
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை தானிய யோஜனா திட்டத்திற்கு 24 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் ,இது பற்றி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது :

முதற்கட்டமாக 100 மாவட்டங்களில் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் விரைவான வளர்ச்சியை அடைவதே இந்த திட்டத்தின் நோக்கம்.

மேலும் இந்த திட்டம் 2025 – 26 முதல் ஆறாண்டு காலத்திற்கு ஆண்டுக்கு ரூபாய் 24 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் மூலம் விவசாயத்தின் உற்பத்தி திறன், பயிர் பல்வகைப்படுத்துதல் ,நீர்ப்பாசனம் மற்றும் கடன் கிடைக்கும் தன்மையை மேம்படுத்த 11 அமைச்சகங்களின் 36 திட்டங்களை ஒருங்கிணைத்து உறுதி செய்துள்ளது.

மேலும், இந்த திட்டம் நாடு முழுவதும் 17 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள். தவிர, மத்திய மாநில திட்டங்கள் தனியார் துறையுடன் கூட்டாண்மை மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
இதற்காக கள வருகைகள், மதிப்பாய்வுகள், மற்றும் கண்காணிப்புக்காக மத்திய அரசு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். மேலும், இந்த திட்டத்தின் கீழ் குறைந்த உற்பத்தி திறன் மிதமான பயிர் அடர்த்தி மற்றும் சராசரிக்கும் குறைவான கடன் அணுகல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தது ஒரு மாவட்டமாவது தேர்ந்தெடுக்கப்படும்.
இவ்வாறு மத்திய தகவல் தொழில்நுட்ப துறையில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.