
மக்களுக்கான ஆட்சி திட்டங்கள் செயல்பாடுகள் எல்லாவற்றிலும் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு விஜய் ஆட்சி இருந்தாலும், அரசியல் கூட்டணி விஷயத்தில், தொடர்ந்து தவறு செய்து வருகிறார்.
இவருக்கு அரசியல் ஆலோசனை சொல்லக்கூடியவர்கள் ,எப்படி சொல்கிறார்கள் ?என்பது தெரியவில்லை. ஆனால், நிச்சயம் இந்தக் கூட்டணி கட்சிகளால் ,விஜய்க்கு பின்னடைவு ஏற்படத்தான் போகிறது.

மேலும்,நேற்று வரை, திமுக பின்னால் நின்று அவர்களை புகழ் பாடிக்கொண்டு இருந்த , திமுகவின் கூட்டணி அரசியல் கட்சிகளான கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் இன்று விஜய்யுடன் சேர்ந்து அவர்களை மறைமுகமாக எதிர்க்கிறார்கள். மேலும்,
இதனால், தமிழ்நாட்டில் இதற்கு எதிரான ஒரு அரசியல் கட்சிகளின் கூட்டணி வலுப்பெற தான் போகிறது. தவிர,அது அடுத்த தேர்தலில் ,தமிழக வெற்றி கழகத்திற்கு கடுமையான அரசியல் கள போட்டியாகத் தான் இருக்கும்.
மேலும், தமிழ்நாட்டில் வருங்கால அரசியல் மிக மிகக் கடுமையான போட்டி அரசியல் களமாக தான் இருக்கப் போகிறது. இப்போதே கூட்டணி ஆட்சி என்றால், இனி தமிழ்நாட்டின் தலையெழுத்து வருங்காலத்தில் ,மெஜாரிட்டி என்ற பேச்சுக்கே இடம் இருக்குமா? என்ற சந்தேகம் தான் எழுந்துள்ளது.

மேலும்,இந்த ஜோதிடர்கள் சொல்வதை வைத்து எதையும் தீர்மானிக்க முடியாது. எல்லாம் கடவுள் போல , மகான்கள் போல,சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நடந்தால் அது நடந்து விட்டது .நடக்கவில்லை என்றால், அதற்கு ஒரு காரணத்தை சொல்லிவிட்டு போய்விடுவார்கள்.
மேலும்,2027 காலகட்டத்தில் அதற்கான கூட்டணி நிச்சயம் ,தமிழ்நாட்டில் ஒருங்கிணைக்கத்தான் போகிறார்கள். அப்போது விஜய்க்கு தெரியும், திருமாவளவனை ஏன் சேர்த்தோம்? என்று அப்போதாவது புரிந்து கொள்வாரா?
