நாட்டில் வலுவான அரசியல் கட்சியாக பிஜேபி இருந்தும் தற்போது ஆளும் 2 மாநில இடைத்தேர்தலில் தோல்வி எதனால்?-பிஜேபி இதை சரி செய்து கொள்ளுமா ?

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

பிஜேபி ஆளும் மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலில் பீகாரில் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கன்ஷியாம் வெற்றி பெற்றுள்ளார். குஜராத்தில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது.

மேலும்,பிஜேபி மக்கள் செல்வாக்கை இழந்து உள்ளதா?பிஜேபி நாட்டில் வலுவான அரசியல் கட்சியாக இருந்தும், இடைத்தேர்தலில் தோல்வி என்பது அக்கட்சியின் பின்னடைவை எடுத்துக்காட்டுகிறது. இது எதனால்?

மக்களின் உணர்வுகளை மதிக்கக்கூடிய தலைவர்கள் அதில் இருப்பதால் தான், இன்று பிஜேபிக்கு ஒரு செல்வாக்கு இருந்து வருகிறது. ஆனால், அதை அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் உண்மை.

மேலும்,இந்த மாநில மாவட்ட நிர்வாகிகள் மக்களை சந்தித்து மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுபவர்களாக இல்லை. இவர்கள் சொந்த பிரச்சனைக்காக அக்காட்சியை பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களாக இருக்கிறார்கள்.

அதனால்தான், பிஜேபி இன்று வரை தமிழ்நாட்டில் வளர முடியவில்லை. தவிர,இதை மோடியும், அமிஷாவும் தெரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு புறம் என்றால், மற்றொருபுறம் மொழி இங்கே முக்கியமாக பார்க்கப்படுகிறது. யாருக்கு இந்தி அரைகுறையாக தெரியுமோ, அவர்கள் தான் இவர்களிடம் பேச முடியும்.

இந்தி தெரியாதவர்கள் ,அவர்களிடம் பேசி பிரயோஜனமில்லை. இந்த இடைவெளி தான் தமிழ்நாட்டில் பிஜேபி வளர முடியாத ஒரு முக்கிய பிரச்சனை. அது மட்டுமல்ல, சாமானிய மக்களின் குரல்களை இவர்கள் மதிப்பதில்லை. கார்ப்பரேட் அரசியலை தான் பிஜேபி முன்னெடுக்கிறது. இது தவறானது.

மேலும்,எல்லாம் இன்ஸ்டாகிராம், யூடியூப், இதிலே பேசிவிட்டு, வீடியோ போட்டுவிட்டு ,தானும் மாவட்ட, மாநில ,நிர்வாகி என்று காட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அதிமுக ,திமுகவை எதிர்த்து அரசியல் செய்திருந்தால், பிஜேபி தான் அடுத்த இடத்திற்கு வந்திருக்க வேண்டும். ஆட்சியைப் பிடித்திருக்க வேண்டும்.

ஆனால் , மோடி ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லி, ஊழல் கட்சிகளோடவே கூட்டணி வைக்கிறார். பிஜேபி விட ஊழலில் மிகப்பெரிய மலையாக இருப்பது காங்கிரஸ்! இது அதைவிட மோசமான கட்சி! கடந்த கால ஊழல்கள் எல்லாம் மக்களால் ஜீரணிக்க முடியாத ஒன்று .

மேலும்,இன்று பிஜேபி தங்களின் குறைகளை சரி செய்து கொள்ளாமல், இனி வருங்காலத்தில் தேர்தலை சந்தித்தால் நிச்சயம் இன்னும் இதைவிட கீழே இறங்க வாய்ப்பு உள்ளது. அதனால், இவர்கள் அலட்சியம் எதிரிக்கு பலம் ஆகிவிடும்.

மேலும்,காங்கிரஸ் கட்சி எக்காலத்திலும் இந்தியாவிற்கு ஆட்சியாளர் இனி தகுதியற்ற ஒரு கட்சி என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். அப்படி என்றால் பிஜேபி தங்களுடைய குறைகளை சரி செய்வது தான் காலத்தின் கட்டாயம் என்பதை உள்துறை அமைச்சர் ,அமித்ஷாவும், மோடியும், புரிந்து கொண்டால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *