வருங்கால தலைமுறைகள்! கஞ்சா போதையில் இருந்து காப்பாற்றி, அவர்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்காமல், திமுகவின் பணத்திற்காக மக்கள் வாக்களிக்க போகிறார்களா ? – சமூக நலன் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள்.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் முக்கிய செய்தி

தமிழ்நாட்டில் அடித்தட்டு மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை அவர்களுடைய பிள்ளைகள் கஞ்சா போதைக்கு அடிமையாக இல்லாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியமான கடமை.

இந்தக் கடமையை அந்தப் பிள்ளைகளின் பெற்றோர்கள், கஞ்சா போதைக்கு அடிமையாகாமல் பார்த்துக் கொள்வது தான் ,அவரவர் குடும்பத்திற்கு அவர்களுடைய பங்காளிப்பு என்பது மிகவும் முக்கியமானது .மேலும்,

திமுக ஓட்டுக்காக இன்று ஒவ்வொரு தொகுதியிலும் ,பல நூறு கோடிகளை அக்கட்சி செலவு செய்கிறது. எமது காதுக்கு வந்த தகவல் ,ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் அள்ளி வீசுகிறார்கள். சில இடங்களில் 1500 கூட கொடுப்பதாக தெரிவிக்கிறார்கள். இன்னும் வசதி இருப்பவர்கள் 2000 கூட கொடுப்பார்கள்.

இந்த பணத்தை எல்லாம் வாங்கிக் கொண்டு ,உங்கள் குடும்பத்தை நீங்களே சீரழித்துக் கொள்ளப் போகிறீர்களா? அதனால், மக்கள் ஓட்டுக்கு பணமும், இலவச பொருட்களும் ,அள்ளி, அள்ளி ,கொடுக்கப் போகிறோம் என்று ஆசை வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஐந்து ஆண்டுகளில் இவர்களுடைய தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனை செய்தார்கள்? என்பது எல்லோருக்கும் தெரியும். மேலும், பெண்களுக்கு ஆயிரம் ரூபாய், அதுவும் தகுதி உள்ள குடும்பத்திற்கு தான் கொடுப்போம் என்று கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே பணியில் தான் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் இருக்குமே தவிர,

இந்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்தால், இறுதியில் ஏமாந்து தான் போவார்கள். இந்த மக்களின் வீக்னஸ் என்ன ?என்று தெரிந்து அரசியல் செய்பவர்கள் திமுகவினர். இவர்கள் மக்களை பணத்தால் ,விலைக்கு வாங்கலாம் என்ற ஒரே குறிக்கோளில் செயல்படக்கூடிய கட்சி திமுக.

அதனால், மக்கள் இவர்களுடைய ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். மறுபடியும் பதவியில் அமர்ந்து விட்டால், வாக்களித்த மக்களை மறந்து விடுவார்கள். மீண்டும் நீங்கள் ஐந்தாண்டுகள், அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்று நீங்கள் தேட வேண்டி இருக்கும். இப்போது நூறு முறை உங்களை வந்து பார்ப்பார்கள். பதவி வந்ததும் ஆணவத்தில் ஏறி உட்கார்ந்து கொள்வார்கள். அதற்கு நடந்த சம்பவத்தை மக்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

அது என்ன என்றால், முன்னாள்,திருவள்ளூர் தொகுதியின் திமுக வேட்பாளர் மற்றும் இந்நாள் திருவள்ளூர் தொகுதியின் வேட்பாளர் வி.ஜி. ராஜேந்திரனை திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் சாமி கும்பிடும் போது, இருவரும் சந்தித்துக் கொள்கிறோம். அப்போது அவரிடம் சொன்னேன். நீங்கள் கண்டிப்பாக இந்த முறை ஜெயிப்பீர்கள்.

அதேபோல, ஜெயித்து விட்டார். ஜெயித்த பிறகு இவரை, பத்திரிக்கையாளர் என்ற முறையில் சந்திக்கலாம் என்று அலுவலகத்துக்கு சென்றால், கால் மேலே, கால் போட்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறார். பதவியின் ஆணவம்,ஒரு பத்திரிகையாளரை மதிக்கத் தெரியாத, மரியாதை தெரியாத ,வி.ஜி‌.ராஜேந்திரன் அலுவலகத்திற்கு மீண்டும் ஒருமுறை கூட நான் சென்றதில்லை.

மேலும்,கடந்த சில வருடங்களுக்கு முன் ,ஒரு நிருபர் மூலம் என்னை அழைத்துப் பார்த்தார். நான் போகவே இல்லை. இவர்கள் யார் என்று எங்களை போன்ற சமூக நலன் பத்திரிகையாளர்களுக்கு தெரியும். ஆனால், நாங்கள் காசுக்கு விலை போக மாட்டோம் என்று இவருக்கு தெரியாது. முதலில் மக்களை மதிக்கத் தெரியாதவர்களையும் ,பத்திரிகையாளர்களை மதிக்க தெரியாதவர்களையும், ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருப்பதற்கு தகுதி இல்லை என்பதை வாக்களிக்கும் முன் சிந்தியுங்கள். மேலும்,

ஒரு பத்திரிகையாளருக்கே இவ்வளவு மதிப்பு ,மரியாதை என்றால், வாக்களித்த மக்களுக்கு என்ன? மதிப்பு, மரியாதை இருக்கும் என்பதை நீங்களே ,முடிவு செய்து கொள்ளுங்கள். அரசியல் கட்சிகள் மக்கள் பணம் கொடுத்தால் வாங்கிக் கொண்டு நமக்கு வாக்களிப்பார்கள் வாக்களிக்கிறார்கள் என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இவர்களுடைய தகுதி என்ன என்று தீர்மானியுங்கள்.

இவர்கள் கொடுக்கின்ற ஆயிரம் 500 வைத்து நீங்கள் எத்தனை நாளைக்கு வாழ முடியும் என்பதை சிந்தியுங்கள். இவர்களுக்கு எல்லாம் பத்திரிக்கை பற்றியும் தெரியாது கோடிகளைப் பற்றி தெரிந்தவர்களுக்கு பத்திரிகை என்றால் என்ன என்று தெரியும்? இது பல பத்திரிகையில் வேலை செய்பவர்களுக்கே தெரியாது .இவர்களுக்கு எப்படி தெரியும்?

அதனால், எனக்கு இவர் மரியாதை கொடுக்காவிட்டால் என்னுடைய பத்திரிக்கை நடத்தாமல் இருக்கிறேன் இல்லை திமுகவை நம்பி பத்திரிக்கை நடத்தினேனா? மக்களின் ஆதரவு என்றும் இணையதளத்தில் மக்கள் அதிகாரத்திற்கென்று நம்பிக்கையுன் வாசகர்கள் இருக்கிறார்கள்.

அதுதான் இன்று நான்கு லட்சத்திற்கும் மேலாக வாசகர்கள் உண்மையை ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லக்கூடிய மக்களுக்கான பத்திரிகை என்பது அவர்களுக்கு தெரியும். அப்படிப்பட்ட இடத்தை மக்கள் அதிகாரத்திற்கு மக்கள் மனதில் இடம் கொடுத்திருக்கிறார்கள்.அதேபோல், எமது பத்திரிக்கையும் மக்களிடம் நம்பிக்கை பெற்றுள்ளது.எனவே,

இப்போதும் மக்களைப் பற்றி சிந்திக்க கூடிய ஆட்சியாளர்கள் தான் தேவையே ஒழிய, அவர்களைப் பற்றி சிந்திக்கின்ற ஆட்சியாளர்கள் எந்த காலத்திலும் மக்களுக்கு தேவையில்லை.

அவர்கள் எத்தனை கோடி கொள்ளை அடிக்கலாம் ?எப்படியெல்லாம் கொள்ளை அடிக்கலாம் ?என்று சிந்திப்பது தான் ,அவர்களின் அரசியல். இந்த ஐந்தாண்டு ஸ்டாலின் ஆட்சி எப்படிப்பட்ட ஆட்சி? போதை பொருள், பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கு பாதுகாப்பு இன்மை ,சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, ரவுடிசம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இன்மை, விவசாயிகளுக்கு எந்தவித உதவியும் இன்மை,

ஆனால், எல்லாம் செய்தது போல், செய்துவிட்டது போல் ,வாயிலே சினிமா வசனம் பேசிக் கொண்டிருப்பார்கள். இந்த சினிமா வசன செய்தியையும், யாரோ ஒருவர் எழுதிக் கொடுப்பார்கள்.

அதனால், மக்கள் இந்த ஐந்து ஆண்டு காலம் திமுக ஆட்சியின் கொடுமைகளைப் பற்றி சிந்திக்காமல் ,அவர்கள் கொடுக்கும், ஆயிரம் ரூபாய், இரண்டாயிரம் ரூபாய் இதை வைத்து எத்தனை நாளைக்கு நீங்கள் சாப்பிட போகிறீர்கள்? இதையெல்லாம் வைத்து வாழ முடியாது .நீங்கள் அமைதியாக வாழ வேண்டும் என்றால், நல்ல ஆட்சியாளர்கள், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஆட்சியாளர்கள், தேவை என்பதை உணர்ந்து வாக்களியுங்கள்.

மேலும்,இவர்கள் தேர்தல் வரும் போது மட்டும், உங்களிடத்தில் கெஞ்சுவார்கள். ஒரு முறைக்கு 50 முறை ,காலில் விழுவார்கள். இந்த முறை வாக்களியுங்கள். உங்களுக்கு எல்லாவற்றையும் உங்கள் தலையிலே பண மழையாக கொட்டி காட்டுகிறோம் என்று எல்லாம் தெரிந்த மேதைகள் போல பேசுவார்கள். ஆனால், பேசுவதற்கும், செயல்படுவதற்கும், சம்பந்தமே இருக்காது. அதுதான் திமுக.மேலும்,

தற்போது தமிழ்நாட்டை 10 லட்சம் கோடி கடனில், விட்டிருக்கிறார்கள். மீண்டும் ஆட்சிக்கு வந்தால், எத்தனை கோடி கடனோ! யாருக்குத் தெரியும்? மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் திமுக எத்தனை கோடி கொள்ளை அடிக்கலாம் ?என்று தான் நினைப்பார்கள்.? எனவே,

மக்கள் இதைப் புரிந்து வருங்கால சமுதாயத்தை வாழ வைக்க வேண்டும். மேலும்,உங்கள் பிள்ளைகளை இந்த போதை கலாச்சாரத்தில் இருந்து அவர்களை வாழ வைக்க வேண்டும்‌ நல்ல கல்வி கொடுக்க வேண்டும். வேலை வாய்ப்பை கொடுக்க வேண்டும் .நல்ல ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டும், என்று நினைத்து ஒவ்வொரு பெற்றோர்களும் உங்கள் வாக்கை தீர்மானியுங்கள் .

மேலும்,அதற்காகத்தான் எங்களைப் போன்ற சமூகம் நலன் பத்திரிகைகளும் ,பத்திரிகையாளர்களும் உங்களுக்காக ,உங்கள் நலனுக்காக, உங்கள் எதிர்கால பிள்ளைகளின் நலன்களுக்காக ,இந்த உண்மையை உணர்ந்து உங்களிடம் தெரிவிக்கிறோம். திமுகவின் சூழ்ச்சி வலையில் விழாமல், சிந்தியுங்கள்.

என்றும் மக்கள் பணியில்! மக்கள் அதிகாரம் …!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *