
தமிழ்நாட்டின் அரசியல் மாற்றம் இளைய தலைமுறைகளால் கொண்டு செல்லப் பட்டு, மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாற்றத்தை ஏற்படுத்தியவர் ஜோசப் விஜய்.
மேலும், தற்போது இருக்கக்கூடிய இளைய தலைமுறைகளில் ,ஜோசப் விஜய், உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை, இந்த மூன்று பேருக்குள்ளே தான் அரசியல் போட்டி.
தவிர,மூன்று பேரில் தற்போது ஜோசப் விஜய் முதலமைச்சர் ஆகிவிட்டார். உதயநிதி துணை முதல்வர் ஆகிவிட்டார் .அண்ணாமலை இன்னும் ஆகவில்லை .அதற்கான போட்டியில் இறங்கி விட்டார்.
மேலும்,தமிழ்நாட்டில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருந்தாலும், இந்த மூன்று பேருக்கு மட்டும் தான் முதலமைச்சர் போட்டி ஜாதகமாக ஜோதிடர்கள் முதல் ஆன்மீக சாமியார்கள் வரை தெரிவிக்கின்ற கருத்து. இதில் முதல்வர் ஜோசப் விஜய் தற்போது முதலமைச்சராக இருந்து வருகிறார். இவரைப் பற்றி சொல்லக்கூடிய ஜோதிடர்களும் சரி, சித்தர்களும் சரி ,இவர் ஐந்து ஆண்டு பூர்த்தி செய்வாரா? இது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. மேலும்,தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பது இறைவனின் கட்டளை , அது நடந்து விட்டது. மேலும்,

இவருக்கு கொடுக்கப்பட்ட சிம்மாசனம் கூரிய முற்களால் நிறைந்த ஒரு சிம்மாசனம். அதாவது போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாமல்,108 பேர், கூட்டணி ஆட்சி ,அமைக்கக் கூடிய நிலையில், இந்த சட்டமன்றம் அமைந்துள்ளது.
இது ஒரு புறம் என்றால், மற்றொருபுரத்தில் இவர், கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் ,நிறை வேற்ற முடியாத வாக்குறுதிகள். இது தவிர, கூட்டணி கட்சிகளின் எதிர்பார்ப்புகள்,அரசியல் கட்சியினரின் எதிர்பார்ப்புகள், மக்களின் எதிர்பார்ப்புகள், இதையெல்லாம் முதல்வர் ஜோசப் விஜய் எப்படி சமாளிக்க போகிறார்?
மேலும்,உதயநிதி ஸ்டாலின் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். திமுக வில் உள்ள முன்னாள் அமைச்சர்கள், உதயநிதியின் தலைமையை திமுக சீனியர்கள் ஏற்றுக் கொள்வது கஷ்டமான ஒன்று .
இதிலிருந்து உதயநிதி ஸ்டாலின் கட்சியை காப்பாற்றி, தமிழக முதல்வராவது மிகப் பெரிய கேள்வி? மேலும் அண்ணாமலையின் அரசியல், ஒரு ஆன்மீக அரசியல் ஆகத் தான் இருக்கும். அதில் ஒன்றும் மாற்று கருத்து இல்லை.மேலும், அண்ணாமலை ஜோதிடர்களையும், சாமியார்களையும் நம்பித்தான் தன்னுடைய அரசியலின் இலக்கு 2031 சட்டமன்றத் தேர்தல் என தெரிவித்திருக்கிறார்.
மூன்று பேருமே ஜோதிடர்களை நம்புகிறவர்கள் தான். இதன் அடிப்படையில் அரசியல் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த மூவரில், தமிழ்நாட்டில் யார் சிறப்பான ஆட்சியை தர முடியும்? இதுதான் தமிழக மக்களின் முக்கிய கேள்வி? மேலும்,

இரண்டு பேர் ஓரளவுக்கு படித்திருக்கிறார்கள். அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் . திறமை என்று பார்க்கும் போது, மூன்று பேரில் அண்ணாமலை தான் முதல் திறமையானவர். விஜயும், உதயநிதி ஸ்டாலினும், அரசு அதிகாரிகளின் பைலை அவர்களிடம் கேட்டு தான் தெரிந்து கொள்ள வேண்டும். அண்ணாமலை படித்ததே தெரிந்து கொள்வார்.
மேலும், 100% அரசியலுக்கு வருபவர்களை ஊழல் அற்றவர்களாக இல்லை, நேர்மையானவர்களாக இருப்பது கடினம். அப்படி நேர்மையானவராக இருந்தால், கூட அவரைப் பற்றி யூடியூபர்கள் ஏதாவது ஒன்று பேசி தான் வைப்பார்கள் .
மேலும்,மனசாட்சிக்கு உட்பட்டு, சட்டத்துக்கு உட்பட்டு, இந்த மக்களுக்கு பணி செய்தாலே, அதுவே போதுமானது. எதை செய்ய முடியுமோ அதை செய்தால் போதும். எதையெல்லாம் ஒழிக்க வேண்டுமோ, அதை எல்லாம் ஒழித்தால் போதும். எதையெல்லாம் கொடுக்க வேண்டுமோ, அதை எல்லாம் கொடுத்தால் போதும். முடியாததை எல்லாம் முடியும் என்று சொல்லிவிட்டு, மூலையில் முக்காடு போட்டு உட்கார கூடாது.
மேலும்,அப்படியே நூறு சதவீதம் ஜோசப் விஜய் நேர்மையானவராக இருந்தாலும் ,அவருடைய அரசியல் கட்சியினரும் ,மந்திரிகளும், எம்எல்ஏக்களும், இருப்பார்களா? என்பது யாராலும் கணிக்க முடியாது. ஆனால், அண்ணாமலை ,இந்த விஷயத்தில் எல்லோரை விட சிறப்பான முறையில் தகுதியானவர்களை தேர்வு செய்யக்கூடிய வல்லமை உள்ளவர்.
மேலும்,அவருடைய அரசியல் !அரசியல் திறமை ,அறிவு ஆற்றல் ,மூன்று பேரை காட்டிலும் முதன்மையானவர். யாராக இருந்தாலும் ,இறைவன் யாரை அங்கே நியமிக்கிறாரோ ,அவர்தான் முதல்வர். தவிர,அரசியலும் ஒரு சீட்டாட்டம் போன்றது தான்.
சீட்டு ஆடும் போது, ஜெயிக்க கூடிய சீட்டுகள் வந்துவிட்டால், எளிதில் ஜெயித்து விடலாம் .இல்லையென்றால் கலைத்து ஆட வேண்டும் அந்தக் கலைத்து ஆடக்கூடிய திறமை, தகுதி உள்ளவர்கள், மூவரில் அண்ணாமலை மட்டுமே.

மேலும், முதல்வர் ஜோசப் விஜயின் ஆட்சி !தமிழ்நாட்டின் அரசியல் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக எப்படி இருக்க போகிறது ?என்பதுதான் இளைய தலைமுறையினருக்கும், தமிழக மக்களுக்கும் மிகப்பெரிய கேள்வி? எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா? இல்லை ஏமாற்றமா?
