மக்கள் பத்திரிக்கையை மூடநம்பிக்கையாக பார்ப்பதையும், படிப்பதையும் தூக்கி எறிவார்களா? – மக்கள் அதிகாரம்.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் டிராவல் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம் வெளிநாட்டு-செய்திகள்

நாட்டில் எவ்வளவோ அறிவு,விஞ்ஞானம், ஆன்மீகம், சமூக கருத்துக்கள், வளர்ச்சி அடைந்தபோதும்,இன்னும் பழமையிலே இருக்கக்கூடிய மக்கள், பத்திரிகை என்பதை ஒரு லேபலாக தான் பார்த்துக் கொண்டு, படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் தினத்தந்தி தான் படிப்பேன், தினமணி தான் பாடிப்பேன், இந்து தான் படிப்பேன்,தினமலர் தான் படிப்பேன்,இப்படி இன்னமும் ஒரு குறிப்பிட்ட வாசகர்கள் இந்த பத்திரிகை செய்திகள் தான் உண்மையானது என்று நம்பக்கூடிய மக்கள் இருக்கிறார்கள்.அது அவர்களுடைய அறியாமை.

ஏனென்றால், இன்று பத்திரிக்கை என்பதன் நடுநிலை மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது. நம்பகத் தன்மை கேள்விக்குறியாகிவிட்டது. அதனால், மக்கள் சிறிய பத்திரிக்கை, பெரிய பத்திரிக்கை என்ற அலட்சியம் செய்யாமல் எல்லாவற்றையும் படித்து எதில் உண்மை? என்பதை நீங்கள் தேர்வு செய்யுங்கள்.

உண்மை, நம்பகத் தன்மை பத்திரிக்கைக்கு மிக முக்கியமானது. காலம் மக்களின் வாழ்வில் எவ்வளவு மாற்றங்களை கொண்டிருக்கிறதோ,அதேபோல் பத்திரிக்கை துறையிலும், இந்த மாற்றங்கள் வந்திருக்கிறது. இந்த மாற்றத்தை நீங்கள் குறுகிய வட்டத்தில் பார்க்காமல், பரந்த மனப்பான்மையுடன் பார்க்க வேண்டும். பல விஷயங்கள் தெரிந்து கொள்ள சிறிய பத்திரிகை என்று அலட்சியம் செய்யாமல் படித்து பாருங்கள். உண்மை எதில் என்பது நீங்கள் தான்,அதை முடிவு செய்ய வேண்டும்.

இன்றைய பத்திரிகை உலகம் ஒரு போட்டி உலகம். அந்த போட்டியில் ஜெயிக்க எல்லா பத்திரிகைகளும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. அதனால், மக்கள் நீங்கள் நினைக்கும் இந்த லேபிள் மட்டுமே பத்திரிகை என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இந்த உலகம் ஏமாற்றமும்,பொய்யும் நிறைந்த வாழ்க்கையில், உண்மை எங்கே? என்று தேடுவது போல, பத்திரிக்கையும் தேடுவது காலத்தின் அவசியம். இது செய்தி துறைக்கு தேவை இல்லை.

ஏனென்றால் செய்தி துறை ஆட்சியாளர்களின் எடுபிடித்துறை!அவர்களுக்கு யார்?ஆட்சியாளர்களுக்கு சாதகமாக செய்தியை போடுகிறார்களோ, அது மட்டுமே பத்திரிகை என்று தீர்மானிக்கக் கூடிய செய்தி துறை, பத்திரிகையின் சட்டங்களை எல்லாம் மதிப்பதில்லை. பத்திரிகையின் நோக்கம் கூட செய்தி துறைக்கு தெரியாது.

இப்படிப்பட்ட காலகட்டத்தில் மக்கள் பல பக்கங்கள் பெரிதாக இருந்தால், பெரிய பத்திரிக்கை என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். பக்கங்கள் சிறியதாக இருந்தாலும், அதில் வெளிவரும் உண்மை உண்மை மற்றும் முக்கியத்துவமான செய்திகள்,காலத்திற்கு தேவையான செய்திகள், இதுதான் மக்கள் அதிகாரம் பத்திரிக்கை.

ஒரு அரசியல் கட்சிக்கு உண்மையாகவும், இன்னொரு அரசியல் கட்சிக்கு அதே செய்தி பாதகமாகவும் இருந்தால், தவறு செய்தவர்கள் அதை விமர்சனம் செய்கிறார்கள். இன்று தேவையற்ற பல கருத்துக்கள், ஆளாளுக்கு பேசுவது, அரசியல் கட்சிகளில் தங்கள் ஆதாயத்திற்கு பேசுவது, அரசியல் என்று நினைக்கிறார்கள்.

ஆனால், மக்களின் நலன் சார்ந்த பிரச்சனைகள், கருத்துக்கள், சொல்வது,குறைந்து இவர்களுடைய நலன் சார்ந்து கருத்துக்கள்,பேசுவது அரசியல் என்று இன்றைய அரசியல் கட்சி தலைவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை எல்லாம் முக்கிய செய்தியாக இன்றைய பத்திரிகைகள் அதை எழுதிக் கொண்டிருக்கின்றனர்.

மக்களும் அதுதான் அரசியல் என்று படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால், இந்த மூடநம்பிக்கையான கருத்துக்கள், அரசியலில் பத்திரிகைகள் தங்கள் ஆதாயத்திற்காக அதை வெளியிட்டு வரும்போது, இதில் சாமானிய மக்கள்,விஷயம் தெரிந்தவர்கள், இதை பற்றி கூட சிந்திப்பது இல்லை.

அதனால், பத்திரிக்கை என்பது பொது நலன் கருதி,மக்கள் நலன் கருதி,இந்த தேச நலன் கருதி, வரக்கூடிய செய்திகள் எந்தெந்த பத்திரிகைகளில் இருக்கிறது?என்பதை படித்து முடிவு செய்யுங்கள்.அதுதான் பத்திரிகை.

– ஆசிரியர்
மக்கள் அதிகாரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *