
தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடவில்லை என்றாலும், மது பார் களையாவது தமிழக முதல்வர் விஜய் மூடுவாரா? – வேதனையில் மது பிரியர்களின் மனைவிகள் .
மதுவால் பல குடும்பங்கள் இன்று வறுமையில் தத்தளித்து கொண்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம்? வேலைக்கு போனால் தானே கணவன்கள்! மனைவி, பிள்ளைகளை, வாழ வைக்க முடியும். மேலும்,மது போதைக்கு அடிமையானவர்கள் உடனே அதிலிருந்து வெளிவர முடியாது.

இருப்பினும், இந்த பார்கள் மூலம் உழைக்க வேண்டிய வயதில் குடித்துவிட்டு, அங்கேயே காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறார்கள். மது குடிகாரர்களின் மனைவிமார்களின் கதறல்.மேலும்,
மனைவி வேலைக்கு போய் கொண்டு வந்து கொடுக்கின்ற பணத்தில் கூட மது பிரியர்கள், பார்களுக்கு சென்று, குடித்துவிட்டு, ஊர் கதைகளை பேசிக்கொண்டு, குடும்பத்தை பற்றியோ, மனைவி பற்றியோ, பிள்ளைகளைப் பற்றியோ, கடன்காரர்களைப் பற்றியோ, குடும்ப கஷ்டங்களை பற்றியோ, எதுவுமே பற்றி கவலைப்படாமல், மது போதையில் பார்களிலே , வாழ்க்கையை தொலைத்து விட்டு, காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும்,வேலைக்கு சென்று வந்து சம்பாத்தியத்தில் குடித்து விட்டு, வீட்டுக்கு வந்த படுத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் கூட இல்லாமல் பார்களிலே, குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதை ஒழிக்க வேண்டும் என்று தான் தமிழகத்தில் உள்ள குடிகாரர்களின் மனைவிமார்கள் இந்த கோரிக்கையை தமிழக முதல்வர் விஜய்க்கு வைத்திருக்கிறார்கள்.

மேலும்,ஒரு நாளைக்கு டாஸ்மாக் TASMAC ஒட்டிய மதுக்கடை பார்களில் எவ்வளவு பேர் வந்து குடிக்கிறார்கள்? எவ்வளவு பேர்? எத்தனை மணி நேரம் அங்கே இருக்கிறார்கள்? மேலும்,இந்த தனியார் பார்கள் ஒவ்வொரு பொருளையும் ,அதிக விலைக்கு விற்று எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்? இது அத்தனையுமே அடித்தட்டு மக்களை வறுமையில் ஆழ்த்தும் வேலை.
மேலும்,இவர்களுக்கு இலவசத்தை கொடுத்தாலும், எந்த முன்னேற்றமும் இருக்கப் போவதில்லை. இலவசத்தால் இவர்களுடைய வாழ்க்கை தரம் உயர்த்த முடியாது. இவர்கள் பிள்ளைகளை கூட இவர்களால் படிக்க வைக்க முடியாது. கல்யாணம் செய்து வைக்க முடியாது.

இந்த நிலையில், மது போதைக்கு அடிமையானவர்களை பார்க்கலிலே தங்களுடைய காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர்களின் மனைவி மக்களின் கதறல்கள் .
மேலும், இதனால் தினந்தோறும் குடும்பத்தில் ஓயாத சண்டை தான் . இந்த நிலை கொஞ்சமாவது, மாற வேண்டும் என்றால், தமிழ்நாடு முழுக்க உள்ள 2640 மது பார்களை மூட வேண்டும் . ஒவ்வொரு மதுபான பார்களும், குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 40,000 வருமானம் என்கிறார்கள். அதுவே ஒரு மாதத்திற்கு 12 லட்சம் ஆகிறது.
இங்கே ஒவ்வொரு பொருளுக்கும் அதனுடைய சராசரி விலையில் இருந்து ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும். இங்கே ஒரு பிளாஸ்டிக் டம்ளரின் அடக்க விலை 60 பைசா என்றால் பார்களில் விற்பது ஐந்து ரூபாய் ஒரு டம்ளருக்கு நான்கு ரூபாய், 40 காசு.
இதுவே 500 பிளாஸ்டிக் கப் என்றால், 500*4.40= 2,400 ரூபாய் வருமானம் இது தவிர பட்டாணி மொச்சை தட்டை மூக்கடலை போன்ற சுண்டல் வகைகுக்கு ஒரு சுண்டல் 20 ரூபாய், அதேபோல் ஒரு கோழி முட்டைகளை ஐந்து ரூபாய் ஆனால்,
அங்கே ஆம்லெட் போட்டு விற்பது 30 ரூபாய், கோல்ட் ஃபில்டர் சிகரெடின் விலை 10 ரூபாய் ,ஆனால் பார்கலில் விற்பதோ 25 ரூபாய் ,அதேபோல் சீசர் என்ற கத்திரி சிகரட்டின் அடக்க விலை ஒன்பது ரூபாய் ,ஆனால் ,விற்பது 20 ரூபாய், இதனால் , மது பிரியார்கள் அங்கே எவ்வளவு விலை விற்றாலும், அதை வாங்கி பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். சாப்பிடுகிறார்கள்.
இதனால் யாருக்கு பொருளாதார? ஈழப்பு என்றால்! இந்த அடித்தட்டு மக்களுக்கு தான் அதிகப்படியான பொருளாதார இழப்பு. அது மட்டுமல்ல ,ஒவ்வொரு பார்களிலும், காலி பாட்டில்களை பத்து ரூபாய் கொடுத்து வாங்காமல், காலி பாட்டல்களை பெற்றுக்கொண்டு ,அந்த பிளாஸ்டிக் கப்புகளை விற்று பாட்டில்கள் மூலம் ஒரு பாட்டிலுக்கு சுமார்8. 80 ரூபாய் என்றால் சுமார் 500 பாட்டிலுக்கு 4400 பார் நடத்தும் உரிமையாளர்களுக்கு கிடைக்கிறது.

இதுவும் மது பிரியர்களை ஏமாற்றி ,பார் உரிமையாளர்கள் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இந்த கொள்ளையிலிருந்தும், மது குடிகாரர்களை காப்பாற்ற உடனடியாக 2640 பார்களை மூடி தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நடவடிக்கை எடுப்பாரா? – மது குடிகாரர்களின் மனைவிமார்கள் கோரிக்கை .
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை ஒட்டி உள்ள 2640 மதுபான பார்களின் உரிமத்தை ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு இதை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் ஏழை எளிய நடுத்தர குடும்பங்களின் கண்ணீரின் கோரிக்கை.
