செப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram
சென்னை: மகாவிஷ்ணு சொற்பொழிவு சர்ச்சையான நிலையில், அதில் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர், அந்த நிகழ்ச்சிக்கு வந்தது பற்றிய ஒரு பதிவு சமூக வலைதளத்த வைரலாக பரவி வருகிறது.
சென்னை அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சொற்பொழிவாற்றிய பரம்பொருள் அறக்கட்டளையின் தலைவர் மகா விஷ்ணு, சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பள்ளியின் பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் என்பவர் குரல் கொடுத்தார். மகாவிஷ்ணுவின் பேச்சு தங்களை அவமதிப்பதாக இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்தனர்.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய அடுத்த நாளே ஆசிரியர் சங்கருக்கு ஆதரவாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அவரை நேரில் சென்று பாராட்டினார். மேலும், ஆசிரியரை அவமதித்த மகாவிஷ்ணுவை சும்மா விடுவதில்லை என்றெல்லாம் அமைச்சர் பேசினார். இந்த நிலையில், சமூக வலைதளத்தில் ந.முத்துராமலிங்கம் என்பவர் வெளியிட்ட ஒரு பதிவு வைரலாகியுள்ளது.
அவரது பதிவு: நேற்றுவரைக்கும் நமக்கெல்லாம் யார்னே தெரியாத ஒருத்தர (மகாவிஷ்ணு) எப்படித் தமிழகம் முழுவதும் பேமஸ் ஆக்கினாங்க? நமக்குதான் யார்னு தெரியாது.. ஆனா ரெண்டு பள்ளிகள்ல நிகழ்ச்சிய ஏற்பாடு செஞ்ச ஆசிரியருக்கு தெரியாதா? அனுமதி கொடுத்த டி.இ.ஓ, சி.இ.ஓ-க்களுக்குத் தெரியாதா?
அடுத்ததா இவர் பேசினது ரெண்டு ஸ்கூல் ஒன்னு சைதாப்பேட்டைல இருக்கு, ரெண்டாவது அசோக்நகர்ல இருக்கு, ரெண்டுக்கும் இடைல நாலு கிலோமீட்டர் தூரம். இதுல எதுக்கு அந்தப் பிரச்னை பண்ணின பார்வையற்ற ஆசிரியர், தனது சைதாப்பேட்டை பள்ளியிலிருந்து அசோக்நகர் பள்ளிக்கு வந்தார் என்பது முதல் கேள்வி.
அப்படியானால் இவர் கர்மா பற்றியும், மறுபிறப்பு பற்றியும் பேசுவார் என்று முன்பே தெரிந்து வந்தாரா? அல்லது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிந்தேதான் இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்படுத்தி, அதில் மிகச்சரியாக ஒரு பார்வையற்ற ஆசிரியரைத் தேர்ந்தெடுத்து அதைப் பிரச்னையாக்கி, இவருக்கு விளம்பரம் தருகிறார்களா? அதனால் இவர்களுக்கு என்ன பயன்?
ஒரே கல்லில் ஒரு மாமரத்தையே சாய்க்கும் வல்லமை திராவிடத்திற்கும் அதன் தாய்க்கழகமான மிஷனரிகளுக்கும் உண்டு. முருகன் மாநாடு நடத்தியதாலும், கருணாநிதி நாணய வெளியீட்டு நிகழ்ச்சியாலும் அதிருப்தியில் இருக்கும் சிறுபான்மையினரைக் குளிர்விக்க, இதைத் திட்டமிட்டு ஒரு டூல்கிட்டாகவும் பயன்படுத்தியிருக்கலாம். அன்பில் மகேஷிலிருந்து முதல்வர் வரை பொங்கியதிலிருந்து சிறுபான்மை மக்கள் மனம் நிச்சயம் குளிர்ந்திருக்கும்.
ஏனென்றால், இந்த திடீர் ஞானி, இதற்கு முன்பு பல திமுக அமைச்சர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் இருக்கின்றன. என்னைப் பொருத்தவரை எந்தவொரு ஆன்மிகவாதியும், சனாதனவாதியும் திமுக.,வினருடன் புகைப்படம் எடுப்பதை விரும்பமாட்டார்கள். நான் எடுத்ததில்லை. புகைப்படம் எடுத்ததாலேயே ஒருவனைச் சந்தேகிக்கலாமா என்று கேட்டால்? சத்தியமாகச் சந்தேகிக்கலாம். ஹிந்துதர்மத்தை நேசிப்பவனால் அதை அழிக்க நினைப்பவர்களுடன் பக்கத்தில் நிற்கக்கூட முடியாது என்பதுதான் உண்மை.
என்ன லாபம் ?அடுத்ததாக, இவரைப் பிரபலப்படுத்துவதால், இவர்களுக்கு என்ன லாபம் என்றால்…? அதுதான் மிஷனரிகளின் நூற்றாண்டுத் திட்டம். நாளை இவரை வைத்தே நமது தர்மத்தை அசிங்கப்படுத்துவார்கள், பாலியல் வழக்கில் கைது செய்து ஒரு ஆன்மிகப் பேச்சாளரின் யோக்கியதையைப் பாருங்கள் என்பார்கள். இவரும் அவற்றைப் பெருமையுடன் எதிர்கொள்வார். ஏனென்றால், இவர் காட்டில் மழை பொழிய ஆரம்பித்துவிட்டது. இவரை இன்று சங்கி என்று நினைப்பவர்கள், நாளை உணர்வார்கள். இவ்வாறு ந.முத்துராமலிங்கம் என்பவர் பதிவிட்டுள்ளார்.
இவரது பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், மகாவிஷ்ணு திமுக அமைச்சர்களான அன்பில் மகேஷ், மனோ தங்கராஜ், மா.சுப்பிரமணியன் மற்றும் திமுக.,வுக்கு நெருக்கமாக இருக்கும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி உடனும் நெருக்கமாக எடுத்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.