுகள் எடுக்க வேண்டும். இங்கே கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு ஒரு சட்டம், சாமானிய பத்திரிகைகளுக்கு ஒரு சட்டம், இதில் எல்லாம் மாற்றங்கள் கொண்டு வந்தால் தான், சமூக நலன், இந்த தேச நலன், பத்திரிகை சுதந்திரத்தில் முக்கியத்துவமாக இடம்பெறும் என்பதை மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில் இக்கருத்தை பதிவு செய்கிறேன்.