
உழைப்பவனுக்கும், நேர்மையாக தொழில் செய்பவர்களுக்கும், நேர்மையாக பணி செய்பவர்களுக்கும், இருக்கக் வேண்டிய அரசியல்!
ஊரையை மாற்றும் அரசியல் கட்சியினர் கட்சிகள் போலிய அரசியல்வாதிகள் முன்னேறியது மக்கள் அரசியல் தெரியாமல் ஏமாந்து இருக்கிறார்களா? இதற்கு பத்திரிகைகளும் மக்களை போட சேர்ந்து ஏமாற்றி இருக்கிறதா? உண்மைகள் என்ன? என்பதை மக்கள் சிந்திப்பார்களா?

இன்றைய அரசியல் கட்சி தலைவர்களும், அரசியல் கட்சியினரும், மக்களை வாழ வைக்க வரவில்லையா? இவர்களை வாழ வைத்துக் கொள்ள வந்திருக்கிறார்களா? விழித்துக் கொள்வது, அவசியம். நாட்டில் பல துறைகளில் போலிகள் அதிகரித்திருக்கிறார்கள்.

அதுபோல, தமிழ்நாட்டின் போலி அரசியல் கட்சிகள் போலி அரசியல்வாதிகள் அதிகரித்து விட்டார்கள். இவர்கள் எல்லாம் யாரை முன்னேற்ற வந்திருக்கிறார்கள்? என்றால், உழைத்து நேர்மையாக வாழ்பவனை உயர்த்துவதற்கு பதிலாக, ஊரை ஏமாற்றுபவனையும், கிரிமினல்களையும், கையிலே கொடி ஒன்றை கொடுத்து, அவனை சமூக போராளியாக்கி, படித்தவனை முட்டாளாக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அவன் தியாகி போல் பேசுவான், இவர்களெல்லாம் யாரை ரோல் மாடலாக பேசுவார்கள் என்றால் காந்தி ,காமராஜர், அம்பேத்கர், பேசுவதற்கும் நடைமுறையில் வாழ்வதற்கும் சம்பந்தமே இருக்காது.சட்டத்தை மதிப்பவன் போல, அப்படியே மக்களுக்காக உயிரை விடுபவர்கள் போல, நடிப்பார்கள் ,இந்த போலிகள்.

இந்த போலிகளை அடையாளம் தெரியாத வரை, தமிழக மக்களுக்கு அரசியல் என்பது இறுதிவரை ஏமாற்றம்தான். இன்றைய இளைஞர்கள் ,உழைத்து வாழ்பவர்கள், நீங்கள் எதை தெரிந்து கொள்கிறீர்களோ, இல்லையோ, அவசியம் இப்படிப்பட்ட போலி அரசியல்வாதிகளையும் ,போலி அரசியல் கட்சிகளையும், அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டில் 50 ஆண்டு காலமாக யார் முன்னேறி இருக்கிறார்கள் ?என்பதை ஒரு ஆய்வு செய்து கணக்கெடுத்தால் ! ஏதோ கட்சி கொடியைப் பிடித்துக் கொண்டு, ஊரை ஏமாற்றும் கூட்டம் தான் முன்னேறி இருக்கிறது.

திமுக அதிமுக இதன் கூட்டணி கட்சியினர் மற்றும் கட்சித் தலைவர்கள் குடும்பங்கள் இவர்கள்தான் சொத்து சேர்த்திருக்கிறார்கள். மீதி எல்லாம் சொத்துக்களை இழந்து இருக்கிறார்கள். ஆய்வுகளை எடுத்துப் பாருங்கள். இவர்களுடைய சொத்து கணக்கு ஆரம்ப கணக்கு என்ன? இப்போது இருக்கக்கூடிய சொத்துக்கணக்கு என்ன?

மக்களுக்கு தலையே வெடித்து விடும். மேலும், தமிழ்நாட்டு மக்களுக்கு அரசியல் தெரியாது என்பதால் கொடி பிடித்தவன் எல்லாம் சமூக போராளியும், தியாகியும், இவர்கள் பேச்சை பார்த்து மயங்கி ,ஏமாந்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இதை உண்மை என்று கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகள் மக்களை ஏமாற்றி முட்டாளாக்கி வருகிறார்கள். திருவள்ளூரில் கார்ப்பரேட் கட்சி பத்திரிக்கையில் வேலை செய்து வந்த ஒரு நிருபர் இன்று 100 கோடிக்கு வர்த்தகம் செய்வதாகவும் ,சொத்துக்கள் பல கோடிகளுக்கு சேர்த்து இருப்பதாகவும் ,பத்திரிகை நிருபர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

மேலும்,கட்சி கூட்டங்களில், இவர்கள் சொல்லுகின்ற பொய்களை எழுதி, மக்களை முட்டாளாக்கிய இந்த நிருபருக்கு அட்வெர்டைசிங் ஏஜென்சி வேற எடுத்து வைத்திருக்கிறாராம். தந்து வட்டி விட்டு ,இன்று 100 கோடி அளவுக்கு சொத்தும், வர்த்தகமும் செய்ய முடியுமா? இப்படி தகுதி இல்லாதவர்கள் அரசியலில் எப்படி முன்னேறுகிறார்கள் என்பதற்கு இதைவிட என்ன சாட்சி வேண்டும்? ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கூட இந்த அளவுக்கு சம்பவத்தை இருப்பார்களா? என்று தெரியவில்லை.

மேலும்,இவர் எல்லா அதிகாரிகளிடமும் ,பெரிய ஜர்னலிஸ்ட் போல் காட்டிக் கொள்வது, செய்திக்கு அர்த்தம் தெரியாது ,பத்திரிக்கைக்கு அர்த்தம் தெரியாது. ஒரு கட்சிக்காரன் போல கட்சி பத்திரிக்கையில் வேலை செய்து கொண்டு, இவர்களுடைய சொத்து எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது? கட்சிக்காரன் திறமை போல, இவருடைய திறமை என்பதை பத்திரிகை உலகம் புரிந்து கொல்லும் என்று நினைக்கிறேன்.

இந்த லட்சணத்தில், இவர் (income tax) இன்கம் டேக்ஸ் கட்டக்கூடிய ஒருவராக வந்திருக்கிறார் என்கிறார்கள் நிருபர்கள் வட்டாரம்.எப்படி வர முடியும்? உண்மையான பத்திரிக்கை நிருபராக இருப்பவர்கள் , வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையாக பத்திரிக்கையை நடத்துபவர்கள் சமூகத்தோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி எல்லாம் பத்திரிக்கை துறையில் போராடிக் கொண்டிருக்கும்போது, போலி எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது? என்பதற்கு இவரும் ஒரு சாட்சி.

மேலும்,இது யாருக்கு புரிகிறதோ, இல்லையோ, திருவள்ளூர் மாவட்ட பத்திரிகை நிருபர்களுக்கு புரியும். குறிப்பிட்ட சில அதிகாரிகளுக்கு புரியும். இவரோடு பயணிக்கின்ற அரசியல் கட்சியினருக்கும் புரியும். இவரோடு தொடர்பில் இருக்கிற கல்லூரி முதலாளிகளுக்கு புரியும்.

இப்படி தான் தமிழ்நாட்டு அரசியலும், பத்திரிக்கையும், உழைப்பவன் முன்னேற முடியாமல், போராடிக் கொண்டிருக்கிறான். மேலும், அரசியலில் சொத்துக்களை சேர்த்து கொழுத்து போய்,எப்படியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏனென்றால் அவர்கள் கையில் அடியாட்களை வைத்துக்கொண்டு அவர்களெல்லாம் சமூகப் போராளிகள் என்று மக்களை ஏமாற்றி ,அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களும் ஏமாந்து உண்மை தெரியாமல் இருக்க கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் இவர்களை முட்டாளாக்கி இப்படிப்பட்ட அரசியல் கட்சியினருடன் கூட்டணி வைத்து பத்திரிக்கை வியாபாரமும் ,தொலைக்காட்சி வியாபாரமும் நடத்துகிறது.

அதனால்தான் உழைப்பவன் மேலே வர முடியவில்லை. ஒருவன் அரசு வேலைக்கு போக வேண்டும் என்றால்! அவன் எவ்வளவு படித்து எத்தனை முறை எழுதி போராடி அதில் வெற்றியோ ,தோல்வியோ , ஏற்பட்டு விடுகிறது. ஆனால் ,உழைக்காமல் வாயிலே பொய்களைப் பேசி, சமூகப் போராளி என்று காட்டிக் கொண்டு, மக்களை முன்னேற்றுவதற்கு பதிலாக இவர்கள் முன்னேறிக் கொள்கிறார்கள். இதுதான் இன்றைய தமிழ்நாட்டின் அரசியல்.

ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்ய கடுமையான சட்டங்கள் நாட்டில் இயற்றாத வரை போலி அரசியலும், போலி அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சியினரையும் ஒழிக்க முடியாது . அரசியல் கட்சியினரின் ஒவ்வொரு ஆண்டும் இவர்களுடைய சொத்து கணக்கு கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வர வேண்டும். அதுவரை உழைக்கும் மக்களுக்கும் நேர்மையாக தொழில் செய்பவர்களுக்கும் அரசியல் என்பது ஏமாற்றமே !

மேலும்,இவர்களுடைய வளர்ச்சியை இந்த போலிகள் பயன்படுத்தி முன்னேறுகிறார்கள் .இதுதான் உண்மை. மக்கள் சிந்திக்கட்டும். மக்களே இதற்கு தீர்ப்பு சொல்லட்டும். உண்மை வெல்லட்டும்.

மேலும்,உண்மையான அரசியல் மாற்றமே! மக்களின் முன்னேற்றம். போலி அரசியல்வாதிகளின் பின்னால் அணிவகுத்தால், அது உழைக்கும் மக்களின் வீழ்ச்சி மட்டுமல்ல, ஜனநாயகத்தின் வீழ்ச்சி! போலி அரசியலுக்கும், உண்மையான அரசியலுக்கும், அர்த்தம் தெரியாத மக்கள் இனி விழித்துக் கொள்வார்களா?
