
நாட்டில் எஸ் ஐ ஆர் என்பது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வாக்காளரின் வாக்கு தீர்மானிக்கப்படுகின்ற ஒரு முக்கிய பணி.

இதை குறை சொல்லி, குற்றம் சொல்லி, மக்களிடம் பொய்யை பரப்பி ,அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முடியாது .அது கடினமானது. பல கேள்விகள் கேட்கிறார்கள்.

இப்படி எல்லாம் ஒரு தவறான பிரச்சாரத்தை செய்யும் போது, படிக்காத மக்களிடம் அது ஒரு கடினமான வேலை என்று புரிந்து கொள்கிறார்கள். மேலும்,

அதை பூர்த்தி செய்ய பி .எல் .ஓக்கள் இருக்கிறார்கள். மற்றும் உங்கள் வீட்டிலே படித்த பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் பூர்த்தி செய்வார்கள். இல்லையென்றால், சமூக ஆர்வலர்கள் இருக்கிறார்கள், அரசியல் கட்சியினர் இருக்கிறார்கள். இவ்வளவு பெரும் இதற்காக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.மேலும்,
நான் எனக்குத் தெரிந்த அதிகாரிகளிடம் விசாரித்தேன். இந்த எஸ். ஐ .ஆர் படிவத்தில் ஏதாவது அரசியல் கட்சியினர் தில்லுமுல்லு செய்ய முடியுமா?என்று கேட்டேன். அவர் ஒருகாலும் முடியாது. வேண்டுமானால், இந்த தெருவில் இருப்பவர் ,அடுத்த தெருவில் இருந்தால், ஒத்துக் கொள்வார்கள்.

இந்த மாவட்டத்தை விட்டு, அடுத்த மாவட்டத்தில் வசிக்கும் போது, நிச்சயம் அவருடைய வாக்கு ,அந்த இடத்திலிருந்து நீக்கிவிடுவார்கள். மேலும்,அவர் எங்கு வசிக்கிறாரோ அங்கு தான் இவருக்கு வாக்கு உறுதி செய்யப்படும்.

அப்படி என்றால் !இது அத்தனையும் சரியான முறையில், ஒருவருடைய வாக்கு! தேர்தல் ஆணையம் தீர்மானிக்கிறது என்பதை உறுதி செய்தேன். ஆனால், கூலிக்கு பேசுகிற யூடியூபர்கள், பேஸ்புக், வாட்ஸ் அப், சமூக வலைதளத்தில் செய்திகளை போட்டுக்கொண்டு, ஒரு சில பத்திரிகைகளில் SIR பற்றி தவறான கருத்துக்களை மக்களிடம் சொல்லி ,அவர்களை மனதளவில் ஒரு தளர்வை ஏற்படுத்துகிறார்கள்.

அதனால், பொதுமக்கள் youtube ,பேஸ்புக், வாட்ஸ் அப், instagram போன்ற சமூக வலைதளங்களில் வருகின்ற செய்திகளை பார்த்து பயப்பட வேண்டாம். தேர்தல் ஆணையம் சரியான முறையில் உங்கள் வாக்கை தீர்மானிக்கிறது. இனி அதிகாரிகள் கள்ள ஓட்டுக்கு இடம் இல்லை என்கிறார்கள்.