அரசியல் கட்சியினர் தமிழ்நாட்டில் ! அரசியல் என்பது பேசி விட்டு போகும் திறமையா ? – அரசியல் என்பது சேவை !அதை நிரூபிக்கும் பாஜக மாநில தலைவர் நாயனார் நாகேந்திரன்.

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

தமிழ்நாட்டில் ஆளும் கட்சி திமுக முதல் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் என்பது திறமையாக மைக்கில் பேசிவிட்டு, பேட்டி கொடுத்துவிட்டு, போவது தான் அரசியல் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த காலத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியும், அரசியல்வாதியும், மைக்கில் பிடித்து பேசிக்கொண்டு அரசியல் செய்ததில்லை . தவிர,அவர்களெல்லாம் மக்களுக்கு சேவைக்காக அரசியல் செய்ய வந்தவர்கள். இப்போது ஒருவரைப் பற்றி ஒருவர் குறை சொல்லிவிட்டு ஊழல் குற்றச்சாட்டுகளை பேசிவிட்டு சமூகத்தின் அவலங்களை பேசிவிட்டு ,கார்ப்பரேட் மீடியாக்களில் அரசியல் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் கூட்டம் தான் தற்போதைய கார்ப்பரேட் அரசியல்வாதிகள். மேலும்,

இந்த கார்ப்பரேட் அரசியல்வாதிகள் ஒரு பக்கம் தங்களுடைய சொத்துக்களை பாதுகாக்க அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். மற்றொரு பக்கம் பதவிக்காக கொள்ளை அடித்து அவர்களை உத்தமர்களாக ஆக்கிக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் மீடியாக்களுக்கு மத்திய, மாநில அரசு சலுகை, விளம்பரங்கள் கொடுத்து வருவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

ஏனென்றால், மக்களின் வரிபணம் சமூக நலன் பயன்பாட்டுக்கு தான் கொடுக்கப்படுகிறது. இந்த பத்திரிகைகளின் வியாபாரம் நலன் பயன்பாட்டுக்கு அது கொடுக்கப்படவில்லை. இவை அத்தனைக்கும் மத்திய, மாநில அரசின் செய்தித்துறை !நீதிமன்றத்தில் பதில் சொல்லியாக வேண்டும் அதற்குள் இவர்கள் மாற்று ஏற்பாடு செய்து விட்டால் தப்பித்தார்கள்.

திமுக அரசு எதற்கு எடுத்தாலும் நீதிமன்றத்தை நாடி தனக்கு சாதகமான தீர்ப்பு வரும் வரை போய்க்கொண்டிருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு சாதகமாக இல்லை என்றால் ,உச்ச நீதிமன்றத்திற்கு ஓடுகிறார்கள். அதற்காக மக்களின் வரிப்பணத்தையும் கோடிக்கணக்கில் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். அதை ஏன் இந்த சமூக நலன் பத்திரிகைகளுக்கு செய்யக்கூடாது?

மேலும், செய்தித் துறை அதிகாரிகள்,தகுதி இல்லாத சமூக நலன் பத்திரிகைகளில் இருக்கக்கூடிய பத்திரிகைகளையும், செய்தியாளர்களையும் ,பிளாக்மெயில் கூட்டத்தையும் வைத்து, இவர்கள் கணக்கு காட்டுகிறார்கள். அப்படிப்பட்ட பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்கத் போராடவில்லை.மேலும்,மக்களிடம் பத்திரிக்கை மற்றும் மக்களிடம் செய்தி வெளியிடக்கூடிய பத்திரிகைகளுக்கு தான் இந்த சலுகை, விளம்பரங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதாவது, தகுதி உள்ள பத்திரிகைகளுக்கு ,தகுதி உள்ள பத்திரிகையாளர்களுக்கு ,இதை கொடுங்கள் என்று தான் எங்களுடைய கோரிக்கை.

இது பற்றிய கடந்த 2023 – 24 சட்டமன்ற கூட்டத்தொடரில்,234 தொகுதிகளில் மேட்டூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சதாசிவம் மட்டும் தான் பத்திரிக்கையாளர்கள் நல வாரியத்தை பற்றி பேசி இருப்பது வரவேற்க வேண்டிய ஒன்று. இந்த செய்தி ஒன் இந்தியா இணையதளத்தில் மட்டும் தான் வெளிவந்துள்ளது.மேலும்,எந்த நோக்கத்திற்காக பத்திரிக்கையாளர்கள் நல வாரியம் ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேற்றப்படவில்லை. அதாவது அரசு அங்கீகார அட்டை வைத்து பத்திரிகையாளர்கள் எப்படி செய்தித்துறை முடிவெடுத்து இருக்கிறது?

தவிர, இந்த தில்லு, முல்லு வேலைகள் ,இன்னும் யாருக்கும் தெரியாது என்று செய்தி துறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதை எந்த அடிப்படையில் அங்கீகாரம் செய்கிறீர்கள்? தகுதியின் அடிப்படையிலா? இல்லை ,திமுகவின் கட்சிக்கும், ஆட்சிக்கும்,அரசியல் ஆதரவாக இருக்கக்கூடிய பத்திரிகைகளுக்கு மட்டுமே, கொடுக்கும் அங்கீகாரமா? தவிர, நடுநிலை பத்திரிகைகளுக்கு செய்தித் துறை எத்தனை கொடுத்திருக்கிறது ? செய்தித் துறையில், மிகப்பெரிய ஊழல்கள் மறைமுகமாக அரங்கேறுகிறது. இதற்கு சிபிஐ விசாரணை வைத்தால், நிச்சயம் வெளிவரும். பத்திரிக்கை துறை சுயநலத்திற்காக நடத்துவது பத்திரிக்கை அல்ல ,அது பத்திரிக்கை துறையும் அல்ல. அரசியல் ஆதாயத்திற்கு நடத்துவது பத்திரிக்கை அல்ல.

மேலும், இந்த ஊழலின் ஒட்டு மொத்த அரசியலுக்கு மறைமுக ஆதரவாக இருப்பது கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள். சரி செய்தி துறையின் சர்குலேஷன் விதிப்படி ஒரு கேள்வியை முன் சர்குலேஷனை மட்டுமே கணக்கில் எடுத்து செயல்படக்கூடிய இந்த செய்தி துறை, இவர்களுக்கு கொடுக்கக்கூடிய கோடிக்கணக்கான சலுகை, விளம்பரங்கள், மூலம் நாட்டில் ஊழலை ஒழித்து விட்டார்களா?

தற்போது,ஊழல் அதிகரித்து இருக்கிறதா? இல்லை குறைத்தாவது இருக்கிறதா ?இதற்கு பதில் சொல்ல முடியுமா? கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள்.

மேலும் ,செய்தித்துறை 50 ஆண்டு காலமாக சர்குலேஷன் சட்டத்தை வைத்து பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கிறதா? இந்த உண்மை பத்திரிக்கை உலகிற்கு தெரிய வேண்டும் என்பதுதான் இச் செய்தியின் முக்கிய நோக்கம்.

இப்படிதான் இந்த ஊழல் அரசியலுக்கு ஒத்து ஊதும் கூட்டமாக கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் இருந்து வருகிறது. இதைப் பற்றி மக்களிடம் சொல்வது மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மட்டும் தான். மக்களுக்கும் இந்த உண்மை இன்னும் அவர்களுக்கு புரியவில்லை. அவர்களும் அரசியல் என்பது ஒருவரைப் பற்றி ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை பேசிவிட்டு போவது தான் அரசியல் என்று நினைத்துக் கொண்டார்கள் .

காரணம் 50 ஆண்டு காலமாக இதைத்தான் இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் செய்து கொண்டிருக்கிறது. திடீரென்று இந்த உண்மை அவர்களுக்கு அவ்வளவு எளிதில் புரியவில்லை. காரணம் ஒரு சில செய்திகள் இன்பர்மேஷன் அதாவது தகவல்கள் அது அரசாங்கத்திடம் இருந்து வெளியில் இருந்தோ , அல்லது வெளியில் இருந்து வருகின்ற சில தகவல்கள் பத்திரிகைகளிலும் ,தொலைக்காட்சிகளிலும் அதை போட்டுவிட்டு ,ஊழல் செய்த அரசியல்வாதிகளை பற்றி பேசிக் கொண்டிருந்தால்! அந்த ,அந்த ஊடகத்தின் போலி அரசியல் பிம்பம் வெளியில் தெரியாது.

இப்படிதான் இந்த போலி அரசியல்வாதிகளும் ,போலி அரசியல் ஊடகப் பின்புலத்தில் கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகளும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

தற்போது பாஜகவில் எத்தனையோ மாநில தலைவர்கள் வந்து போயிருக்கிறார்கள். ஒருவர் கூட மக்களுக்கு அரசியல் என்பது சேவை என்பதை அவர்கள் இதுவரை என்ன என்றுதான் தெரியாமல், அவர்களுடைய சுயநலத்திற்காக கட்சியை பயன்படுத்திக் கொண்டு ,மைக்கில் பேசிவிட்டு, பேட்டி கொடுத்துவிட்டு, இதுதான் அரசியல் என்று அரசியல் செய்து விட்டு போயிருக்கிறார்கள்.

ஆனால், வந்த குறுகிய காலத்தில் தற்போது அங்கே என்ன நடக்கிறது என்பதை கவனித்து தான் இந்த செய்தியை மக்களுக்கு தெரிவிக்கிறேன். பாஜகவில் நாயனார் நாகேந்திரன் மக்களுடைய பிரச்சனைகள், புகார்கள் எது வந்தாலும் ,அது மத்திய அரசியலில் இருந்தாலும் சரி, மாநில அரசியலில் இருந்தாலும் சரி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க உடனடியாக அதாவது ஒரு நாள் கூட கால தாமதம் செய்யாமல் அதை அனுப்பி வைக்கும் ஒரு சேவையை செய்து வருகிறார்.

இதுவரை பாஜகவில் ஒரு மாநில தலைவர் கூட இதை செய்ததில்லை. அதுமட்டுமல்ல, மற்ற நிர்வாகிகளையும், கட்சிப் பணிகளையும், மக்கள் பணிகளையும் செய்ய சொல்லி வருவது அவர்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறதாம். தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட அரசியல் மாற்றம் தான் தேவை.

இதுதான் அரசியல் என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். மைக்ல பேசிவிட்டு, ஜாதி கதைகளை பேசிவிட்டு போவது, அரசியல் அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *