தமிழ்நாட்டின் அரசியல் ! அரசியல் தெரியாதவர்களை வைத்து, அரசியல் கட்சிகள்!கொள்ளையடிப்பது தான் அரசியலா ?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

தமிழ்நாட்டின் அரசியலில் குறைந்தபட்ச கல்வி தகுதி இல்லாதவர்கள் எல்லாம் கூட, இன்று தானும் அரசியல் கட்சி என்று ஏதோ ஒரு கட்சி பெயரைச் சொல்லிக் கொண்டு ,கட்சியின் பின் புலத்தில் வருமானத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களின் குறைந்தபட்ச அரசியல் அடிப்படை தகுதி என்ன? எதன் அடிப்படையில் இவர்களை கட்சியின் நிர்வாகிகளாக ஒவ்வொரு அரசியல் கட்சியும் இவர்களை அங்கீகரித்துள்ளது? அரசியல் கட்சிக்கு அர்த்தம் தெரியாதவர்கள் எல்லாம் கட்சி நிர்வாகிகள் , ஒருவேளை இந்த அடிப்படை அரசியல் தகுதி இல்லாதவர்களை வைத்து தான் நாம் பெரிய அளவில் ஊழல் செய்ய முடியும் என்பதை உணர்ந்து ஒவ்வொரு கட்சியின் தலைமையும் அவ்வாறு இவர்களை தீர்மானிக்கிறார்களா?

இது எல்லாம் தெரியாமல் கார்ப்பரேட் பத்திரிகை ,தொலைக்காட்சிகள் அவர்களை கட்சிக்காரர்கள் என்று அந்த கட்சி சொன்னால் ,அதை அப்படியே எழுதிக் கொண்டு ,சொல்லிவிட்டு போவது, பத்திரிக்கையில் வேலையா? இல்லை,மக்களை ஏமாற்றும் வேலையா? இவர்களெல்லாம் கட்சியில் சீட்டு வாங்கி எம்எல்ஏ, மந்திரி, சேர்மன், கவுன்சிலர், தலைவர், இப்படி பதவிகளுக்கு அர்த்தம் தெரியாமல் அனுபவித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருக்கிறார்கள் .மேலும்,

இதன் விளைவு மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு இல்லாததால், வாக்களித்த மக்கள் இவர்களிடம் அடிமையாக்கப்படுகிறார்கள் . கார்ப்பரேட் தொலைக்காட்சியின் மைக்குகளில், இவர்கள் நடப்பதற்கும் பேசுவதற்கும் சம்பந்தமில்லாமல் தன்னை பெரிய ஆளாக பல கட்சிகளில் நினைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் தற்போதைய இரண்டாம் கட்ட தலைவர்களான, திருமாவளவன், சீமான், ராமதாஸ், வைகோ ,அன்புமணி ,பிரேமலதா, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், ராகுல் காந்தி, பா .சிதம்பரம் , பிஜேபியில் எச்ச ராஜா, அண்ணாமலை ,செல்வப் பெருந்தகை, அமைச்சர் சேகர்பாபு , முதல் அனைத்து மந்திரிகளும் மைக்கை பிடித்தால், இவர்களுடைய தகுதி ,தரம் தெரியாமல் தான் பேசுகிறார்கள். இது அரசியல் தெரிந்தவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.

அரசியல் தெரியாதவர்கள் என்றால் நீங்கள் என்ன பேசினாலும், உண்மை என்று நினைத்துக் கொள்வார்கள். அரசியல் தெரிந்தவர்கள் அப்படி நினைக்க முடியாது. காரணம் ! நீங்கள் செய்தது என்ன? நீங்கள் பேசுவது என்ன? இது இரண்டுக்கும் இடைவெளி அதிக தூரம் உள்ளது. இது தவிர, கட்சி மேடைகளில், ஒரு கட்சியினர், மற்றொரு கட்சியை திட்டுவதும், குறை சொல்வதும் ,ராஜதந்திர அரசியல் ! மக்களுக்கு என்ன சொன்னால், எது உண்மை என்று புரியப்போகிறது? இவன் சொல்வது உண்மையா? அல்லது அவன் சொல்வது உண்மையா? கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் எது உண்மை என்று கூட போடாது. ரெண்டு பேர் சொல்வதையும் ,போட்டு அது நன்றாக வியாபாரம் செய்யும்.

அதிலும் தமிழ்நாட்டில் இந்த அரசியல் கூத்து, அரசியல் தெரியாத மக்களிடம் ஏதோ தியாகிகள் போல, காட்டிக் கொண்டு பேசிக் கொண்டு இருக்கிறார்கள். இது எல்லா கட்சிகளிலும் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், தமிழக மக்களிடையே,

அரசியல் கட்சிகளைப் பற்றிய விழிப்புணர்வை, தமிழ்நாட்டு கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் 50 ஆண்டு காலமாக ஏற்படுத்தவில்லை. அந்தக் கட்சியினரை வைத்து அரசியல் வியாபாரம், பத்திரிகையில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் .மேலும்,

இவர்கள் ஒரு போலியான பத்திரிக்கை பிம்பத்தையும், போலியான அரசியல் பிம்பத்தையும், ஏற்படுத்தி ,இந்த அரசியல் கொள்ளைகளுக்கும், ஊழல்களுக்கும், மறைமுக ஆதரவில் இருந்து வருகிறார்கள்.

அதனால் தான், ஊரில் எரும மாடு ,மேய்த்து விட்டு, வந்தவர்களுக்கு எல்லாம் கட்சிப் பதவி, அவர்களுக்கு அடிப்படை அரசியல் தகுதியோ, கல்வி அறிவோ எதுவும் தேவை இல்லை . அவர்களை கட்சித் தொண்டர்களாக திமுக, அதிமுக முதல் அனைத்து கட்சிகளும் ஆக்கி விடுகிறார்கள். அவர்களது தேவை ஒரு கூட்டம், இந்தக் கூட்டம், மனசாட்சி இல்லாமல் பேசுகின்ற கூட்டமாக மாறி ,எப்படியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கட்சிக் கூட்டத்திற்கும் ஆட்களை பணம் கொடுத்து ,கூட்டி வருவதற்கு இந்த கூட்டங்கள் அந்தந்த கட்சி தலைமைக்கு தேவைப்படுகிறது. இவர்களுடைய அரசியல் அடிப்படை தகுதி என்ன?

அது ,கட்சி கொடி ஒன்று கையிலே கொடுத்துவிட்டு, வெள்ளையாக வேஷ்டி, சட்டை இருந்தால், உடம்பு கனமாக இருந்தால் போதும், இதுதான் அரசியல் கட்சியினரின் அடிப்படை தகுதியா? மக்கள் அவர்கள் உடலைப் பார்த்து, பணத்தை நீட்டினாள், அரசியல் தெரியாதவர்கள் வாக்களித்து விடுவார்கள்.

அதனால் தான் இவர்களுக்கு நன்றி என்றால், எதுவுமே தெரியாதவர்கள். மக்கள் வாக்களித்ததற்கு என்ன செய்ய வேண்டும்? என்று தெரியாமல், இந்த நன்றி கெட்ட கூட்டம் தனக்கும், தன் கட்சியினருக்கும், செய்து கொள்கிறது. அதாவது , தங்களை வளப் படுத்திக் கொள்வதற்கு தான் அரசியல் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

இப்படிப்பட்டவர்களிடம், தொடர்ந்து அரசியல் தெரியாதவர்கள், ஏமாந்து அவர்களுக்கு வாக்களித்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய அரசியல் தகுதி என்ன? நகரத்திலும், ஊரிலும், இவர்களுடைய அரசியல் தகுதி பேனர்களில் முகத்தை மக்கள் பார்த்துக் கொள்ளுங்கள், ஆங்காங்கே காட்டிக் கொண்டிருப்பார்கள். இதுதான் அரசியல் தகுதியா? ஒருவருடைய அரசியல் தகுதி அந்தப் பகுதியில் அவரைப் பற்றி மக்கள் நல்ல முறையில் பேச வேண்டும். அப்படி எத்தனை பேர்? அரசியல் கட்சிகளில் ,எந்தெந்த கட்சிகளில் இருக்கிறார்கள் ? இதைப் பற்றி எல்லாம் வாக்களிக்கும் மக்களுக்கு தெரியாது.மேலும்,

அந்த கட்சியினருக்கு என்ன தகுதி இருக்கிறது? என்பதைப் பற்றி யாரும் சிந்தித்து வாக்களிக்க மாட்டார்கள். அந்த கட்சியை பார்த்தும், இவர்களுடைய உடலை பார்த்தும் ,வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் ?என்றால், இந்த கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகள் எல்லாம் இவர்களை அரசியல்வாதியாக முன்னிலைப்படுத்தியது தான், இந்த அப்பாவி மக்கள் தொடர்ந்து ஏமாறும் அரசியல்!

இது நான்கவது தூண் என்று மக்களுடைய வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் சலுகை, விளம்பரங்களை அனுபவித்துக் கொண்டு ,மக்களை ஏமாற்றும் கூட்டத்திற்கு இது தான் சமூக நலனா? இல்லை சமூக துரோகமா ? மேலும் ,தெரியாதவனை ஏமாற்றுவது திறமையா? இதற்கு தான் கோடிக்கணக்கில் சலுகை, விளம்பரமா? இது மிகப்பெரிய தவறு. இதற்கெல்லாம் இந்த பத்திரிகை ,தொலைக்காட்சிகள் மற்றும் மத்திய மாநில அரசின் செய்தித் துறைகள் காலத்தின் கட்டாயத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும்.மேலும்,

நாங்கள் தான் பெரிய பத்திரிக்கை, நாங்கள்தான் பெரிய தொலைக்காட்சி, நாட்டில் ஊழல் செய்தால், அதை எவ்வளவு என்று போட்டுக் காட்டுவதற்கு பெரிய தொலைக்காட்சி, பெரிய பத்திரிக்கை,. இதைவிட ஒரு பெரிய கேவலம் என்னவென்றால், ஊழல்வாதிகளை , அரசியலுக்கு தகுதியற்றவர்களை, நல்லவர்களாக ,வல்லவர்களாக தொடர்ந்து காட்டியவர்களும் ,எழுதியவர்களும் இவர்கள் தான்.

அதனால், இவர்களுடைய தொலைக்காட்சி விவாதத்தில், பங்கேற்று பெரிய உத்தமர்களாக பேசிவிட்டு போனால், அது போதும், அதுதான் இந்த ஊழல்வாதிகளுக்கும், அரசியலுக்கு தகுதியற்றவர்களுக்கும், சர்டிபிகேட். இதுதான் போலியான பத்திரிகை அரசியல் பிம்பம். இது அப்பாவி மக்களுக்கு இந்த உண்மைகள் தெரியாது.இவர்கள் உத்தமர்களாக பேசுவதை நம்புகிறார்கள்.

அதன் விளைவு அரசியலில் அந்த மக்களுக்கான அதிகாரம் புறக்கணிக்கப்படுகிறது. நேற்று கூட பாதிக்கப் பட்ட ஒரு ஏழை பெண் காஞ்சிபுரத்திலிருந்து அருந்ததி சமூகத்தில் இருந்து எனக்கு போன் செய்தார்கள். என்ன என்று கேட்டேன்?. சார் ,பத்திரிக்கையில் போட வேண்டும். விஷயம் என்ன என்று கேட்கும் போது, இந்தப் பெண் கணவனால் கைவிடப்பட்டு, கணவனால்,கையும் அந்த பெண் வெட்டிருக்கிறார். அதற்கு காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். நாலு நாட்கள் சம்பந்தப்பட்ட நபரை ஜெயிலில் அடைத்ததாக தகவல்.

பிறகு, இப்பொழுது நன்றாக ஜாலியாக அவர் உலா வந்து கொண்டிருக்கிறாராம். அது மட்டுமல்ல, இந்த பெண்ணின் கணவர் வேறு, ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள், இவர்கள் எல்லாம் நிற்கதியாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஏழைகளுக்கு காவல்துறையில் புகார் கொடுத்தாலும்,அவர்களுக்கு அங்கே நீதி கிடைக்கவில்லை. நீதிமன்றத்திற்கு செல்வதற்கும் பண வசதி இல்லை. அப்போது தான் நான் சொன்னேன் இலவச சட்ட உதவி மையத்தை அணுகுங்கள். நான் பத்திரிக்கையில் போடுவதால் உங்களுக்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்குமா ?அல்லது உங்களுடைய பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா ?என்பது 100% என்னால் சொல்ல முடியாது.

இருப்பினும், அவர்கள் யார்? என்று இதுவரை எனக்கு தெரியாது. நம்மால் முடிந்த ஒரு வழி காட்டுவோம் என்று சொன்னேன். மேலும்,இதை எதற்கு சொல்ல வேண்டும் என்றால்! ஏழை மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் , இன்று வரை,அவர்கள் வாழ்க்கையில் பாதிக்கப்படும் போது, வாக்களிக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டும், சமூகத்தில் அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகிறது.

வறுமை கோட்டுக்குள் வாழ்கின்ற இந்த மக்கள் நீதியை தேடினாலும் ,நிதியிலாமல் நீதி கிடைப்பதில்லை. இதைதான் காலத்திற்கு ஏற்ப சட்டங்கள் எளிமையாக்கப்பட வேண்டும்.தவிர, எந்த பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், நாட்டு மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டுமோ, அது பணத்திற்காக வியாபாரம் ஆக்கப்பட்டால் ,உண்மை இருக்காது. அதில் போலியும் ,பொய்யும் தான் ஒளிந்திருக்கும் . இதைதான் மக்கள் அதிகாரம் பத்திரிக்கை தொடர்ந்து காலத்திற்கு ஏற்ப பத்திரிக்கை துறையில் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்று சொல்லி வருகிறது.

ஆனால், மத்திய ,மாநில அரசின் செய்தித் துறைக்கு இது இன்னும் புரியவில்லையா? அல்லது ஆட்சியாளர்களின் சுயநலத்திற்காக இதை தடுக்கிறார்களா? பத்திரிக்கை துறையிலே இப்படிப்பட்ட அரசியல் என்றால், நாட்டு மக்களுக்கு என்ன சமூக நீதி கிடைக்கும்? மேலும், இந்த பத்திரிக்கை,தொலைக்காட்சிகளுக்கு அந்த காலத்தில் போட்டிகள் அதிகம் இல்லை. தவிர,

இந்த காலத்தில் போலியும், அரசியல் பின்புலத்தில் இருந்து கொண்டு, தகுதியான பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகைகளோடு போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. அதனால், மக்களுக்கும் பயனில்லை. செய்தித் துறைக்கும் பயன் இல்லை. இதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய காரணம் என்ன? காரணம்! செய்தி துறையே! பத்திரிக்கை துறையின் தகுதியை நிர்ணயிக்காமல், அரசியல் இருப்பதால், அது அரசியல் அதிகார மையமாக ஆக்கப்பட்டுள்ளது. இங்கே பத்திரிக்கை சுதந்திரம், தகுதி ,எதுவுமே இல்லை.

மேலும்,இங்கே ஒருவருடைய பத்திரிகையின் தகுதி என்ன? என்பதை தீர்மானிப்பதை விட , அரசியல் கட்சி பின் புலமே தீர்மானிக்கிறது. என்றால், செய்தித் துறையில்,அரசின் அதிகாரிகளா? இல்லை,ஆட்சியாளர்களின் எடுபிடிகளா? மேலும்,

நீங்கள் என்ன செய்தாலும் அதை பாராட்டி மக்களிடம் செய்திகளை போட தவறுகளை சுட்டிக் காட்டக் கூடாது. குறிப்பாக ஒரு திமுக கட்சியின் கரை வேஷ்டி கட்டாமல் செல்லக்கூடிய ஒருவன் !பத்திரிக்கையாளன் போர்வையில் போனால் ,அவனுக்கு சகல விதமான சலுகை ,விளம்பரங்களும் கிடைக்கும். ஆனால், தகுதி உள்ள பத்திரிக்கையாளனாக , பத்திரிக்கையாக போனால் , எந்த சலுகை, விளம்பரங்களும் கிடைக்காது. அதற்கு ஒரே வார்த்தை மாத பத்திரிக்கைக்கு சலுகை ,விளம்பரங்கள் இல்லை .தினசரி பத்திரிக்கைகளுக்கு தான் கொடுப்போம். இப்படி பத்திரிகையின் தகுதி, தரம் ,பிரிக்க தெரியாத செய்தி துறை ,தினசரி மாதம் ,வாரம் , மாதம் இருமுறை என்று பிரித்து வைத்து பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் ஏமாற்றத்தின் அடிப்படை, மக்களுக்கு இங்கிருந்து தான் எழுப்பப்படுகிறது. இதன் பின் வளைவு!

நாட்டில் உண்மைகள், தகுதிகள் ,உரிமைகள் ,எவ்வாறு இந்த அரசியல் அதிகாரம் முதல் எல்லாவற்றிலும் ,ஒவ்வொரு தகுதியான மனிதர்களுக்கு கிடைக்காமல் மறுக்கப்படுகிறது ?என்பதற்கு இதைவிட என்ன உதாரணம் வேண்டும் ?

நானும் 10 ஆண்டுகளாக இந்த தகுதியான மக்கள் அதிகாரம் பத்திரிகை மூலம் குரல் கொடுத்து போராடி வருகிறேன். ஆனால், ,அரசியல் அதிகாரம் அதை பற்றி கவலைப்படவில்லை. இருப்பினும் ,மக்களின் ஆதரவு, மக்கள் அதிகாரத்திற்கு பெருகிக் கொண்டுதான் இருக்கிறது. அதுவே வெற்றி தான்.

இந்தப் போராட்டத்தில் இருந்து மக்கள் அதிகாரம் நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.மேலும், மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இல்லை என்றால், அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும். அதனால் தான் அரசியல் கட்சிகள் ,உங்களைத் தேடி, உங்கள் வீட்டு கதவை தட்டும் போது, அந்தக் கட்சியினர் மற்றும் அந்த கட்சி சமூகத்திற்கும் ,நாட்டுக்கும் என்ன செய்தது? இவர்கள் என்ன செய்தார்கள்? இவர்களுடைய தகுதி என்ன? இவர்கள் அரசியல் கட்சிக்கு எடுபிடிகளா? இல்லை ,கூலிக்கு கூவ வந்தவர்களா?

இல்லை ,அந்த கட்சி பெயரை சொல்லி பந்தா காட்டுபவர்களா? இவர்கள் எதற்கு வந்திருக்கிறார்கள்? என்ன செய்திருக்கிறார்கள்? சமூகத்தில் இவர்களுக்கான மதிப்பு ,மரியாதை என்ன? இது எல்லாவற்றையும் வாக்களிக்கும் மக்கள் அவசியம் சிந்திக்க வேண்டும். வெறும் ஜாதியை மட்டும் சிந்திக்காதீர்கள்.

மேலும், நாட்டின் அரசியல் என்பது படித்த ஐஏஎஸ் ,ஐபிஎஸ் அதிகாரிகளில் நல்ல உள்ளங்கள், சமூக உணர்வு, அர்ப்பணிப்பு உள்ளவர்கள், சமுதாயப் பற்றாளர்கள் ,அவர்களில் நேர்மையானவர்கள் வர வேண்டும். நேர்மையான பத்திரிகையாளர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அரசியல் கட்சிகாரர்களுக்கு ஜால்ரா போட்டவர்கள் எல்லாம் பத்திரிகயாளனாக ஆகி விட முடியாது.

இவர்களுக்கு எல்லாம் இந்த அரசியல் அடிப்படை தகுதி இருக்கிறது. ஆனால், கட்சிக்கு போஸ்டர் ஒட்டியவர்கள் ,சண்டை போட்டு ,மண்டையை உடைத்துக் கொண்டவர்கள், ரவுடிகள், கட்சிக்காக கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போனவர்கள் ,மோசடி பேர்வழிகள், பிராடுகள், கிரிமினல்கள் ,ஊழல்வாதிகள், அரசியல் வியாபாரிகள் ,இவர்களெல்லாம் வந்து மக்களுக்கு என்ன செய்வார்கள்? எதுவும் செய்ய மாட்டார்கள்.

நம் நாடு படத்தில் எம்ஜிஆர் கதை வசனத்தில் ஒரு சீன் வரும் அதில் நீங்கள் எல்லாம் மக்களுக்காக சேவை செய்ய வந்தவர்கள் என்று நான் பார்த்தேன் .ஆனால், உங்கள் சுயநலத்திற்காக நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்பார் எம்ஜிஆர். அது போல தான், இவர்களுடைய அரசியல் எந்த அரசியல் கட்சியை எடுத்துக் கொண்டாலும், அதில் எத்தனை பேர் தகுதியானவர்கள் ?தேர்வார்கள்?

அந்தந்த தொகுதியில் இவர்கள் செய்த மக்களின் சேவை என்ன? இதை முதலில் மக்கள் பட்டியல் போடுங்கள். வாக்களிப்பதற்கும் தகுதி வேண்டும். வேட்பாளராக நிற்பதற்கும் தகுதி வேண்டும். ஒரு கட்சியை வழிநடத்துவதற்கும் தகுதி வேண்டும். இப்படி தகுதி என்பது அரசியலில் மிக, மிக முக்கியத்துவமானது.

இங்கே என்ன நினைக்கிறார்கள் என்றால், ஆடு, மாடு மேய்ப்பவன் எல்லாம் கட்சியில் சேர்ந்து விட்டு, நமக்கும் ஒரு மந்திரி பதவி கிடைக்கும். நமக்கும் ஒரு ஊராட்சி மன்ற தலைவர் பதவி கிடைக்கும். இப்படி பதவிக்காக எல்லா தரப்பினரும் அலைந்து கொண்டிருக்கும் கூட்டங்களாக இருக்கிறார்கள் . இவர்களுக்கு வாக்களிப்பார்கள் முட்டாளாக இருக்க வேண்டும் . அப்போதுதான் இவர்கள் கூட்டமாக போய், வாக்காளர்களிடம் ஆயிரம் ,500 கொடுத்து ,கையில், காலில் விழுந்தால் ,அவர்களுக்கும் வாக்களித்து விடுகிறார்கள். இது முற்றிலும் தவறு.

அதனால் தான் ஒவ்வொரு ஐந்து ஆண்டும் ,அரசியலுக்கு வந்தவர்களின் சொத்து மதிப்பு 500 மடங்கு உயர்கிறது. குறைந்த பட்சம் ஒவ்வொரு மந்திரியும் ஒரு லட்சம் கோடி சொத்து மதிப்பு டார்கெட் வைக்கிறார்கள் .

ஆனால்,மக்களின் சொத்து மதிப்பு 5 சதவீதம் கூட உயரவில்லை. கேட்டால் என்னை விட நேர்மையானவன் ,உத்தமன், அரிச்சந்திரன், யாரும் இருக்க முடியாது. இந்த டயலாக் எல்லாம் யார் கிட்ட பேசணும் நீ ?ஆடு ,மாடு மேய்த்து விட்டு வருபவனிடம் சொன்னாள் அவன் உனக்கு கைதட்டி விசில் அடிப்பான். அதற்கும் சும்மா அடிக்க மாட்டான் ஒரு கோட்டர் ,இல்லை ஒரு ஃபுல் கொடுத்தால் தான் அடிப்பான். இதையெல்லாம் அரசியல் என்றும், அரசியல்வாதி என்றும் தகுதியான வாக்காளர்கள் ஏற்றுக்கொள்வார்களா? மேலும்,

மக்கள் இந்த கொடி பிடித்துக் கொண்டு, ஏதோ ஒரு கட்சியில் எனக்கு வாக்களியுங்கள் என்று வீடு, வீடாக வந்து பிச்சை கேட்டு கொண்டு இருப்பார்கள். இந்த வாக்கு பிச்சைக்கு அர்த்தமற்றவர்கள். நீ என்ன செய்தாய்? ஊரில் உள்ள சொத்துக்களை பட்டா போட்டுக் கொள்ளவா? இல்லை, பதவிக்கு வந்து எத்தனை கோடி கொள்ளை அடிக்கலாம் என்று திட்டம் போடவா?

அதனால், மக்கள் இனி எந்த கட்சி வந்தாலும் ,அவர்களுடைய தகுதி என்ன ?என்று தெரியாமல் வாக்களிக்காதீர்கள். ஏனென்றால் ,எல்லா அரசியல் கட்சியும், இந்த பத்திரிகை, தொலைக்காட்சி ,சோசியல் மீடியாக்களை காட்டி அவர்களுடைய பேச்சிலே எல்லாம் கொடுத்துவிட்டு, எல்லாம் செய்து விட்டு, போவதற்கு நீங்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டிருக்கிறீர்கள். அதனால்,

வாக்களிக்கும் மக்களே அரசியல் எஜமானர்கள். நீங்கள் திருந்தாதவரை உங்களை ஆயிரம், 500 கொடுத்து, ஒரு பிரியாணி கொடுத்து, ஒரு கோட்டர் கொடுத்து, அடிமையாக வைத்துக் கொண்டிருப்பார்கள். இல்லையென்றால் ஜாதி பெயரை சொல்லியும், நம்மால் என்று உன்னை நம்மாலே கழுத்தை நெறுக்கி பள்ளத்தில் போட்டு விட்டு, போவான்.

அதனால், எந்த கட்சி வந்து உங்களை ஓட்டு கேட்க வந்தாலும், அவர்கள் உங்களுக்கு என்ன செய்தார்கள்? என்ன செய்திருக்கிறார்கள்? என்பதை மனதில் வைத்து வாக்களியுங்கள். சமூக ஆர்வலர்கள் தங்களுடைய whatsapp குரூப்புகளில் இதை அதிகம் பகிரவும். இன்னும் ஒரு படி மேலே சென்றால்,இதை பிட் நோட்டீஸ் ஆக கூட மக்களுக்கு விநியோகம் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *