தமிழ்நாட்டில் ஆட்சி!இனி முருக பக்தனின் ஆட்சி! முருகன் ஆட்சி!அவர் எந்த கட்சியாக வேண்டுமானாலும் இருக்கலாம்,அவர் யார்?என்பது அந்த முருகனுக்கு மட்டும் தான் தெரிந்த உண்மை.

அரசியல் ஆன்மீகம் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

பெரியார்,அண்ணா இவங்க எல்லாம் சாமி கும்பிட கூடாதுன்னு சொல்லிட்டாங்களா? அதிமுக கொள்கை வாதிகளான எடப்பாடி பழனிசாமி,உதயகுமார் புலம்புகிறார்கள் ஏன்?என்று தெரியவில்லை. அண்ணாவையும் பெரியாரையும் இழிவுபடுத்தி விட்டார்களா? அந்த வீடியோ இவர்களை அதிர்ச்சி அடைய வைத்து விட்டதா? இல்லை,ஒருவேளை முருக பக்தர்கள் மாநாடு இவர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்குமோ, என்னவோ,தெரியவில்லை.

அதனால், இந்த புலம்பல் அண்ணா,பெரியார், எம்ஜிஆர்,கருணாநிதி அம்பேத்கர்,என்று பெயர்களை சொல்லிக் கொண்டிருந்தால், மக்கள் ஏமாற தயாராக இல்லை.

50 ஆண்டுகளாக ஏமாந்த மக்கள் இனி ஞானத்தின் மார்க்கமாக மக்கள் பயணத்தை தொடங்கி விட்டார்கள். வள்ளலார் கூட இந்த கால குழந்தைகள் ஞானக் குழந்தைகள் என்று தான் குறிப்பிட்டதாக சில சித்தர்கள் தெரிவிக்கிறார்கள்.

வருங்காலத்தில், இளைய சமுதாயத்தை இவர்கள் ஏமாற்ற முடியாது என்பது தான் நான் தெரிந்து கொண்ட உண்மை. இந்த 50 ஆண்டுகால மக்களுக்கு புரியாத பல விஷயங்கள்,இன்றைய செல்போன் ஞானத்தின் வடிவமாகவே அது மாறி விட்டது. ஒரு பக்கம், இவர்கள் சொல்வதை கேட்டாலும், இன்னோரு பக்கம் முருகனுடைய ஞானம், இந்த அஞ்ஞானத்தை அகற்றிக் கொண்டுதான் இருக்கிறது.

அஞ்ஞானத்தில் இருப்பவர்கள் இப்படித்தான் பேசுவார்கள் என்பதை ஞான மார்க்கத்தை தேடக்கூடிய மக்கள் இதைப் புரிந்து கொள்வார்கள். இன்றைய பத்திரிக்கை உலகம்,, தொலைக்காட்சி,இணைய தளம்,,யூ டியூப் சேனல்கள், எது உண்மை? எது பொய்?என்பதை மக்கள் பட்டியல் எடுக்கவும் ஆரம்பித்து விட்டார்கள்.

அதனால்,அரசியல்வாதிகள் என்று சொல்லிக்கொண்டு,அண்ணாவையும், பெரியாரையும் பெரிதாக யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை ஒரு காலத்தில் அது தேவைப்பட்டது.எதற்கு என்றால்?கோயில்களில் இந்த தீண்டாமை!அரசியல் செய்து வளர்ந்த ஒரு திராவிட இயக்கம்தான் அது! அப்போதும் பாருங்கள், அது எப்படி வளர்ந்து இருக்கிறது? எப்படி ஆட்சியைப் பிடித்திருக்கிறது? எங்கு ஆரம்பிக்கிறது என்றால்? அப்போதும் கோயிலில் தான் ஆரம்பித்திருக்கிறது. இப்போதும் கோயிலில் தான் ஆரம்பித்திருக்கிறது.

அது ஆரம்பித்த இடத்திலே! அதனுடைய அழிவும் வந்திருக்கிறது. இதுதான் தமிழகத்தில் திராவிட கட்சிகளின் அரசியல் வரலாறு. இன்றைய இளைய தலைமுறைகள், அது எந்த சமுதாயத்தில் வேண்டுமானாலும் இருக்கட்டும்,குறிப்பிட்ட பெரும்பான்மை சமூகம், இந்த இறைபக்தி அவர்களிடம் பார்க்க முடிகிறது. இது யாருமே சொல்லிக் கொடுத்து வருவதில்லை.அவரவர் மனதில் தன்னுடைய கஷ்டங்களை இறைவனிடம் போய் இளைய தலைமுறைகள் வேண்டுகிறது.

இதுதான் தற்போதைய அவர்களின் மனநிலை. அதை அதிமுகவோ, திமுகவோ அவர்களை மாற்ற முடியாது. இவர்கள் புதிய வாக்காளர்களாக யாருக்கு வாக்களிப்பார்கள்?என்பதும் இன்று வரை ஒரு கேள்விக்குறியான ஒரு விஷயம் தான். ஆனால்,இவர்களிடம் இந்த பகுத்தறிவு வேஷங்கள் வலிக்காது. அண்ணா,பெரியார்,கொள்கைகள் பலிக்காது. ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும், அதுவும் பலிக்காது.

இவர்கள் அரசியலில் நேர்மை, உண்மை,மனசாட்சி உள்ள அரசியல் தலைவரை நோக்கி தான் இவர்கள் இருப்பார்கள். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அதைத்தான் அவர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர் ஒரு முருக பக்தராக இருந்தால்,!அந்த முருக பக்தருக்கு தான் இவர்கள் வாக்களிப்பார்கள்.இது நிச்சயம் நடக்கும்.மேலும்,

நாட்டில் அரசியல் வாதிகள் என்று தற்போது சொல்லிக் கொண்டு, வீடியோ போட்டுக் கொண்டும்,மைக்கில் பேசிக் கொண்டும், தன்னைக் கொள்கைவாதி என்று பேசி மக்களை முட்டாளாக்கும் வேலையெல்லாம் இனி எடுபடாது.மக்கள் உங்களை தினந்தோறும் உங்களுடைய செயல்பாடுகள் என்ன?என்பதுதான் தேவையே தவிர,

இந்து மதத்தில் கடவுளை வணங்குவதற்கு அண்ணா பெயரையும்,பெரியார் பெயரையும்,பயன்படுத்தி யாரும் நீங்கள் கொள்கை வாதிகள் என்று ஓட்டுக்களை வாங்க முடியாது.

தவிர, அது உங்கள் கொள்கை என்பார்கள்.உங்களுடைய கொள்கையை உங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அதை அடுத்தவனிடம் திணிப்பதற்கு நீங்கள் யார்? உங்கள் கொள்கைகளை திணிப்பதற்கு முதலில் நீங்கள் கொள்கையை கடைப்பிடிக்கிறீர்களா?சட்டத்தின்படி நடக்கிறீர்களா ? தேர்வு செய்யப்பட்ட அல்லது வாக்களித்த மக்களுக்கு உண்மையான உங்களுடைய சமூக பங்களிப்பு இருக்கிறதா? இதுதான் தேவையே தவிர, நீங்கள் பெரியாரையும், அண்ணாவையும், வைத்துக்கொண்டு கதை காலட்சேபம் நடத்திக் கொண்டிருந்தால், இனி வேலைக்காகாது.

இங்கே முருக பக்தர்கள் சொன்னது போல, இனி தமிழ்நாட்டில் ஒரு முருக பக்தனின் ஆட்சி தான் நடக்கப் போகிறது. அதுதான் முருகனின் ஆட்சி!அவர் யாராக வேண்டுமானாலும்,இருக்கலாம்.எந்த கட்சியிலும் இருக்கலாம்.ஆட்சி அந்த முருக பக்தனின் ஆட்சியாக தான் இருக்க போகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *