
நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகளை நம்பி அரசியலில் அதுவும் அவர்களை கூட்டணியில் வைத்து ஆட்சி செய்வது என்பது மிகப் பெரிய சவால்களாக தான் இருக்கும். இவர்களை வைத்து கூட்டணி ஆட்சி அமைக்கும் போது மக்கள் அதிகாரம் இணையதளத்தில் இச் செய்தியை வெளியிட்டுள்ளது. தற்போது அதுதான் நடந்துள்ளது. மேலும்,

இந்த இடைத்தேர்தல் முடிந்த பிறகு சிபிஐ ,சிபிஎம் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், தமிழக வெற்றி கழகத்திற்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற போவதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி,அதற்கான உத்தரவும் தலைமையிடமிருந்து பெற்றுவிட்டதாக இங்குள்ள இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் பொறுப்பாளர்களான சண்முகம் மற்றும் வீரபாண்டியன் தெரிவித்துள்ளனர்.
மேலும்,இவர்கள் திமுக ஊழல் அரசியல் செய்யும்போது, வாய் திறக்கவில்லை. ஐந்தாண்டு காலம் இவர்களுடைய திமுக கூட்டணியில் ஊழலுக்கு ஒத்துழைத்தார்கள்.
இப்போது ஊழலற்ற ஆட்சியை விஜய் கொடுக்கும் போதே, ஆதரவை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளனர். இதிலிருந்து இவர்கள் அறிக்கை விடும் அரசியல் கட்சிகள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அது மட்டுமல்ல, இவர்களுடைய போராட்ட அறிவிப்புக்கள் எல்லாமே வெளிவேஷம் தான். உண்மையான போராட்டம் என்பதெல்லாம் கிடையாது.மேலும், மக்களுக்காக, கொள்கைக்காக, இருக்கின்ற அரசியல் கட்சிகள் ,தமிழ்நாட்டில் விரல்விட்டு கூட எண்ண முடியாது. அந்த அளவுக்கு மிக மிக குறைந்துவிட்டது .
அதனால், மக்கள் இந்த அரசியல் கட்சிகள் இடம் இருந்து மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இந்த அரசியல் கட்சிகளில் இருப்பவர்கள் சுய நலமானவர்கள், என்பதை எப்போது தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள்?