காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியை அவார்டுக்கு (Award) தேர்வு செய்தது அதிகாரிகள் குழுவா? அல்லது அமைச்சர் பெரிய கருப்பனா? – கூட்டுறவாளர்கள்…!

அரசியல் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம்

திமுக ஆட்சி !ஊழல் ஆட்சியாக போய்க் கொண்டிருப்பதால், நன்றாக ஊழல் செய்த அதிகாரிகளாக பார்த்து, தேர்வு செய்கிறார்களா?அப்படிதான் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் ,காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் ஏ கே சிவமலரை தேர்வு செய்து இருக்கிறார் என்று கூட்டுறவுவாளர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும்,

ஏற்கனவே, வங்கியில் பல ஊழல் குற்றச்சாட்டுகள் சிவமலர் மீது விசாரணை போய்க்கொண்டிருக்கும் போது, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் சிவமலரை தேர்வு செய்து, அவருக்கு வங்கியின் சார்பாக அவார்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் பல மத்திய கூட்டுறவு வங்கிகள் முதலிடத்தில் இருந்தாலும், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு எப்படி அவார்டு கொடுக்கப்பட்டுள்ளது? என்பது கூட்டுறவுத் துறையிலும், கூட்டுறவாளர்கள் மத்தியிலும் , இப்பிரச்சனை சர்ச்சையாக, எழுப்பப்பட்டுள்ளது.

இதைப் பற்றி கூட்டுறவுத் துறையில் மாநில அளவில் எந்தெந்த மாவட்டம் வங்கி கடன் கொடுத்ததில் முதலிடத்தில் உள்ளது? வங்கியின் Profit and Loss account ல், எந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதலிடம் பெற்றுள்ளது? அதேபோல் லோன் ரெக்கவரியில் எந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதலிடத்தில் உள்ளது? மேலும்,

பயிர் கடன் கொடுக்கப்பட்டுள்ளது ?மற்றும் லோன் ஓவர் டியூ (Loan overdue) எந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி குறைந்த ஓவர் டியு வைத்திருக்கிறது? இதையெல்லாம் பார்த்து தான் ஒரு வங்கிக்கு அவார்ட் கொடுக்க வேண்டும். அதற்கு தகுதியே இல்லாத காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் எப்படி காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியை தேர்வு செய்தார்?

அதற்குத் தகுதி இல்லாத ஒரு மேலாண்மை இயக்குனருக்கு எப்படி அவார்டு கொடுக்கப்பட்டுள்ளது? திமுகவில் தகுதியின் அடிப்படையில் எதுவும் செய்ய மாட்டார்கள். தகுதி இல்லாதவர்களுக்கு தான் முதலிடம் கொடுப்பார்களா? ஏனென்றால்! திமுக அரசு ஊழலில் திளைக்கின்ற அரசாக இருப்பதால், எவ்வளவு ஊழல் வங்கியில் நடைபெற்றாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் அவார்டு கொடுக்கின்ற ஆட்சி திமுக ஆட்சி தானா?

மேலும், 23 மாவட்டங்களில் எந்தெந்த மாவட்டத்தில் முதலிடம் எந்த மத்திய கூட்டுறவு வங்கி இருக்கிறது? என்பதை தமிழக மக்களுக்கும், கூட்டுறவு துறையினருக்கும், கூட்டுறவாளர்களுக்கும், இச்செய்தியின் மூலம் அதன் தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றாவது காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி அதற்கு தகுதியை உள்ளதா? எதன் அடிப்படையில் அமைச்சர் பெரிய கருப்பன், மற்றும் இதை தேர்வு செய்த கூட்டுறவு அதிகாரிகள் குழு தேர்வு செய்தார்கள்? அவர்களால், இதற்கு பதில் தர முடியுமா? இது பற்றி விரிவான தரவுகள் மக்களின் பார்வைக்கு !

ஒரு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியினை 

 சிறந்த வங்கியாக 

தேர்தெடுக்க பல மதிப்பீடுகள் செய்யப்படுகிறது.

அதாவது,

நிதி நிலைத்தன்மை,  நிதி மேலாண்மை,வங்கியின் 

வணிக செயல்திறன், செலவுக் கட்டுப்பாடு 

தொடர்பான அளவீடுகள்  மற்றும் 

லாபம்,செயல்படாத சொத்துக்களின் நிலை (NPA) மற்றும் CRAR ஆகியவை கணக்கிடப்படுகின்றன.

மேலும் ஆளுமை மற்றும் தலைமைத்துவம்,

புதிய வணிக உத்திகள், முக்கிய புதிய  திட்டங்கள் அதில் 

வங்கியின் தலைமையின் செயல்திறன் 

கணக்கில் 

எடுத்துக்கொள்ளப்படுகிறது.இந்திய 

ரிசர்வ் வங்கி 

(RBI) மற்றும் தேசிய வேளாண்மை மற்றும் 

கிராமப்புற மேம்பாட்டு வங்கி (NABARD) போன்ற 

ஒழுங்குமுறை அமைப்புகளின் வழிகாட்டுதல்கள் 

மற்றும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது மிக 

முக்கிய பகுதியாக கணக்கிடப்படுகிறது.

