ஊழல் CM என்று முத்திரை குத்தப்பட்ட அவர்களுக்கு! CJP சிறந்த முதல்வர்கள் என்று சான்றளிக்கிறதா?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

நாட்டில் இப்படித்தான் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டுக் கொண்டு, போலி அரசியல், போலி பத்திரிகைகள், மக்களுக்கு எது உண்மை? எது பொய் ?என்று தெரியாமல் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,திமுகவின் ஊழல் அரசியல்! தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிந்து, இனி இப்படிப்பட்ட ஒரு அரசியல் வரக்கூடாது என்று தான் மாற்றத்தை விரும்பி மக்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்திருக்கிறார்கள்.

மேலும்,இந்த மாற்றம் கூட படித்த இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், சமூக நலன் பத்திரிகைகள், அரசியல் தெரிந்தவர்கள், படித்தவர்கள், பாதிக்கப்பட்ட மக்கள், இவர்கள் மூலம் தான் அரசியல் மாற்றத்தை தமிழ்நாட்டில் உருவாகி உள்ளது.

மேலும்,இப்படிப்பட்ட ஒரு அரசியல் மாற்றத்திற்கு, மக்களால் அளிக்கப்பட்ட சான்று தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் விஜய் !

இவர் தலைமையிலான ஆட்சி ! தமிழ்நாட்டில் தற்போது 100 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருவதில், எந்த ஒரு ஊழல் இன்றி நல்லாட்சி நடைபெற்ற வருகிறது.

ஆனால்! தமிழ்நாட்டில் ஊழலே ஆட்சியாக நடத்திய திமுக வின் முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு சிஜேபி CJP என்ற கட்சி சிறந்த முதல்வர் என்று பட்டமளித்திருக்கிறதா? அல்லது சான்று அளித்திருக்கிறதா? இது பத்திரிகைகளையும் ,அரசியல் தெரிந்தவர்களையும், முட்டாளாக்கும் வேலையா?

மேலும்,கூட்டத்தை காட்டுவது, நாட்டில் சமூக நலன் என்ற பெயரில், போராட்டத்தை கையில் எடுப்பது, இவர்களுடைய நோக்கம் என்ன? இவர்களுடைய அரசியல் கொள்கை என்ன? இதுவரையில் மக்களுக்காக இவர்கள் செய்தது என்ன ?

இவர்கள் யார்? உண்மையான மாணவர்கள் இயக்கமா? இது அத்தனையும், இன்றைய போலி அரசியல்! இதற்குள் ஒலிந்து இருக்கிறது. இது எப்படி இருக்கிறது என்றால்? நாட்டில் !திருடனும், நல்லவன் வேஷம் போடும் கதையாக இன்றைய அரசியல் !இன்றைய பத்திரிக்கை உலகம்!, மக்கள் மத்தியில் , குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

மேலும், இதில்,எது உண்மை? யார் உண்மையான அரசியல்வாதி? யார் போலியான அரசியல்வாதி? அந்த அரசியல்வாதியின் அரசியல் நேர்மை என்ன? இதை ஒரு பத்திரிகைகள் கூட மக்களிடம் எடுத்து சொல்வதில்லை.

தவிர,அரசியல் கட்சிகள் ,அரசியல் கட்சியினர் எவ்வளவு பொய் சொன்னாலும் ,அதை அப்படியே மக்களிடம் சொல்வது, தினசரி பத்திரிகைகள் என்ற பெயரில்! சர்குலேஷன் என்ற பெயரில்! செய்தி துறையும், பத்திரிக்கை துறையும் சுமார் ஒரு 50 ஆண்டு காலமாக ஏமாற்றி வருகிறது.

இதனால் மக்களுக்கு பத்திரிக்கையின் மீதுள்ள நன்மதிப்பு குறைகிறது.மேலும்,உண்மையை மக்களிடம் எடுத்துச் சொல்லக்கூடிய பத்திரிகைகள் எத்தனை ?என்பதை செய்தித் துறை கணக்கெடுக்க வேண்டும்?

தவிர,நோகாமல் யார் என்ன பொய் ?சொன்னாலும் ,அது செய்தி என்றும், அதுவும் சர்குலேஷனில் கணக்கு காட்டி, மக்களுடைய வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடித்தது செய்தி துறையின் தவறான விதிமுறைகளில் ஒன்று.

இப்போது தெரிந்துவிடும் ,இந்த கணக்கெடுத்தால் எத்தனை பத்திரிகைகள்? எத்தனை தொலைக்காட்சிகள்? மக்களுடைய வரிப் பணத்தை இதில் கோடிக்கணக்கில் வீணடித்திருக்கிறார்கள்?

மேலும்,உண்மையை மக்களிடம் சொல்வதற்கு தான் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், பொய்யை சொல்லிவிட்டு, அதுவும் சர்குலேஷனில் கணக்கு காட்டி விடுவீர்கள். அதேபோல் இணையதளத்திலும், அந்த பொய்களை சொல்லி, பார்வையாளர்கள் கணக்கில் கொண்டு வந்து விடுவீர்கள்.

செய்தித் துறையில் !பத்திரிக்கை பற்றி இதற்கு முன் செய்தியை வெளியிட்ட மக்கள் அதிகாரம் பத்திரிக்கை இணையதளத்தில், செய்தியின் தரம் மற்றும் சப்ஜெக்ட் வேல்யூ subject value & articles இதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தான் தொடர்ந்து செய்து துறைக்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கை வலியுறுத்தி வருகிறது .

பொய்களை சொல்லிவிட்டு, மக்களுக்கு தேவையற்ற செய்திகளை திணித்துவிட்டு, சினிமா ,பொழுதுபோக்கு, விளையாட்டு, அது மட்டுமல்ல, நேற்று கூட ஒரு நண்பர் சொல்கிறார் கற்பழிப்பு கொலை கொள்ளை அடுத்தவன் பொண்டாட்டியை இழுத்துக் கொண்டு ஓடி விட்டது இதையெல்லாம் முக்கிய செய்தி என்று பெரிய கார்ப்பரேட் பத்திரிகை என்று சொல்லக்கூடிய ஒரு பத்திரிகை பற்றி மக்களிடம் பேசுபொருளாக இருக்கிறது.

இது எல்லாம் பத்திரிக்கை என்று பத்திரிக்கை துறையை ஏமாற்றும் வேலையா? மேலும் ,போலியான பத்திரிக்கை பிம்பத்தை ஏற்படுத்திவிட்டு, மக்களை ஏமாற்றுவது போல், பத்திரிக்கை துறையை ஏமாற்றுவது, பத்திரிகை என்றால் படிக்காதவர்கள், அதை ஏற்றுக் கொள்வார்கள்.

பத்திரிகை என்றால், படித்தவர்கள் ஒருபோதும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.மேலும், சிஜேபி போன்ற எத்தனை அரசியல் கட்சிகள் எவ்வளவு பொய்யை சொன்னாலும், அது அரசியலா? அதுதான் அரசியல் என்று மக்களை ஏமாற்றுவது தான் பத்திரிகையா?

இங்கேதான்,இவர்கள் தினசரி பத்திரிக்கை என்று அவர்கள் சொல்வதை அப்படியே போட்டு, அங்கேயும் பணம் வாங்கிக் கொள்வார்கள் ,விளம்பரம் வாங்கிக் கொள்வார்கள் ,செய்தி துறையிலும் சர்குலேஷன் காட்டி விளம்பரம் வாங்கிக் கொள்வார்கள், சலுகைகளை வாங்கிக் கொள்பவார்கள் ,

உண்மையை மறைக்க முடியாது.

அப்படி என்றால்! சமூக நலனுக்காக உண்மையை மக்களிடம் எடுத்து சொல்லக்கூடிய பத்திரிகைகள் எத்தனை?என்பதை செய்தித் துறை கணக்கெடுக்க வேண்டும்.

எனவே, இவர்கள்தான் இந்த போலியான அரசியலுக்கு ,பத்திரிக்கை போர்வையில் மறைமுக சப்போர்ட் என்பதை இச் செய்தியின் கருத்து . உண்மை ஒருபோதும் மறைக்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *