மக்கள் ஆட்சியைப் பற்றி ,அரசியல் கட்சியை பற்றி ,மனதில் தீர்மானிக்காமல் யாரும் இப்போது வாக்களிப்பதில்லை. இதில் நடுத்தர மக்கள், ஏழை எளிய மக்கள் தீர்மானித்து தான் வாக்களிக்கிறார்கள். மேலும்,காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இங்குள்ள அரசியலுக்கும் ,வடமாநிலங்களில் உள்ள அரசியலுக்கும் வேறுபாடு உள்ளது.
இங்கே குறிப்பிட்ட சதவீதம் வாக்காளர்கள் யார் பணம் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்களிப்பார்கள். ஆனால், மற்ற மாநிலங்களில் அது பெரும்பாலும் இல்லை. அங்கு யாருக்கு வாக்களிக்க வேண்டும்? எப்படிப்பட்ட ஆட்சி இருந்தால் நமக்கு நன்மை? என்பதை கருத்தில் கொண்டுதான் இந்த மூன்று மாநில வாக்காளர்கள் வெற்றி. தவிர, இங்கே அரசியல் அடிப்படை அறிவு இல்லாமல் அரசியல் கட்சியினர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் எப்போது அரசியலைப் பற்றி சிந்திக்கிறார்களோ, அப்போதுதான் அவர்களுக்கான ஒரு செயல்பாடு உள்ள அரசியல் வாதிகளை உருவாக்க முடியும் .தற்போது சென்னையில் பெய்து வரும் மழைக்கு வீடுகளில் மழைநீர் தேங்கி இருப்பதால், சமூக வலைதளத்தில் இந்த கவுன்சிலர்களை சென்னையில் சரமாரியாக பொதுமக்கள் வசை பாடுகிறார்கள். இது ஒரு தவறான பேச்சு. காசு கொடுக்கும்போது அவர்களிடம் பணம் வாங்கியது தவறு. பணம் வாங்கிய பிறகு அரசியல் கட்சியினருக்கு அவன் நம் அடிமை என்று நினைத்துக் கொள்கிறார்கள். வாக்களித்தவர்கள் இவர்கள் கொள்ளை அடித்த பணத்தை நமக்கு கொடுத்திருக்கிறார்கள். .இப்படி இரண்டு பேருடைய தவறான கருத்து இன்று சென்னை நீரில் மிதக்கிறது.
தேர்வு செய்யும்போது தகுதியானவர்களை தேர்வு செய்யாமல் பணத்திற்காகவும், அவர்களுடைய குணநலங்களை கூட புரிந்து கொள்ளாமல் வாக்களிக்கும் மக்கள் இருக்கும் வரை, இப்படிப்பட்ட துன்பங்கள், துயரங்கள் மக்கள் அனுபவித்து தான் ஆக வேண்டும். இதுபோல் அவர்கள் எத்தனை முறை பட்டாலும் புத்தி வருமா? என்பது தெரியவில்லை .இனியாவது இந்த மழைக் காலங்களில் படுகின்ற துயரங்கள் பற்றி சிந்திப்பார்களா ? வாக்காளர்கள்.