கணினிமயமாக்கல் மற்றும் டிஜிட்டல் வங்கி 

சேவைகள் போன்ற நவீன வங்கி 

தொழில்நுட்பங்களை

 செயல்படுத்துவது பெரும்பாலும் செயல்திறன் 

மற்றும் வாடிக்கையாளர் சேவையை 

மேம்படுத்துவதில் 

ஒரு முக்கிய காரணியாக செயல்படுவதை 

மதிப்பிடப் படுகிறது.மேலும், 

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் 

மேலாண்மை 

இயக்குனர்  எ. கே. சிவமலர் , அவரது 

பணிக்காலத்தில் 04.07.2024 அன்று ஒரே 

தேதியில் 14.14கோடிக்கு தளவாடம் மற்றும் 

வாகனம் வாங்கியதாக நடைபெற்ற  ஊழல் 

குறித்து

விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், சம்பந்தப்பட்டவர் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் 

என எதிர்பார்த்த நிலையில், செய்தியை 

வெளியிட்ட நான்,மற்றும் 

எனது பத்திரிக்கை இணைந்து ஒரு 

கோடி தரவேண்டுமென மேலாண்மை இயக்குனர் 

சிவமலர்,தனது ஊழலை மறைக்க,

 நட்டஈடு நோட்டீஸ் அனுப்பியது

திமுக ஆட்சி! ஊழலை கண்டுகொள்ளாத ஆட்சி

என்பதை நிரூபிக்கிறது.மேலும்,

சமீபத்தில் நடைபெற்ற 72வது கூட்டுறவு 

 வாரவிழாவில் 2024-25 ஆண்டிற்க்கான 

மாநிலத்திலேயே சிறந்த மத்திய கூட்டுறவு 

வங்கிக்கான விருது வழங்க பட்டுள்ளது குறித்து 

கூட்டுறவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏனெனில் மேலும் பல முறைகேடுகள் இவர் 

உத்தரவின் பேரில் நடைபெறுவதாக தகவல்கள் 

வெளியாகிவரும் நிலையில், எந்த விசாரணைக்கும்  

உத்திரவிடப்பவில்லை என்பதும் , மாறாக விருது

 கொடுத்து கௌரவிப்பது,திமுக அரசில் ஊழல்

அதிகாரிக்க தான் முதலிடமும் முக்கியத்துவமும்

கொடுப்பார்களா? மேலும்,

2024-25 இல் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு 

வங்கிக்கு,

RBI 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் 

சட்டத்தின் பிரிவு 47 எ (1)(C) உடன் இணைந்த 

பிரிவு 46 (4) (i) மற்றும் பிரிவு 56 இன் கீழ் 

அபராதம் 13-06-2024 

அன்று ரூ.50000,விதிக்கப்பட்டது.

NABARDவங்கியின் 

வழிகாட்டுதல்களை கடைபிடிக்காதது குறித்து  

மேற்பார்வை மற்றும் ஆய்வில் 

கண்டுபிடிக்கப்பட்டது. 

தொடர்பாக, RBI -இன் காரணத்தை கூற அறிவுறுத்தி 

அனுப்பப்பட்ட அறிக்கைக்கு, வங்கியின் விசாரணையின் 

போது,பெறப்பட்ட வாய்மொழி சமர்ப்பிப்புகள் ஆகியவற்றை பரிசீலனை செய்தபோது,வங்கி,

மோசடிகளை தாமதமாக NABARDPORTAL லில் 

ஏற்றியது நிரூபிக்கப்பட்டதால், அபராதம் 

விதிக்கப்பட்டுள்ளது.இது தவிர,RBI மற்றும் NABARD

ஆகியவைகளின் நெறிமுறைகளையும் 

வழிகாட்டுதல்களையும் பின்பற்றாத ஒரு வங்கி, எப்படி சிறந்த வங்கியாக தேர்வு செய்ய முடியும்?.

மேலும்,

TNSCB  மற்றும் NAFSCOB (National Fedaration of State Cooperative Bank) அறிக்கையில் உள்ள புள்ளிவிபரங்களின் 

படி, (கோடிகளில்)லாபம் ஈட்டியதில், முதல் மூன்று 

இடங்களை  முறையே, விழுப்புரம் 57.66,

சென்னை 43.13,ராமநாதபுரம் 37.81 

பிடித்திருக்கின்றன.இதில் காஞ்சிபுரம் 34.94 

மட்டுமே லாபம் ஈட்டியுள்ளது.

தவிர,

முதலீடுகள் செய்வதில் முதல் மூன்று 

இடங்களை  முறையே,

சென்னை 1262,96,சேலம் 1174.8,ஈரோடு 1156.13 

 பிடித்திருக்கின்றன.

இதில் காஞ்சிபுரம் 806.47 மட்டுமே முதலீடு செய்துள்ளது.

மேலும்,வைப்பு  சேகரித்தலில் முதல் மூன்று இடங்களை  

முறையே, சேலம் 4145.73, திருச்சி3493.49,  சென்னை 3376.66  

பிடித்திருக்கின்றன. இதில் காஞ்சிபுரம் 3043.68 மட்டுமே 

வாய்ப்பு பெற்றுள்ளது.மேலும்,கடன் வழங்களில் 

முதல் மூன்று இடங்களை  முறையே,

திருச்சி5786.42,  சேலம் 5027.98 , காஞ்சிபுரம் 

3920.04,பிடித்திருக்கின்றன.

இதில் மட்டுமே காஞ்சிபுரம் 3 ஆம் இடத்தை பிடித்துள்ளது.

மேலும்,Reserve, Shares போன்ற அனைத்து பிரிவுகளிலும் 

ஒன்றில் கூட  முதல் மூன்று  இடத்தை காஞ்சிபுரம் 

பிடிக்கவில்லை. மேலும் பயிர் கடன் வழங்களில் 

அதிகபட்சமாக சேலம் ரூ.1668.41 கோடி 

வழங்கியுள்ள

நிலையில், காஞ்சிபுரம் 502.63 கோடி மட்டுமே 

வழங்கி மிகவும் 

பின்தங்கியுள்ளது.மேலும்,

 புதிய விவசாயிகளுக்கு கடன் வழங்களில், 

தருமபுரி 18381 பேருக்கு வழங்கி முதல் 

இடத்தில் உள்ளது. காஞ்சிபுரம் 5860 பேருக்கு 

மட்டுமே வழங்கி கடைசி 

வரிசையில் உள்ளது. கேட்பு வசூல் நிலுவையில் 

1% தவணை கடந்த கடன்களுடன், ஈரோடு 

முதல் இடத்திலும், 1.26% கொண்டு விருதுநகர் 

2 ஆம் இடத்திலும், 1.65% கொண்டு,சேலம் 3

வைத்த இடத்திலும்  உள்ளது.

காஞ்சிபுரம்  6.97% தவணை கடந்த கடன்கள் 

கொண்டு பட்டியலில் பின்தங்கி உள்ளது.

விவசாய 

நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 

புதிதாக  கடன் வழங்கியதில் விழுப்புரம் 136.86 % ,

திருச்சி 83.71 % மற்றும் திருவண்ணாமலை 78.14 % வழங்கி,

முதல் மூன்று இடத்தை பிடிக்கின்றன.

அதிலும் காஞ்சிபுரம் 36.10% உடன் கடைசியில் உள்ளது.

 இந்நிலையில் மாநிலத்திலேயே சிறந்த 

கூட்டுறவு 

வங்கிக்கான விருது காஞ்சிபுரம் மத்திய 

கூட்டுறவு 

வங்கிக்கு கொடுக்க, அதை வங்கியின் 

மேலாண்மை 

இயக்குனர்  எ.கே. சிவமலர் பெறுகிறார்.எ.கே. சிவமலர் புரிந்த முறைகேடு சம்பந்தமாக  

Directorate of Vigilance and Anti- Corruption (DVAC)  

யில் No. 16699/2024 /COOP/km Dated 31-12-2024- இன் 

படி பதிவிட்டு , விசாரணை நிலுவையில் உள்ளது.

அதனால் கொடுக்கப்பட்ட விருதை உடனடியாக 

திரும்ப பெறப்படவேண்டும்

என்பது உண்மையான கூட்டுறவாளர்களின் 

வேண்டுகோள்.

மேலும்,

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நிர்வாகம் தெரியாது என்பது இது ஒரு முக்கிய செய்தி என்பதை மக்கள் தெரிந்து கொள்ளலாம். இவர்களுக்கு பேச தான் தெரியும். அதுவும் யாராவது எழுதி கொடுத்தால் பேசுவார்.வேறு எதுவும் தெரியாது என்பதை நிர்வாகத்தின் செயல்பாடுகள் தெரிவிக்கிறது.மேலும்,

இந்த கூட்டுறவுத் துறையில் என்ன நடக்கிறது? என்பது கூட தெரியாமல் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தேர்வு செய்து அதற்கு அவார்ட் கொடுக்கிறார்கள்.ஊழல் ஆட்சிக்கு! ஊழல் அதிகாரிகள் தான் முக்கியமாக தெரிவார்களா? அது மட்டுமல்ல,

சமீபத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாற்று திறனாளிகளுக்கு காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி, அதிக கடன் வழங்கியதாக இவர் விருது வழங்கியுள்ளார். விருதுக்காவது அர்த்தம் தெரியுமா? – முதல்வரே! என்கிறார்கள் கூட்டுறவுவாளர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *