
ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்லுகின்ற இடம் youtube. இந்த youtube பை வைத்து, எவ்வளவு பேர் பார்க்கிறார்கள்? என்று வியாபார நோக்கத்துடன் இந்த கருத்துக்கள், பிரபகண்டாக்கள் போய்க் கொண்டிருக்கிறது.

ஸ்டாலின் சொன்னார் ,எடப்பாடி சொன்னார் ,திருமாவளவன் பேசினார்,அன்புமணி பேசினார்,சீமான் பேசினார்,இப்படி அவர்கள் பேச்சுக்களையெல்லாம் வைத்து அரசியல் என்று பார்க்க முடியுமா?

காரணம் நேற்று வரை திருமாவளவன் அரசியலில் என்ன பேசினார்? இப்போது என்ன பேசுகிறார் ?இதையெல்லாம் வைத்து அரசியல் என்று எடுத்துக் கொள்ள முடியுமா?

இன்றைய அரசியல் தலைவர்களும் ,அரசியல் கட்சியினரும் நேரத்திற்கு தகுந்தார் போல், சந்தர்ப்பவாதிகளாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு அரசியல் தெரியாத வரை ,இந்த யூட்யூப் களும் ,அரசியல் கட்சியினரும் ,அரசியல் கட்சி தலைவர்களும் ,ஆள்,ஆளுக்கு ஒரு கருத்தை பேசிக் கொண்டு தான் இருப்பார்கள், இருக்கிறார்கள்.

மேலும் ,நடுநிலையான உண்மையான செய்திகளை வெளியிடக்கூடிய பத்திரிகைகளின் யூடியூப் களை ஏற்றுக்கொள்ளலாம். அதில் தவறு இலலை. ஆனால்!
அதில் உண்மை என்ன ?அதுதான் மக்களுக்கு தேவை? மேலும்,அரசியலுக்கு வந்தால்! நேர்மையும் ,ஒழுக்கமும், இருக்க வேண்டும் என்ற ஒரு அடிப்படை அறிவு கூட தெரியாதவர்கள், எல்லாம் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள்.

அடியாள் கூட்டத்தைக் காட்டி, அரசியல் கட்சி என்கிறார்கள். இவர்கள் என்ன சேவை செய்திருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? எதுவும் தேவையில்லை கட்சி கொடி ஒன்னு கையில கொடுத்துவிட்டு, இவர் ஒரு பதவி கொடுப்பார்.

அவன் ஊர்ல, எங்க பொறம்போக்கு இருக்கிறது? எவனை மிரட்டலாம்? பஞ்சாயத்து சொத்துக்களை எப்படி பங்கு போடலாம்?இப்படி அவனுடைய அரசியல்! இவனை எல்லாம் வைத்துக்கொண்டு அரசியல் செய்தால் எந்த மக்களுக்கு தான் நன்மை கிடைக்கும்?

இதே நிலைமைதான் பத்திரிக்கையில், ஐடி கார்டு இருந்தால் நிருபர்கள், அதிலும் கார்ப்பரேட் கட்சி பத்திரிகை நிருபர்கள் மிகப்பெரிய ஜர்னலிஸ்ட் என்ற நினைப்பு, அரசியல் கட்சியினர்களுக்கும் இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. அது ஆளும் கட்சியாக வரும்போது அதிகாரம் வந்து விடுகிறது அல்லவா?

மேலும்,ஆர்.என்.ஐ. இருந்தால்,பத்திரிகைகள்! இப்படியும் பல பத்திரிகைகள். அரசியல் கட்சிக்கு தகுதி இல்லாதவர்கள் எப்படியோ ,அதே போல் தான் பத்திரிகைகளுக்கும் தகுதி இல்லாதவர்கள். இங்கே தான் மக்களுக்கு அரசியல் ஏமாற்றமே! இல்லையென்றால் அரசியலில் ஏமாற்றம் வராது. இப்படிப்பட்ட பத்திரிகைகளும், அரசியல் கட்சிகளும், நாட்டில்இவர்கள் கைகோர்த்து,

எல்லா மக்களுக்கும், இவர்களால் பிரச்சனையும், தொந்தரவுகளும், தான் அதிகம். இதன் மூலம் சட்டப் போராட்டம், சமூக போராட்டம் தொடர்கிறது.இதை நான் சொல்ல வேண்டியதில்லை .காவல்துறையை கேட்டால், அவர்களிடம், இருக்கின்ற எஃப் ஐ ஆர் அது சொல்லிவிடும். ஏனென்றால், இவர்களுடைய ஜாதகம் காவல்துறையில் தான் ,இருக்கிறது.
மேலும், இன்றைய அரசியல்;எப்படியும் பேசுவது அது ஒரு திறமை? எப்படியும் பேசி நடிப்பது ,அது ஒரு அரசியல் மேதை!ஊழல் செய்வது ,அது சாமர்த்தியம்! பல கோடிகளை கொள்ளை அடித்தது சோத்துக்களை பல தலைமுறைகளுக்கு வாங்கி குவிப்பது , இதுதான் அரசியல்!

இதைப் பற்றி எல்லாம் எல்லாம் மக்கள் பேசக்கூடாது .கேள்வி கேட்கக் கூடாது. பத்திரிகைகளும் அதைப் பற்றி எழுதக்கூடாது .இப்படி எல்லாம் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சி தலைவர்களும், வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .

இதைப் பற்றி எந்த பத்திரிகைகள் ?எந்த தொலைக்காட்சிகள் ?மக்களிடம் இந்த உண்மையை சேர்க்கிறார்கள்? மக்கள் யார் வந்தாலும், பரவாயில்லை .எவ்வளவு கொள்ளை அடித்தாலும், பரவாயில்லை. நமக்கு அவர்களால் என்ன லாபம்? இப்படிப்பட்ட சுயநலவாதிகளால், அரசியலில் ஊழல்வாதிகளும், கிரிமினல்களும் ,அதிகரித்திருக்கிறார்கள்.

இவர்கள் என்ன பேசி விடுவார்கள்? என்ன செய்து விடுவார்கள்? எதுவும் செய்ய மாட்டார்கள். ஒரு திருடனுடைய நோக்கம்! ஒரு ஊரிலே இரவு எத்தனை மணிக்கு போனால் வீட்டுக்காரர்கள் தூங்குவார்கள்? ஒரு கொள்ளையடிப்பவன் போனால், எந்த நேரத்தில் தனக்கு சாதகமான நேரம் கொள்ளையடிப்பதற்கு? இப்படி திட்டம் போட்டு தான், இந்த அரசியல் கட்சியினர் பதவிக்கும், பொருளுக்கும், அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் குடும்பத்திற்கு! சம்பாதிப்பதற்கு, இவர்கள் ஏதாவது ஒரு தொழில் பண்ண வேண்டும். அல்லது வேலைக்கு போக வேண்டும். அதை விட்டு,விட்டு அரசியல் தெரியாத முட்டாள்கள் எல்லாம் கட்சி கொடிகளை கையில் கொடுத்து விட்டு, ,அவர்களை தியாகி ஆக்கி ,அரசியல் என்றால் என்ன ?என்ற கூட அரிச்சுவடி கூட தெரியாது.

எவனாவது அரசியல் தெரிஞ்சவன் கேள்வி கேட்டால்! உடனே அவன் மீது சண்டைக்கு வருவார்கள். இதுதான் அவர்களுடைய அரசியல். இதற்கு இவர்களுடைய கட்சித் தலைவர் சப்போர்ட். மக்கள் அரசியலைப் பற்றி தெரிந்து கொள்ளாத வரை ,இந்த அரசியல் கட்சிகள் உங்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கும்.
மேலும், கூட்டத்தைக் காட்டுவதெல்லாம் மாநாடு அல்ல! இதுதான் தமிழ் தேசிய மாநாடா? மாநாட்டிலே திருமாவளவன் பிழைத்தால் போதும் என்று அவர் நிலைமை ஆகிவிட்டது. அரசியலுக்கு அர்த்தம் தெரியாதவர்களை கூட்டி மாநாடு போட்டால்! என்ன நிலைமை? என்று, அதற்கு திருமாவளவன் நடத்திய மாநாடே சான்று .

மேலும்,திருமாவளவனுக்கு ஜாதியை விட்டால் ,வேறு எதுவும் தெரியாது. இவர் தமிழ் தேசியத்தையும் ,தமிழர் எழுச்சி மாநாட்டையும் ,நடத்திக் கொண்டிருக்கிறார். எல்லாம் சினிமா அரசியல் போல, தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. சினிமாவில் கூட இப்படிப்பட்ட காட்சிகள் வருமா? என்று தெரியவில்லை. அதைவிட மோசமான காட்சிகளாகத்தான் இருக்கிறது.
மேலும்,நாங்கள் எழுதுவது எங்களுக்காக அல்ல !உங்களுக்காக தான் இதையும் எழுதுகிறோம். என்றால் அரசியல் எப்படி இருக்க வேண்டும்? என்பது எங்களுக்கு தெரியும். .எப்படியும் அரசியல் என்றால்! அது அரசியல் அல்ல.

மேலும்,ஏ.வா. வேலு மாதிரி ஒரு அமைச்சர் இருக்க முடியுமா? எப்படிப்பட்ட அறிவாளிகள். சட்டமன்றத்திலே பேசுகிறார்கள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருப்பது நம் தவறல்ல, கடவுளுடைய தவறு.

அதே போல் தான் ராமதாஸ் குடும்பம் 40 ஆண்டு காலம் இட ஒதுக்கீடு வாங்கித் தருவதாக சொல்லி அரசியலில் சொத்துக்களை சேர்த்துக் கொண்டார்கள் இதை ஏமாந்தது வன்னியர் சமுதாயமே இன்னும் தர்மபுரி மாவட்டத்தில் இந்த வன்னியர் சமுதாயம் ஏமாந்து கொண்டிருக்கிறது. வன்னியர்களின் சாபம் சும்மா விடுமா?

மேலும்,கடவுள் ஒருவருக்கு பதவியும், அதிகாரத்தையும் கொடுப்பது ,எதற்கு? என்று கூட தெரியாமல், ஐந்து ஆண்டு காலம் திமுகவினர் ஓட்டி இருக்கிறார்கள். அதற்கு சட்டத்தை ஏமாற்றலாம். கடவுளை ஏமாற்ற முடியுமா? தெய்வம் நின்று கொள்ளும்.

எனவே, செய்தித்துறை மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி, உண்மைகளை மக்களிடம் சொல்ல கூடிய பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் குறைந்துவிட்டது. எவ்வளவு பேர் பார்த்தால் பணம் வரும்? அதை நோக்கி தான் இந்த பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும், youtubeகளும் ஓடிக் கொண்டிருக்கிறது.

மேலும்,அரசு இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறது ?ஏனென்றால் பத்திரிகை என்று இந்த youtube கள், மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. பத்திரிக்கை வேறு! இவர்கள் பேசுகின்ற பிரபகண்டாக்களில், எத்தனை உண்மை ?எத்தனை பொய் ?என்பது தெரியாது.
யாருக்காக பேசுகிறார்கள்? எதற்காக பேசுகிறார்கள்? என்பதும் அவர்களை பேச சொன்னவர்களுக்கு தான் தெரியும். இப்படி எல்லாம் இந்த youtube கள் நிலைமை !தமிழ்நாட்டில் போய்க்கொண்டிருக்கிறது.
இதை யார் ?அதிகமாக பார்க்கிறார்கள்.?என்றால் ,அரசியலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று அப்பாவி மக்கள் தான் பார்க்கிறார்கள். விஷயம் தெரிந்தவர்கள், இவர்கள் சொல்லும் கருத்துக்களை ,ஒரு நிமிடத்திலே அவர்கள் புரிந்து கொள்வார்கள். அவர்களை ஏமாற்ற முடியாது.

இந்த அரசியல் புரியாமல், தெரியாமல், வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் படிப்பதற்கு ,அவர்கள் சோம்பேறித்தனம் அதிகமாக இருக்கிறது .கஷ்டப்பட்டால் தான் உண்மை தெரிந்து கொள்ள முடியும். அதனால் ,உண்மை எப்போதும் யாருக்கும் காலில் விழாது. பொய்தான் எத்தனை பேர் காலில் வேண்டுமானாலும் ,அது விழுந்து கொண்டிருக்கும் .அதற்கு கவலையில்லை. இதிலிருந்து உண்மைக்கும் ,பொய்க்கும் வித்தியாசம் புரிந்து இருக்குமா? அது மட்டுமல்ல, போய் வேகமாக பரவும், உண்மை நிதானமாக செயல்படும் .
