எத்தனையோ சித்தர்களுக்கு ஆண்டுதோறும் அவர்கள் ஜீவசமாதி அடைந்த இடத்தில் குருபூஜை நடைபெறும் .ஆனால், கணக்கன்பட்டி ஐயா ஸ்ரீ பழனிசாமி பெருமானின் குருபூஜை போல் நடந்திருக்குமா? என்று நினைக்கத் தோன்றும் அளவிற்கு கணக்கன்பட்டியில் பழனிசாமி அய்யாவின் குருபூஜை நடைபெற்றது .
எங்க பார்த்தாலும் வண்ண விளக்குகள், அய்யாவின் ஜீவ சமாதியை சுற்றி அலங்கரித்து இருந்தது .மக்களுக்கு மூன்று வேளை உணவும், தரமான முறையில் ருசித்து சாப்பிடும் அளவில் அன்னதானம் இருந்தது. ஐயா எப்படி விருப்பப்படுவாரோ, அந்த அளவிற்கு சிறப்பான முறையில் கணக்கன்பட்டி பழனிசாமி அய்யாவின் அறக்கட்டளை தலைவர் மோகன் மற்றும் முத்துசாமி இந்த நிகழ்ச்சியை பெரிய அளவில், மக்கள் பிரமிக்கும் அளவில் நடத்தி காட்டியுள்ளனர்.
அதாவது சாப்பாட்டு விஷயத்திலும், சுத்தமாக பாதுகாப்பு விஷயத்திலும், சரியான முறையில் திருப்பதியில் எந்த அளவிற்கு இருக்குமோ, அந்த அளவிற்கு கணக்கன்பட்டியில் செய்து காட்டியுள்ளனர். சுமார் 2 லட்சம் பேர் அளவுக்கு இந்த குரு பூஜையில் கலந்து கொண்டு, வந்த அவருடைய பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் தரிசனம் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுவே அய்யாவின் மனதை மிகவும் சந்தோஷம் ஆக்கி இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது .
ஏனென்றால், ஐயா யாரிடமும் எதையும் வாங்குபவர் அல்ல. ஐயா எல்லோருக்கும் படி அளப்பவர் .கொடுப்பவர் .ஞானத்தை கொடுக்கும் வள்ளலாகவும், பொருளைக் கொடுக்கும் வள்ளலாகவும் ,மகிழ்ச்சியும், நிறைவையும் கொடுக்கும் வள்ளலாகவும் இருப்பவர் கணக்கன்பட்டி ஸ்ரீ பழனிசாமி ஐயா. இவருடைய பெருமை, சிறப்பை ஏட்டில் எழுத முடியாதது.
எத்தனையோ பேருக்கு வாழ்வளித்த வள்ளல். எளியவர்கள் முதல் வசதியான வாழ்க்கையில் இருப்பவர்கள் வரை போற்றுகின்ற, வணங்குகின்ற தெய்வமாக சற்குரு ஸ்ரீ பழனிசாமி கணக்கன்பட்டி எம்பெருமான் அவரைப் பற்றி இந்த நிகழ்ச்சியில் சொற்பொழிவு நடத்த வந்த டாக்டர்கள் பேசும்போது, அவர்கள் தெரிவித்தார்கள். மருத்துவர்கள் என்றால் உயிரைக் காப்பாற்றுபவர்கள். அப்படிப்பட்ட மருத்துவர்களுக்கு இவர் உயிரை காப்பாற்றி ,வாழ வைத்துள்ளார். அவர்களுடைய கார் விபத்து நடைபெற்ற போது, காருக்கு தான் சேதமே தவிர, அவர்களின் உயிருக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.
இப்படிப்பட்ட பேரருள், பெருங்கருணை ,எந்த தெய்வமும் அவர்களுடைய கர்ம வினையை ஏற்றுக் கொள்ளாது .
ஐயா அவருடைய குருபூஜையில் யாரெல்லாம் பங்கேற்க முடியுமோ, அவர்களை மட்டும் தான் அவர் வரவழைத்துள்ளார். ஐயாவுக்கு பதவி, பொருள், பெருமை, அந்தஸ்து எதுவும் காட்டி ஐயாவை நெருங்க முடியாது. அன்பும், அவரே கதி என்று இருப்பவர்களும் மட்டுமே அய்யாவை நெருங்க முடியும். அதுதான் எனக்கு உணர்த்திருப்பதாக தெரிகிறது .நான் ஐயாவைப் பற்றி அப்போது கேள்விப்பட்டதில்லை.
ஒருமுறை பழனிக்கு வந்திருந்தபோது, இங்கே யாராவது சித்தர்கள் இருக்கிறார்களா? என்று ஒருவரை கேட்டேன். அவர் சொன்னார் ஒரு வயசானவர் கோணி பைகளை காட்டிக் கொண்டு, காலில் சுற்றிக்கொண்டு ஒருவர் பழனிக்கு போகும் வழியில் இருக்கிறார் என்று சொன்னார்கள். அந்த ஞாபகம் தான் எனக்கு இருக்கிறது. நானும் ஐயாவை அவர் இருக்கும்போது, சென்று பார்த்ததில்லை. ஆனால், அவர் ஜீவசமாதி அடைந்த பிறகு, இப்படிப்பட்ட ஒரு சிறப்பான மகானை நாம் பார்க்க முடியாமல் போய்விட்டது .அப்போது ஒரு முறையாவது அவரை பார்க்க வாய்ப்பு கிடைத்திருந்தால், எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். அந்த வாய்ப்பு நமக்கு கிடைக்கவில்லை என்பது எனக்குள் ஒரு வருத்தம்.
ஆனால் ,ஐயா எனக்கு எப்படி தான் தற்போது இந்த உறவை ஏற்படுத்தினார்? என்பது எனக்குள் ஒரு ஆச்சரியம் தான். அவருடைய உருவத்தை போட்டோவில் பார்த்ததிலிருந்து ஒரு ஈர்ப்பு மனதில் ஏற்பட்டது. அதன் பிறகு அவரைப் பற்றி நிறைய படிக்க வேண்டும் .நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது .அதன் பிறகு தான் ஐயாவின் நிலை, எந்த சித்தருக்கும் கிடைக்காத ஒன்று .அவர்தான் பழனி முருகனாக இருந்திருப்பார் என்ற கருத்து என்னுடைய எண்ணத் தேடல்களில் தெரிந்தது .
இப்படிப்பட்ட மகான் வாழ்ந்திருக்கும்போது,இப்படிப்பட்ட ஒரு தெய்வம் தோன்றி மக்களோடு, மக்களாக வாழ்ந்து இருக்கும் போது, அந்த தெய்வத்தின் தரிசனம் நமக்கு கிடைக்கவில்லை என்பதுதான் இன்று வரை எனக்குள் ஒரு வருத்தம். இவர் தெய்வமாக இருந்தும், அந்த தெய்வத்தை இவர் வாழ்ந்த காலத்தில் அலட்சியமாக பார்த்தவர்கள் தான் அதிகம். ஒருவேளை உணவு கூட ஐயாவுக்கு கொடுக்காதவர்கள் இன்று அய்யாவின் விசுவாசி என்று கூறிக் கொள்கிறார்களாம் . கடவுளுக்கு யாரும் படி அளக்க முடியாது. கடவுள்தான் எல்லோருக்கும் பணி எடுக்க முடியும்.
அதனால் தான் கணக்கன்பட்டி ஐயா, எத்தனையோ பேரு அவர்களின் வினைகளை மூட்டையாக தன் தோளில் சுமந்த ஒரே தெய்வம் இவர்தான். அப்படி என்றால் எவ்வளவு வலியும், வேதனையும் இவர் அனுபவித்து இருப்பார்? அப்படி இருந்தும் கூட ,இவர் யார் என்பதே கடைசிவரை இந்த உலகத்திற்கு வெளி காட்டாமலே வாழ்ந்து, ஜீவசமாதி அடைந்த மிகப்பெரிய ஒரு மகான். இவரை நம்பி வந்தவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் ஏமாற்றம் அடைந்ததில்லை. இவரை நம்பி வணங்குபவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் ஏற்றம் அடையாமல் இருந்ததில்லை .இவரை நம்பி வாழ்பவர்கள் அவர்களுடன் ஐயா வாழ்வது அவர்களுக்கு உணர்த்தாமல் இருந்ததில்லை.
இதுதான் கணக்கன்பட்டி ஸ்ரீ பனி சாமி அய்யாவின் மிகப்பெரிய சிறப்பு.
ஐய்யாவின் அற்புதங்கள் மேலும் தொடரும்