ரகசிய கண்காணிப்பு செல்!(Internal Vigilance cell) இது காவல்துறையில்! பொதுமக்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்காக அமைக்கப்பட்டுள்ளதை மக்கள் பயன்படுத்தி கொள்வார்களா?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழக முழுதும் உள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் ,மக்களுக்கு எதிரான குற்றவியல் சம்பவங்கள் நடைபெற்றால், உடனடியாக பொதுமக்கள் ரகசிய கண்காணிப்பு செல்லுக்கு தகவல் கொடுக்கலாம் .

மேலும்,இந்த தகவல் ரகசியமாக காவல்துறையில் பாதுகாக்கப்படும். தவிர,பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பும் கிடைக்கும். காவல்துறை தங்களுடைய பணியை சரியாக செய்யவில்லை என்றால், இது போன்ற புகார்கள் காவல்துறையை சரி செய்ய உதவும் .

அதாவது இந்த புகார் எதற்கு பயன்படுத்த வேண்டும் என்றால்,காவல்துறையினர் அராஜகமான முறையில் நடந்து கொண்டாலோ, பாதிக்கப்பட்ட மக்கள் இந்த விஜிலென்ஸ் செல்லுக்கு புகார் அளிக்கலாம் என்று காவல்துறை டிஜிபி தெரிவித்துள்ளார்.

மேலும்,இதில் ஊழல் புகார்கள், அதிகார துஷ்பிரயோகம், நேர்மையான விசாரணை நடைபெறாவிட்டால், இதற்கு சென்னை மக்கள் 78717 23000 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம். அதுபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் whatsapp எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *