
மனித வாழ்க்கை இயற்கையோடு இணைந்தது. இயற்கையை எதிர்த்து மனிதனால் வாழ முடியாது. இயற்கையோடு வாழ்ந்த, மனிதன் சந்தோஷமாக வாழ்ந்தான் . இயற்கையின் கொடூர தாக்குதல்கள் எதுவும் அவன் சந்திக்கவில்லை. அது பற்றிய பயமும் இல்லை .
இப்போது வெளியில் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் ,உள்ளுக்குள் பயம் ஒவ்வொருவருக்கும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இது தவிர,அவனுக்கு உணவும் இயற்கையாக இருந்தது. இப்போது அந்த இயற்கை உணவு என்பது மாறி நஞ்சு உணவாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். குடிநீர் முதல் காற்று வரை சுத்தமானதாக இல்லை

மேலும்,இன்று இயற்கையை எதிர்த்து வாழக்கூடிய மனிதன் சந்தோஷம் , நிம்மதி இழந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான். தமிழ்நாட்டில் இது பற்றி! ஓர் ஆய்வு ! இது குறித்து பல்வேறு தரப்பினர் பல கருத்துக்களை சொல்கிறார்கள் அதில் முக்கியமாக,

மலையை அழித்தால் மரங்கள் மட்டும் அழியவில்லை அந்த மலையில் இருக்கக்கூடிய வனவிலங்குகள் பறவைகள் எல்லாம் அழிகிறது. அந்த உயிரினங்கள் கொடுக்கின்ற சாபங்கள் இவர்களுக்கு பல தலைமுறைகளுக்கு போய் சேரும். மரங்கள் கொடுக்கின்ற சாபங்கள் பல தலைமுறைகளுக்கு போய் சேரும். அதுக்கு உயிர் இல்லையே என்று சொல்வார்கள்.

மரத்திற்கு உயிர் இருக்கிறது. உயிர் இல்லை என்றால் அது காய்ந்து போகும். அதனால், மரத்திற்கும் சக்தி இருக்கிறது. சில சித்தர்கள் மரத்திடம் பேசும் சக்தி உடையவர்கள்.இப்படிப்பட்ட பெருமைக்குரிய ஒரு மலையை அழித்தால், அவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், ஒரு நாளைக்கு நிச்சயம் நடுரோட்டில் நிற்க வைக்கும்.

மேலும், இந்த மலைகளை எல்லாம் அழிக்கவில்லை என்றால் ,இன்று இந்த அளவுக்கு சாலை போட்டு இருக்க முடியாது. வீடுகள் கட்டியிருக்க முடியாது .மேம்பாலம், தரைபாலும் கட்டியிருக்க முடியாது. என்று பல காரணங்கள் சொன்னாலும், இயற்கையை அழித்து, மனிதன் வாழ்ந்ததாக சரித்திரம் இலலை.மேலும்,

நம் எல்லோருக்கும் தெரிந்த ஒருவர் ஓ .பன்னீர்செல்வம் ஒரு மலையை அழித்திருக்கிறார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இவர் மீது குற்றமில்லை என்று சட்டத்தை ஏமாற்றி தப்பித்தாலும், கனிம வள அதிகாரிகள் அதற்கான தண்டனை பெற்றார்கள். இவர் இன்று பெரிய தொழிலதிபர் .
முன்னாள் முதல்வர்,ஆரம்பத்தில் தேனி மாவட்டத்தில் ஒரு டீக்கடைக்காரர். இவ்வளவுதான் ஓ பன்னீர்செல்வம் எப்படி இன்று பல கப்பலுக்கு அதிபர் ஆனார்? சட்டத்தை ஏமாற்றி, மனசாட்சியை ஏமாற்றி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சேர்த்த சொத்துக்கள். இருப்பினும் இதற்கெல்லாம் இவர்களுக்கு, இயற்கை கணக்கு எழுதிக் கொண்டுதான் இருக்கிறது.

இவர்களுக்கு தெரிந்தெல்லாம் இவர்களுடைய கணக்கில், சட்டத்தை ஏமாற்றி வாழ்ந்துக் கொண்டிருப்பது. ஒவ்வொரு ஊழல்வாதிகளும் ,அரசியல் சட்டத்தை ஏமாற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .

அதனால்தான் நீதி தேவதை கண்ணை கட்டிக்கொண்டு தராசு கையில் வைத்துக்கொண்டிருக்கிறார். இதை உணர்ந்த நீதிபதிகள் எத்தனை கோடி கொடுத்தாலும் அவர்களை விலைக்கி வாங்க முடியாது. அப்படி பல நீதிபதிகள் இருந்திருக்கிறார்கள்.

இப்போதும் இருக்கிறார்கள்.அதில் எனக்குத் தெரிந்த ஒருவர் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கற்பக விநாயகம்!எத்தனையோ சூழ்நிலைகள் பல லட்சம் கோடிகளில் அவரை விலை பேச வந்த போதும், விலை போகாமல் !நீதியின் பெருமையை நிலைநாட்டியவர். அதுதான் ஒரு நீதிபதிக்கு தகுதி. அதனால்தான், அவர் ஓய்வு பெற்ற பிறகும் ,இன்று வரை அவர் தகுதியை இழக்காத நீதிபதி. மேலும்,

இந்த ஊழல்வாதிகளை தப்பிக்க வைத்தால்! நீதிபதிகள் அவர்கள் செய்த தண்டனை இவர்களுக்கும், இவர்கள் குடும்பத்திற்கும் வந்து சேரும். இது உண்மை .ஒரு நீதிபதியின் கணவர் எனக்கு நண்பர் .இத்தனைக்கும் அவர் ஒரு அதிகாரி, இதையெல்லாம் பத்திரிகையில் எழுதுகிறேன் என்று அவர் என்னிடம் பேசவில்லை, பரவாயில்லை. ஆனால் ,உண்மை மக்களிடம் போய் சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு இதை எழுதுகிறேன். மேலும்,

ஒரு நீதிபதி தவறான தீர்ப்பு கொடுத்தால், அவர்கள் குடும்பத்திற்கும் ,அந்த வினை போய் சேர்கிறது. அதற்கு விளக்கத்துடன் அவரே பதில் சொன்னார். அது சில வெளிவராத உண்மைகள் .அவர்களுக்குள் தான் ,அது தெரியும். அதை எழுதுவது நாகரீகமாக இருக்காது. மேலும்,
அதேபோல் கனிம வளத்துறையில் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர் நல்ல மனிதர் அவரைப் பற்றி எந்த குறையும் இல்லை தெய்வ பக்தி உள்ளவர் . கனிம வளத் துறையில் சம்பாதித்தார். அது நிற்கவில்லை. எனக்கு வந்த தகவல் அவருடைய மகன் சினிமா படம் எடுத்து அந்த சொத்துக்களை அழித்துவிட்டார் என்று கேள்விப்பட்டேன். இருப்பினும்,

இவர் இயற்கையை அழிக்கவில்லை. ஆனால், அழிப்பதற்கு துணை போயிருப்பார். இயற்கை எந்த அளவுக்கு மனித வாழ்க்கையோடு இருக்கிறது என்பதற்கு இவையெல்லாம் உதாரணம்.
மேலும், ஓ .பன்னீர்செல்வத்திற்கு எப்போது இயற்கையின் தண்டனை ஆரம்பிக்கப் போகிறது? என்பது தெரியவில்லை. அதேபோல், துரைமுருகனுக்கு எப்போது இயற்கை தண்டனையை ஆரம்பிக்க போகிறது?

தவிர,திமுக ஸ்டாலின் குடும்பத்திற்கு எப்போது இயற்கை தண்டனை கொடுக்க ஆரம்பிக்க போகிறது? சட்டத்தை ஏமாற்றினாலும், இப்படிப்பட்டவர்களை இவர்கள் காசுக்கு youtuber கள், பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள், இவர்கள் ஒவ்வொருவரும் இயற்கையின் தண்டனையிலிருந்து ஒருவரும் தப்பிக்க முடியாது.
மேலும்,சட்டத்தை ஏமாற்றினாலும் அதே சட்டம் ஒரு நாளைக்கு இவர்களுக்கு தண்டிக்கிறது. அப்படியே சட்டத்தை ஏமாற்றினாலும் ,நோய் இவர்களை தண்டிக்கிறது. இவர்கள் தவறான வழியில் சேர்த்த சொத்துக்கள், பல வழிகளில் அழிந்து போகும்.

அப்படித்தான் இந்த ஊழல்வாதிகளின் சொத்துக்கள், இவர்கள் வாரிசுகள் வைத்துக் கொண்டு, நிம்மதியாக நிரந்தரமாக வாழ முடியாது. இயற்கையை தொட்டவன் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அதனால்!
ஒவ்வொருநாளும் இவர்களுக்கு இயற்கை கணக்கை எழுதிக் கொண்டிருக்கிறது. இது தவிர, இவர்கள் எல்லாம் பதவி அதிகாரத்தில் இருக்கும் போது, இவர்களைப் பாராட்டி இவர்களுடைய ஊழல்களுக்கு எல்லாம் முட்டு கொடுத்து, எழுதிக் கொண்டிருந்த நிருபர்கள் முதல் பத்திரிக்கை வரை இயற்கையின் கணக்கில் வந்து விடுவார்கள். அந்தக் கணக்கில் இருந்து ஒருவரும், தப்பிக்க முடியாது. அதேபோல்,

,இதில் மக்கள் செய்த தவறும் இருக்கிறது . இவர்களுக்கெல்லாம் வாக்களித்து இவர்களை பதவியில் அமர வைத்த மக்கள் செய்த பாவ செயலுக்கு நிச்சயம் தண்டனை உண்டு அது தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் ஒருவன் இயற்கையை தொட்டால் ,இயற்கையின் பாதிப்புக்கு உடந்தையாக எத்தனை பேர் இருந்தாலும் ,அத்தனை பேருக்கும் அந்த கணக்கு போய் சேருகிறது.

இன்று ஆட்சி மாற்றம் தமிழ்நாட்டில் எப்படி ஏற்பட்டது? இந்த பத்திரிகைகளாலா? இவர்கள் எல்லாம் 90% மீண்டும் திமுக ஆட்சி என்று தான் எழுதிக் கொண்டிருந்தார்கள். அதனால்தான் என்னை பலமுறை என்னுடைய அதிகாரிகள் நண்பர்கள் வட்டம் தொடர்ந்து யார் வருவார்கள் யார் வருவார்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

திமுக நிச்சயம் வராது அடித்து சொன்னேன். இதில் ஒரு வியப்பு என்ன ?என்றால், பல ஜோதிடர்கள் youtubeபில் அடுத்த ஆட்சி! மீண்டும் திமுக தான் என்றார்கள். நிச்சயம் ஆட்சி மாற்றம் உண்டு. அது கூட்டணி ஆட்சியாக தான் இருக்கும் என்று உறுதியாக சொன்னேன்.
ஆனால் ,விஜய் தான் ஆட்சி அமைப்பார் என்று கணிக்க முடியவில்லை. இது அவரே எதிர்பார்க்கவில்லை. இந்த மாற்றத்தை தான் இயற்கையின் மாற்றம் இதுதான் மக்கள் மனதில் ஏற்படுத்திய அரசியல் மாற்றம். இப்போது தெரிகிறதா இயற்கையின் வலிமை?

மேலும், இதில் இருக்கிற மரம் ,செடி ,கொடிகளுக்கு, விலங்குகளுக்கு இவன் என்ன ? தண்ணீர் ஊற்றுகிறானோ ?இல்லை உரம் போடுகிறானா? களை எடுக்கிறானா? எதுவுமே இல்லை .அந்த இயற்கைக்காக மழையே வந்து போகிறது. இயற்கையோடு மனிதர்கள் வாழ்கிறார்கள். அதனால்தான் ஞானிகள், முனிவர்கள் ,யோகிகள், இந்த காடுகளை நோக்கி ,தவம் இருக்க செல்கிறார்கள்.
மேலும்,இயற்கையின் நினைத்தால்! மனிதனை ஒரு நொடியில் அழித்துவிட்டு, போய்விடும் .ஆனால், இயற்கை வாழவைத்த மனிதனை, வாழ வைத்துக் கொண்டிருக்கிற மனிதர்கள், திரும்பிப் பார்க்கத் தெரியாத, நன்றி கெட்ட முட்டாள் கூட்டம் தான், இயற்கையை அழித்து வாழும். எனவே,

இயற்கை நினைத்தால், எல்லாமே ஒரு நொடியில்! இனியாவது இயற்கையை அழிக்காமல், இயற்கையை பாதுகாத்து இயற்கையோடு இணைந்து சந்தோஷமாக வாழ்வோம் இயற்கை நம்மை நிச்சயம் வாழ வைக்கும்.
மேலும்,இயற்கையின் நினைத்தால்! மனிதனை ஒரு நொடியில் அழித்துவிட்டு, போய்விடும் .ஆனால், இயற்கை வாழவைத்த மனிதனை, வாழ வைத்துக் கொண்டிருக்கிற மனிதர்கள், திரும்பிப் பார்க்கத் தெரியாத, நன்றி கெட்ட முட்டாள் கூட்டம் தான், இயற்கையை அழித்து வாழும்.
மேலும்,இயற்கை இல்லை என்றால், நம்மால் வாழ முடியாது .சுத்தமான காற்றை நமக்கு கொடுப்பதே ,இந்த காடுகள் தான், இந்த மலைகள் தான், இதை அழிக்கிறான் என்றால், அவனைவிட கேடுகெட்ட ஒருவன் உலகத்தில் இருக்க முடியாது.
இதை மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும். நீங்கள் எப்படிப்பட்டவர்களுக்கு ஓட்டு போட்டு இருக்கிறீர்கள் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
