
தமிழகத்தில் அரசியல் மாற்றம் தேவை என்பதில் மக்களின் எண்ணமாக இருந்தது. இதற்கு முக்கிய காரணமே திமுக ஆட்சியின் அராஜகங்கள், ஊழல்கள் மக்களிடையே எங்களைப் போன்ற சமூக நலன் ஊடகங்கள் சில கொண்டு சென்றது.

பெரும்பாலான ஊடகங்கள், அந்த ஊழலையும் அராஜகங்களையும் நியாயப்படுத்திக் கொண்டிருந்தது. அவள் அனைத்தும் திமுகவின் கைக்கூலிகளாக செயல்பட்டது. அதையும் மக்கள் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இப்படிப்பட்ட சமூக நலன் ஊடகங்கள் இந்த மாநில முழுதும் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் இருக்கிறது.

மேலும்,மக்கள் அதிகாரம் தொடர்ந்து திமுகவின் அராஜகங்களுக்கும், ஊழலுக்கும் ,எதிராக செய்திகளை வெளியிட்டு வந்துள்ளது. அதற்கு எமது இணையதள பத்திரிக்கையே சான்று .

மேலும், திமுக ஆட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் !அதிமுக, திமுக வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, அதிமுக ,திமுக இரு கட்சியினர் அராஜகங்களுக்கும், ஆட்சியாளர்களின் ஊழல்களுக்கும், 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள்.

மேலும்,இந்த தேர்தல் சர்வேக்களை, எடுத்த பல தனியார் நிறுவனங்கள், பத்திரிகைகள் எல்லாவற்றையும் மீறி இன்று தமிழக வெற்றி கழகம் முன்னணியில் வந்து கொண்டிருக்கிறது.
தவிர, தமிழ்நாட்டில் ஓட்டுக்கு பணம் கொடுத்து, விலைக்கு வாங்கி பதவிக்கு வந்து விடுவோம் என்று கனவு கண்ட திமுக மற்றும் அதிமுகவுக்கு இந்த தேர்தல் மூலம் மக்கள் சரியான பாடம் புகட்டி உள்ளனர்.

இது தவிர, கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகளின் பொய்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டி இருக்கிறார்கள். நாங்கள் எல்லாம் இந்த மக்கள் உண்மையை அலட்சியப்படுத்துகிறார்கள் என்று ஆதங்கத்துடன் எத்தனையோ முறை எழுதி இருந்தோம்.

ஆனால்,மக்கள் அலட்சியப்படுத்தவில்லை .அவர்கள் கவனித்துக் கொண்டு தான் இருந்திருக்கிறார்கள். நேரம் வரும்போது, சரியான நேரத்தில் திமுக, அதிமுகவுக்கு பாடம் புகட்டி இருக்கிறார்கள்.
மேலும், மக்கள் அதிகாரம் தொடர்ந்து இந்த தேர்தல் பற்றி பல செய்திகள் வெளியிட்டுள்ளது. விஜய் இரண்டு பேருடைய எதிர்ப்பு வாக்குகளை நிச்சயம் பெறுவார் என்று குறிப்பிட்டு இருந்தோம்.
ஆனால், இது ஒரு கணிக்க முடியாத தேர்தல் என்றும் வெளியிட்டிருந்தோம், இறுதி கட்ட ரிசல்ட் இன்னும் பெரும்பான்மையை விஜய் பெறுவாரா ? அல்லது கூட்டணி ஆட்சி அமையுமா? என்பது பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்.