தமிழ்நாட்டின் அரசியல் !மாற்றங்களை நோக்கி போகும் நிலை ஏன் ? தகுதியான அரசியல் கட்சி எது? யார் தகுதியானவர்கள்?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அதிமுக, திமுகவுக்கு மாற்று சக்தியாக தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை கண்டது தமிழக வெற்றி கழகம்.

மேலும்,இன்று திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாம் எல்லாம் வாழ முடியாது என்று மக்கள் பேசும் அளவிற்கு திமுக ஆட்சி இருந்தது. இப்படிப்பட்ட ஆட்சியை சில ஐஏஎஸ் அதிகாரிகள் கூட திமுக ரொம்ப ஆட்டம் போட்டு விட்டார்கள் என்று தான் சொன்னார்கள்.

அப்படிப்பட்ட ஆட்சியும், பல ஊடகங்கள் அதற்கு நற்சான்று கொடுத்து ,அவர்களுடைய ஊழல் ஆட்சியும், அராஜக ஆட்சியும், நியாயப்படுத்தியது வெட்கக்கேடான கார்ப்பரேட் நான்காவது தூண் .

மேலும்,இப்போது இரண்டு கட்சியிலும், இருக்கக்கூடிய முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் மந்திரிகள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ,இவர்கள் அத்தனை பேருக்கும், ஒரு இடியை இறக்கியது தான் 2026 சட்டமன்றத் தேர்தல்.

மேலும்,அரசியல் என்பது ஏமாற்று வேலையாக இரண்டு கட்சியினரும் மாற்றி இருக்கிறார்கள். அதாவது மக்கள் அதிமுகவை விட்டால் திமுக, திமுகவை விட்டால் அதிமுக, என்று மாறி ,மாறி வாக்களித்ததன் விளைவு தமிழ்நாட்டில்,அதிமுக, திமுக வினர் . ஊழல், ஆட்சியில் அராஜகமும், சுயநலமும் கொண்ட ஆட்சி அதிகாரம் மக்கள் இரண்டு கட்சிக்கும் மாற்றான ஒரு அரசியல் தேவை! என்று தீர்மானித்து தான், தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்திருக்கிறார்கள்.

மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்திற்கான அரசியலை தமிழக வெற்றிக் கழகம் எப்படி கொடுக்கப் போகிறது என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு. மேலும், இனி மக்களை ஏமாற்றி அரசியல் செய்து, கொள்ளையடிக்க வேண்டும் .ஊழல் செய்ய வேண்டும். என்ற நினைப்போடு, அரசியலுக்கு வந்தால், யாராக இருந்தாலும், எந்த கட்சியாக இருந்தாலும், மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள்.

இன்று அவர்களுக்கு குறைந்தபட்சம் ஐம்பதிலிருந்து, அறுவது ,எழுவது என்பது நோக்கி வயதில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இளைய தலைமுறைகள் யார்? தகுதியான அரசியல்வாதி? என்பதை கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறது? எந்த அரசியல் கட்சி! மக்களுக்கான அரசியல் கட்சி ?என்பதை அவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் மாற்றம் தேவை என்று விஜய்க்கு வாக்களித்தார்கள்.

இந்த மாற்றத்தை வைத்து விஜய் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வாரா? என்பது தான் மிகப்பெரிய கேள்வி? மேலும்,இப்போது அண்ணாமலை பிஜேபி யில் இருந்து விலகி, தனி கட்சி தொடங்க இருப்பதால், இளைஞர்கள், படித்தவர்கள் இக்கட்சியில் சேர ஆர்வம் காட்டுகிறார்கள்.

இங்கே யாருக்கு பலம்? யாருக்கு பலவீனம்? என்ற நிலையில் அரசியல் கட்சிகள் போட்டி, போட்டுக் கொண்டிருக்கிறது.மேலும், பிஜேபி அண்ணாமலையை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் சிலருடைய அரசியல் பேச்சு. இப்படி இருக்கும்போது, பிஜேபி ஆர் .எஸ். எஸ் லிருந்து ஒரு வலிமையான இளைஞரை கொண்டு வந்து, தமிழ்நாட்டிற்கு நியமிக்க யோசிப்பதாக தகவல் .

மேலும்,அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும், துடிப்புள்ள இளைஞராகவும் இருக்க வேண்டும். அரசியல் பேசத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். அப்படி ஒரு நபரை தேடிக் கொண்டிருப்பதாக தகவல், வெளி வந்து கொண்டிருக்கிறது.

ஏனென்றால் பிஜேபியில், இதுவரை நியமனம் செய்த எந்த ஒரு மாநில தலைவர்களும், பொது மக்களிடம் நெருங்கி செல்லவில்லை. மேலும், பொதுமக்களின் குறைகளை கேட்கவில்லை. எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களின் குறைகளை கூட கேட்கவில்லை. எல்லாமே கார்ப்பரேட் நோக்கி பேசிக் கொண்டிருப்பவர்கள்.

மேலும்,விஜய் ஆட்சியில் மூன்று சேனல்கள் பின்னுக்கு தள்ளி விட்டார்களாம். அதற்கு பிஜேபி அஸ்வத்தாமன் ,நாயக நாகேந்திரன் எல்லோரும் விஜய் ஆட்சிக்கு எதிராக கொடுத்தார்கள். ஆனால், சாமானிய மக்கள் நடத்தக்கூடிய பத்திரிகைகளுக்கு, இதுவரை ஒருவர் கூட குரல் கொடுக்கவில்லை.

மேலும், இவர்கள் எப்போது கார்ப்பரேட் வளர்ச்சிக்காக, பேசுகிறார்களோ ,இவர்கள் எல்லாம் ஊழலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அடித்தட்டு மக்களுக்கும் ,நடுத்தர மக்களுக்கும், போய் சேர வேண்டிய அரசியல்! இன்று கார்ப்பரேட்டுக்கு போய்க்கொண்டிருக்கிறது.

ஏனென்றால், கார்ப்பரேட் தான் பெட்டியை கொடுப்பான். அந்த பெட்டியை கொடுத்துவிட்டு, சாமானிய மக்கள் தலையில், அந்த விலை உயர்வை வைத்து கொள்ளையடிப்பான். இதுதான் கார்ப்பரேட் அரசியல்.

மேலும்,மக்களை மறைமுகமாக சாகடிப்பது, நயவஞ்சமாக சாகடிப்பது ,எல்லாம் கார்ப்பரேட் அரசியல். இன்றைய அரசியல் கட்சிகள் ஆட்சி அதிகாரத்திற்கு வரும்வரை, கார்ப்பரேட்டை எதிர்த்து பேசுவார்கள். ஆட்சி ,அதிகாரம் கைக்கு வந்தவுடன் கார்ப்பரேட் உடன் கைகோர்த்துக் கொள்வார்கள். இதையெல்லாம் மக்கள் யோசிக்க வேண்டும்.

மேலும், மக்கள் அதிகாரம் கார்ப்பரேட்டுகளின் உண்மையான முகத்தை மக்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் ஒரு சாமானியனின் பத்திரிக்கையாக, தொடர்ந்து போராடி வருகிறது. தவிர, பத்திரிக்கை துறையில்! கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு மட்டுமே, என்று கொடுக்கப்பட்டு வரும் சலுகையை தங்களுக்கும் ,அதில் உரிமை இருக்கிறது என்பதை தொடர்ந்து போராடி வருகிறது.

மேலும்,நாட்டில் பொய்க்கு எந்த அளவுக்கு அதிக மதிப்பு கொடுக்கிறார்களோ ,அந்த அளவுக்கு உண்மைக்கு மக்கள் மரியாதை கொடுக்க தவறிவிட்ட தன் விளைவுதான், இன்றைய கார்ப்பரேட் அரசியல். அதுமட்டுமல்ல,நீங்கள் மனசாட்சி உள்ள மக்களாக வாழ்ந்து, நேர்மையானவர்களுக்கும், நல்லவர்களுக்கும் வாக்களித்தால், நிச்சயம் எதிர்பார்த்த மாற்றத்தை அரசியலில் பெற முடியும்.

மக்கள் நாமும், நம் குடும்பமும் நன்றாக வாழ்ந்தால் போதும் , என்ற சுயநலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதால், அரசியலில் மக்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த ஏமாற்றத்திற்கான முக்கிய காரணம் என்ன? கட்சி என்ற ஒரு கப்பலில் சேர்ந்து கொண்டு இருக்கின்ற கொள்ளை கூட்டம், ரவுடி கூட்டம், ஊரை ஏமாற்றும் கூட்டம், இவர்கள் எல்லாம் அரசியல் கட்சியாகி விட்டார்கள். இவர்களுக்கு என்ன தெரியுமோ ,அதைத்தான் அரசியல் கட்சியிலும் செய்வார்கள்.

மேலும்,அது தெரியாமல் கட்சி என்று அவனுக்கு வாக்களித்துவிட்டு, அவனை நல்லவன் என்று பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், புகழ் பாடிவிட்டு, அவனுக்கு தெரிந்ததை மட்டுமே செய்வான். அதாவது, இதற்கான விளக்கம்,திருடனுக்கு எப்படி திருடுவது என்பது தெரியும்? கொள்ளையடிப்பவனுக்கு எப்படி கொள்ளையடிப்பது என்பது தெரியும்? இங்கே அரசியலில் வித்தியாசமாக ஒரு கொள்ளை அடிக்க வேண்டும்.

அது எப்படி என்றால், அரசு அதிகாரிகளை கைக்குள், போட்டுக் கொண்டு, சட்டத்தை ஏமாற்றி கொள்ளையடிக்க வேண்டும். இதுதான் திமுக ,அதிமுக ஆட்சியில்! நடந்த சாதனை. இந்த சாதனை மேலும் தொடராமல் மக்கள் மாற்றத்தை அரசியலில் கொடுக்க விரும்பினார்கள்.

இப்போது! இவர்கள் எல்லாம் பேசியே மக்களை எப்படி ஏமாற்றலாம்? இதற்கு சமூக ஊடகங்களும், கார்ப்பரேட் ஊடகங்களும், எப்படி எல்லாம் மக்களை நான்காவது தூண் என்று ஏமாற்றலாம்? இவர்கள் கட்சி என்று மக்களை எப்படி ஏமாற்றலாம்? இதற்கான போட்டி இன்று தமிழ்நாட்டின் அரசியல் களமாக மாறி இருக்கிறது. இதிலிருந்து மக்கள்!

இனி அரசியல் கட்சியை எப்படி தரம் பிரிக்க வேண்டும்? கட்சிக்குள் யார் தகுதியானவர்கள்? எந்த கட்சியில் பதவிக்கும், பொறுப்புக்கும் தகுதியானவர்கள்? மேலும்,குப்பை, கூளம் எல்லாம், இன்று பத்திரிக்கை என்று சொல்லிக் கொண்டிருப்பது போல, அரசியல் கட்சிகளிலும், இருக்கக்கூடிய குப்பை, கூளங்கள், தங்களை அரசியல் கட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கிறது.

அதனால் ,மக்கள் தகுதியான அரசியல் கட்சி எது? தகுதியான அரசியல் கட்சியினர் யார் ?என்பதை நோக்கி! தமிழகத்தின் அரசியல் மாற்றம் செல்கிறதா? இந்த மாற்றம் மதச்சார்பின்மை என்ற போலி அரசியல்! செய்து இனி வருங்காலத்தில் மக்களை ஏமாற்ற முடியுமா?

மேலும்,மக்கள் இன்னும் ஓரிரு ஆண்டுகளில், ஆன்மீக அரசியலை மட்டும் தான் தேர்வு செய்யப் போகிறார்கள் . அதற்கு தகுதியானவர்கள் யார்? அதற்கு தகுதியான கட்சி எது? மாற்றம் அதுதான் சரியானது. தகுதியானது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *