ஜூலை 28, 2024 • Makkal Adhikaram
ஒரு பட்ஜெட் மத்திய அரசாங்கம் ஆனாலும், மாநில அரசாலும் ஏழை நடுத்தர மக்களை வைத்து பட்ஜெட் போட வேண்டும். பணக்காரன் எவ்வளவு விலையானாலும், அவனால் வாங்கி சாப்பிட முடியும் .ஆனால், ஏழை, நடுத்தர மக்கள் அப்படியல்ல,
விலைவாசி உயரும் போது, அவர்கள் உண்மையிலேயே பாதிக்கப்படுகிறார்கள். வெளியே செல்ல முடியாத வாழ்க்கை பிரச்சனைகளை அவர்கள் சந்திக்கிறார்கள். அது மனசாட்சி உள்ள அரசியல்வாதிகள் அந்த காலத்தில் அவர்களுக்காக பட்ஜெட் போட்டார்கள் .ஆனால், இப்போது மனசாட்சி இல்லாத அரசியல்வாதிகள் கார்ப்பரேட்டு களுக்காக பட்ஜெட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கார்ப்பரேட் நல்லா இருந்தால் தான், நாங்கள் அரசாங்கம் நடத்த முடியும் .அப்படி என்றால், இந்த ஏழை நடுத்தர மக்களின் நிலைமை என்ன? எல்லா சுமையும் அவர்கள் தலையிலே வைத்து விடுங்கள். ஒரு சின்ன பொருள் வாங்குவது என்றாலும், அதனுடைய வரி நீங்கள் கூட்டினால், இங்கே கடைகாரன் முதல் கம்பெனி நிர்வாகம் வரை கூட்டி விடுவார்கள். இதைப்பற்றி யாராவது பேசி இருக்கிறார்களா? எந்த பத்திரிக்கையாவது பேசியிருக்கிறதா? தங்கம் குறைந்துவிட்டது. எங்கய்யா குறைந்தது? இன்றும் ஏழை, நடுத்தர மக்களுக்கு அது அனுபவிக்க முடியாத விலையில் தான் இருக்கிறது .மேலும்,
தங்கத்தை மத்திய அரசு வரி குறைத்ததால், தங்கம் குறைந்து விட்டதாக கார்ப்பரேட்டுகள் பேசுவதும், செய்தியை வெளியிடுவதும் தவறு. இன்றுவரை தங்கம் ஏழை, நடுத்தர மக்களுக்கு அதன் விலை கடும் சுமை தான். தங்கத்தை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும். அதேபோல் பெட்ரோல் ,டீசல் விலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் .
பணக்காரர்களின் முதலீடாக இருக்கின்ற தங்கத்தை ஏழை, நடுத்தர மக்களுக்காக சவரன் சுமார் 20,000 ரூபாய் வரை விலை நிர்ணயித்தால் தான் இன்றைய ஏழை, நடுத்தர மக்கள் தங்கத்தை பயன்படுத்த முடியும். அவர்கள் திரும்பிப் பார்க்க கூட முடியாத அளவுக்கு தங்கத்தின் விலை இருந்தது. இப்போது ஒரு 5000 ரூபாய் குறைத்து விட்டதால், தங்கம் குறைந்து விடாது. அதனால், பணக்காரர்கள் மட்டுமே தங்கத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற நிலைமை ஏழை ,நடுத்தர மக்களுக்காக இருக்க வேண்டும்.
அதனால் தங்கத்தை குறைக்க வேண்டும் என்றால், அது ஜிஎஸ்டி வரம்புக்குள் தங்கத்தை கொண்டு வர வேண்டும் .அதேபோல் பெட்ரோல், டீசல் விலையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் ஏழை, நடுத்தர மக்கள் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய பொருட்கள், மக்கள் வாங்குகின்ற அளவுக்கு பெரும் கடும் சுமையாக இருக்காது. தற்போது மளிகை பொருட்கள் முதல் காய்கறிகள் வரை விலை கூடுதலாகவே இருக்கிறது.
ஒரு சாதாரண நடுத்தர குடும்பம் இரண்டு மூன்று பேர் இருந்தால் கூட அவர்களுக்கு மளிகை சாமான் குறைந்தபட்சம் 30,000 இல்லாமல் மாதம் குடும்ப வாழ்க்கை நடத்த முடியாது .அந்த அளவுக்கு கேஸ், பெட்ரோல், டீசல் மளிகை சாமான், இது தவிர உறவினர்களுக்குள் வருகின்ற நல்லது, கெட்டது செலவுகள், எதிர்பாராத செலவுகள்,குழந்தைகள் படிப்பு ,செலவு மருத்துவ செலவு, இவை அனைத்தும் இன்றைய விலை உயர்வு அதிகமாக தான் உள்ளது .
மேலும், விவசாயிகளுக்கு அதற்கேற்ப இடுபொருட்கள் குறைந்த விலைக்கு விற்க வேண்டும் .அவர்களும் நஷ்டப்படக்கூடாது .அவர்களுக்கும் விலை பொருட்களின் விலை, கட்டுபடியாகும் அளவில் இருக்க வேண்டும். இப்படி பட்ஜெட் தயாரிப்பு இருக்க வேண்டும். ஆனால், இந்த பட்ஜெட் தயாரிப்பு பற்றி திமுகவிற்கு பேசுவதற்கு அருகதையே கிடையாது. இதுவரையில் என்ன பட்ஜெட் யாருக்காக இவர்கள் போட்டு இருக்கிறார்கள்?இவர்கள் போடுகிற பட்ஜெட்டுகளுக்கு திமுக கட்சிக்காரர்கள், அவர்களுடைய ஐடி விங் மற்றும் அமைச்சர்கள் இவர்களே சர்டிபிகேட் கொடுத்துக் கொள்ள வேண்டியது தான்.மேலும்,
இவர்களுக்காக கார்ப்பரேட் பத்திரிகை ,தொலைக்காட்சிகள் சர்டிபிகேட் கொடுப்பார்கள். வேறு யாரும் கொடுக்க மாட்டார்கள். எங்களைப் போன்ற ஒரு சாமானிய பத்திரிகைகளுக்கு கூட நீங்கள் பட்ஜெட் போடவில்லை என்றால் நாட்டுக்கு ,நாட்டு மக்களுக்கு எப்படி பட்ஜெட் போடுவீர்கள்? நீங்கள் போடும் பட்ஜெட் கார்ப்பரேட்டுக்கு மட்டும்தான் பட்ஜெட் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள், ஏழை, நடுத்தர மக்களை திரும்பிப் பாருங்கள் .ஏழை நடுத்தர மக்கள் நடத்துகின்ற பத்திரிகைகளை திரும்பிப் பாருங்கள். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று செய்தி துறையை கேளுங்கள்?
செய்தித்துறைக்கு கார்ப்பரேட் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் கொடுக்கின்ற 30% கமிஷனுக்காக எங்களை எல்லாம் நிராகரிக்க கூடாது. மக்களின் வரி பணம் எங்களுக்கும் பங்கு உண்டு. அதற்கான என்ன? விதிமுறைகளை கொண்டு வாருங்கள் .அவர்கள் சொல்லுகிற அத்தனை செய்திகளும் மக்களுக்கு போய் சேர்ந்து விடுகிறதா? மேலும், அவர்கள் சொல்வதுதான் செய்தித்துறையில் சட்டமாக்கப்பட்டுள்ளதா? இதற்குள் இருக்கின்ற மர்ம அரசியல் என்ன? அது மக்களுக்கு புரியாது. ஏன் பத்திரிக்கை துறையில் இருக்கிறவர்களுக்கு கூட இந்த மர்ம அரசியல் புரியாது. புரிந்தவர்கள் குறைந்த சதவீதமாகத் தான் இருப்பார்கள்.
அதனால், சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மத்திய மாநில அரசின் பட்ஜெட்டுகள் இருக்க வேண்டும் .விளம்பர அரசியலும், வியாபார அரசியலும் நடத்திக் கொண்டிருந்தால், அங்கே சமூக நலன் பத்திரிகைகளின் வளர்ச்சிக்கு உதவும் எண்ணம் இருக்காது. அதனா,ல் சமூக நலனை நோக்கி மத்திய மாநில அரசின் பட்ஜெட்டுகள் இருந்தால் ! உங்களுடைய நோக்கம் நிச்சயம் சமூக நலன் பத்திரிகைகள் மீது இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்று இக்கருத்தினை பதிவு செய்கிறேன் .