இந்தியாவுக்கு எத்தனையோ பிரதமர்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால், மோடி இடத்தை யாராவது பிடிக்க முடியுமா ?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம் விளையாட்டு வெளிநாட்டு-செய்திகள்

இந்தியாவுக்கு வந்த பிரதமர்களில் மோடி இடத்தை யாரும் பிடிக்க முடியாது. அந்த அளவுக்கு இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியவர். அமெரிக்கா, சைனா, பாகிஸ்தான், மற்றும் பல முஸ்லிம் நாடுகளின் அன்னிய நாட்டு தலையீடுகளை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைத்தவர் மோடி.

அவருடைய அரசியல் சாணக்கியத்தனத்தில் ஐந்து சதவீதம் கூட ராகுல் காந்தி இருக்க மாட்டார். ஏன்? காங்கிரஸ் கட்சியிலே, ஒருவர் கூட கிடையாது. அந்த அளவுக்கு இந்த நாட்டின் மீது, இந்த தேசத்தின் மீது பற்று வைத்துள்ளவர் பிரதமர் நரேந்திர மோடி . அந்த அளவுக்கு இந்திய அரசியல் வரலாற்றில் இடம் பெற்ற ஒரு தலைவர் மோடி.

இப்படைப்பட்டவரை கொண்டு போய், நடிகராக இருந்து ,இன்று முதல்வரான விஜய் உடன் சேர்த்து வீடியோ போட்டுக் கொண்டிருப்பது மக்களை அரசியல் தெரியாத முட்டாள்களாக பார்க்கிறார்களா? தமிழ்நாட்டில் விஜய்யை ஏற்றுக் கொள்ளலாம், இந்திய அளவில் பலதரப்பட்ட மொழிகளை பேசக்கூடிய மாநிலங்கள் இருக்கிறது அவர்கள் எல்லாம் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? இதையும் இந்த ஜோதிடர்கள் ஒரு பக்கம்,எப்படி தான் பேசுகிறார்கள் என்று புரியவில்லை.

மேலும்,பிரதமர் என்று வீடியோ போட்டுக் கொண்டிருப்பது, இது எல்லாம் அரசியல் தெரியாதவர்களிடம் ஏமாற்றிக் கொண்டிருக்கும் வேலை. அரசியல் என்ன? என்றால் கூட அரிச்சுவடி படிக்காத மக்களிடம் நீங்கள் எந்த வீடியோவை வேண்டுமானாலும் ,போட்டுக் கொள்ளலாம் .

ஆனால், படித்தவர்களிடம் இந்த வீடியோக்கள் செல்லுபடி ஆகுமா? மோடி வீடியோ போட்டு ஜெயித்தவர் அல்ல ,தன்னுடைய உழைப்பால், திறமையால் ,அரசியலில் ஜெயித்தவர். இந்திய தேசம் என்ற கண்ணோட்டத்தில் அவர் வாழ்ந்து கொண்டிருப்பவர். அதை விட்டு,விட்டு ஜோசியர் பிரைம் மினிஸ்டர் ஆக, ஆக்கி விடுவார் என்றால்! ஜோசியர் என்ன கடவுளா?

கடவுள் நிலையில் இருப்பவர்கள் கூட இப்படிப்பட்ட வார்த்தைகளை சொல்லவில்லை. இருப்பினும் நேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு 76 வது பிறந்தநாள் கொண்டப் பட்டது. அதற்கு தமிழக முதல்வர் விஜயும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவின் பொருளாதாரத்தை கடன் சுமையிலிருந்து மீட்டவர் பிரதமர் நரேந்திர மோடி. இந்த தேசத்தை தேச விரோத சக்திகளிடம் இருந்து, காப்பாற்றியவர் பிரதமர் நரேந்திர மோடி.

உலக அரங்கில் இந்தியாவுக்கு கௌரவத்தையும், மதிப்பையும் ,மரியாதையும், ஒரு தனி இடத்தையும் ஏற்படுத்தியவர் மோடி. இதை வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் சொல்லுவார்கள். இந்தியாவுக்குள் இருக்கிற தேச விரோத சக்திகள் சொல்லாது. பத்திரிகைகள் சொல்லாது.

எனவே, பிரதமர் நரேந்திர மோடியின் இடத்தை அவ்வளவு எளிதில் யாரும் பிடித்து விட முடியாது. தமிழ்நாட்டில் வேண்டுமானால் தகுதியான பிஜேபிக்கு தலைவர்கள் இல்லாமல் இருக்கலாம் .ஆனால், மோடி இந்த தேசத்தின் தலைவர்.

அவர் இருக்கும் வரை, அவர் தான் பிரதமர். வேறு யாரும் கனவு காண முடியாது. மக்கள் அரசியலை படிக்காத வரை, எவ்வளவு பேர் வேண்டுமானாலும், வீடியோ போட்டு ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள் என்பதை புரிந்து கொண்டால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *