ஏப்ரல் 11, 2024 • Makkal Adhikaram
திமுகவிற்கு கூட்டணி தான் தற்போது அதன் பலம். ஆனால், அதிமுகவிற்கும், பிஜேபிக்கும் கூட்டணி தான் அதன் பலவீனம் .இந்த பலவீனம் எப்படி ?என்று தெரியாமல் இரண்டு கட்சிகளும், கூட்டணி வைத்துக் கொண்டுள்ளது. தற்போது பிஜேபி, பாமகவை பெரிய கட்சியாக பிரதமர் மோடி நினைத்துக்கொண்டார். அது கடந்த காலத்தில் இருந்தது உண்மைதான். ஆனால், தற்போது அதன் நிலைமை என்ன? என்று தெரியாமல் கூட்டணி பிஜேபி வைத்துக் கொண்டது. அதன் பலவீனம். மோடி மீது நல்ல எண்ணம் கொண்டவர்கள் கூட பிஜேபியை ஆதரிப்பார்கள்.
ஆனால், வன்னிய சமுதாய கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி இதுவரை அந்த சமுதாயத்திற்கு செய்த துரோகங்களை நினைத்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். தொடர்ந்து வன்னியர் சமுதாயம் ஏமாறாது . இவர்கள் டிவியிலும், பத்திரிகையிலும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து மக்கள் ஏமாந்து விடுவார்களா? பணம் கொடுத்தால் பத்திரிக்கை, டிவியில் உங்களுடைய செய்திகளை போட்டுக் கொண்டிருப்பார்கள். நீங்கள் பேசியது, நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.
ஆனால், சமுதாயம் தற்போது என்ன நினைக்கிறது? அதன் நிலைமை என்ன?இதுவரை ராமதாஸ் வன்னியர் சமுதாயத்திற்கு செய்தது என்ன? இந்த கேள்விதான்? தொடர்ந்து 40 ஆண்டுகளாக இந்த இட ஒதுக்கீடு பிரச்சனையை பேசி அரசியல் செய்து கொண்டு வந்துள்ளார்.அந்த இட ஒதுக்கீடாவது வாங்கி கொடுத்தாயா? அதுவும் இல்லை.தவிர, ஒரு பக்கம் கருணாநிதி இருக்கும்போது அங்கே பெட்டி வாங்கி, அது ஒரு அரசியல். ஜெயலலிதா இருக்கும்போது அங்கே பெட்டி வாங்கி அது ஒரு அரசியல். இந்த சமுதாயத்தை விலை பேசி அரசியல், செய்து வந்ததை வன்னிய சமுதாயத்திற்கு செய்த துரோகம் மட்டுமல்ல, அது வரலாற்றுப் பிழை.அதை ஒருபோதும் சமுதாயம் ஏற்றுக் கொள்ளவில்லை.மேலும்,
இந்த சமுதாயத்தில் எல்லா தரப்பு மக்களும் இருக்கிறார்கள். அறிவாளியும் இருக்கிறார்கள்,படித்தவர்கள் இருக்கிறார்கள், பண்பாளர்கள் இருக்கிறார்கள், விவரமானவர்கள் இருக்கிறார்கள், தொழிலதிபர்கள் இருக்கிறார்கள், அதிகாரிகள் இருக்கிறார்கள்,அடியாள் கூட்டமும் இருக்கிறார்கள், இதற்கு மேலே அடி முட்டாள்களும் இருக்கிறார்கள் . ஆனால், இவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், எல்லோரும் அடி முட்டாள்கள் என்று நினைத்து விட்டார்கள். அங்குதான் இவர்கள் செய்த மிகப்பெரிய தவறு.
அதன் விளைவு, பாமகவின் வாக்கு வங்கி ,இன்று ஒரு சதவீதத்திற்கும் கீழே வந்து விட்டது. அது மட்டுமல்ல, சமுதாயம் என்ன நினைக்கிறது? என்றால் ராமதாஸ் நம்மை வைத்து இவ்வளவு கீழ்த்தரமான அரசியல் செய்கிறாரே என்று கிராமத்தில் உள்ள பெரியவர்கள் முதல் நகரத்தில் இருப்பவர்கள் வரை பேசுகின்ற பேச்சு. இது அரசியலுக்காகவோ அல்லது லாப நோக்கம் கருதியோ சொல்லுகின்ற கருத்து அல்ல. இக்கருத்தை ஆய்வு செய்து பார்த்துக் கொள்ளலாம்.மேலும், இது ராமதாஸின் நிலைமை இது என்றால்,
தற்போது இருக்கின்ற இவர்களுடைய கட்சி நிர்வாகிகள் தகுதி என்ன தெரியுமா? அடியால் வேலைக்கு தகுதியானவர்களை வைத்துக்கொண்டு அரசியல் செய்ய முடியுமா? அது ஒரு காலம், படிக்காத மக்கள் அந்த மக்களுக்கு ஜாதி வெறியை ஊட்டினால், தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களிடம் சண்டைக்கு போவார்கள். இப்போதும் இவர்கள் தான் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஆதாயம் வரும்போது கைகோர்த்துக் கொள்வார்கள் .இதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைமை.
இதை எப்படி வன்னியர் சமுதாயம் தொடர்ந்து இந்த அராஜகங்களையும், அநியாயங்களையும் ஏற்றுக் கொள்ளும் ? சமுதாயம் நம்பியது அதற்கு தகுதியானவர்களாக இவர்கள் இல்லை என்பதை சமுதாயம் அடிபட்டு தெரிந்து கொண்டது .மேலும்,தற்போது எல்லா அரசியல் கட்சிகளிலும், அடியால் வேலைக்கு தகுதியானவர்களுக்கெல்லாம் ஏதோ ஒரு பொறுப்பை கொடுத்து, இவர்கள் தான் கட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.இதில் படிக்காமலே பட்டத்தை போட்டு காட்டுபவர்களும் உண்டு .ஆனால், தகுதி என்று ஒன்று இருக்கும் அல்லவா? அது தேடினால், இவர்களிடம் இருக்காது. இப்படிப்பட்டவர்களை படித்த சமுதாயம் எப்படி ஏற்றுக்கொள்ளும்? இவர்கள் சண்டைக்கு தான் தகுதியானவர்களே, தவிர, அரசியலுக்கு தகுதியானவர்கள் அல்ல.
மேலும், அரசியலுக்கு தகுதியானவர்கள் ஒரு காலத்தில் இந்த பாட்டாளி மக்கள் கட்சியில், சமுதாயத்திற்காக உயிரை கொடுப்பவர்கள் எல்லாம் இருந்தார்கள்.சமுதாயத்திற்காக உயிரையும் கொடுத்தார்கள். ஆனால், உயிரைக் கொடுத்தவர்களுக்கு ராமதாஸ் எந்த உதவியும் செய்யவில்லை . அதனால், ராமதாஸின் செயல் சமுதாயத்திற்கு எதிராக இருந்த ஒரே காரணத்தால், அவர்கள் எல்லாம் மூட்டை கட்டி வெளியே வந்து விட்டார்கள். இப்போது எல்லாம் சமுதாயத்தை ஏமாற்றும் கும்பல், ஜாதியை விற்று பிழைக்கின்ற கும்பல், இதுதான் கட்சிக்குள் இருந்து கொண்டு, சமுதாயத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது .
இதையெல்லாம் சமுதாயம் புரிந்து தான் வாக்களிக்கும் .புரியாமல் வாக்களிக்காது. ஏமாந்தது போதும் என்று தான் நினைப்பார்களே, தவிர, தொடர்ந்து ஏமாந்து கொண்டிருக்க மாட்டார்கள். எந்த ஒரு கட்சியாக இருந்தாலும், அது ஜாதி கட்சியாக இருந்தாலும், அரசியல் கட்சியாக இருந்தாலும், இந்த சமுதாயத்தை இவர்கள் மதிக்கவில்லை என்றால், சமுதாயம் இவர்களை மதிக்காது. அதேபோல், அரசியல் கட்சியாக இருந்தாலும், அவர்கள் மக்களை மதிக்கவில்லை என்றால், மக்களும் அவர்களை மதிக்க மாட்டார்கள் .மேலும்,
தமிழ்நாட்டு பிஜேபி அரசியல் கட்சியினர் இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் நடுத்தர வர்க்கத்தையும், ஏழை, எளிய மக்களையும் நிர்வாகிகள் மதிப்பதில்லை. இங்கும் ஜாதி அரசியல் மறைமுகமாக ஓடிக்கொண்டிருக்கிறது .காரணம் இவர்களுடைய கணக்கு அண்ணாமலை அரசியல் செய்கிறார். அதை வைத்து ஜெயிக்கலாம். அடுத்தது மோடி செய்கிறார் என்று சொல்லி மக்களிடம் வாக்கு பெற முடியும் என்று குருட்டு கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு.
நீங்கள் கட்சிக்கு என்ன செய்தீர்கள்? மக்களுக்கு என்ன செய்தீர்கள்? இதுதான் மக்களின் கேள்வி ?நீங்கள் மக்களை மதிக்கவில்லை என்றால், மக்கள் உங்களை மதிக்க மாட்டார்கள் . மேலும் ,சாமானியர்களின் பத்திரிகைகளையும், செய்தியாளர்களையும் மதிக்காத போது மக்களை எப்படி மதிப்பார்கள்? என்று தெரிவிக்கிறார்கள்.அது மட்டுமல்ல, இன்றைய அரசியல் மைக்கை பிடித்துக் கொண்டு கத்திக் கொண்டிருப்பதெல்லாம் அரசியல் அல்ல, அரசியல் என்பது மக்களை அடிமைப்படுத்தும் சர்வாதிகாரம் அல்ல, அவர்களின் உணர்வுகளை மதிப்பது தான் அரசியல்.
மேலும், கார்ப்பரேட் மீடியாக்களில் கொடுக்கின்ற அறிக்கைகளும்,பேட்டிகளும், மக்கள் பெரிதாக மதிப்பதில்லை .அது ஒரு அரசியல் பந்தா காட்டும் வேலை.அது மட்டுமல்ல ,அரசியலில் பட்டாசு வெடித்து சால்வை போட்டு, 50 ,100 கார் நிக்க வைத்து வேட்பாளர்கள் பின்னால் கொடி பிடித்து, மைக்கில் கத்திக் கொண்டு, கார்ப்பரேட் மீடியாக்கள் ஓடி, ஓடி படம் பிடித்து, வீடியோ எடுத்து காட்டிக் கொண்டிருக்கும் பந்தா அரசியல் செய்ததை பார்த்து வாக்களித்த மக்கள், அது அந்த காலம். இது அப்படியே நேர் எதிர் மாற்றமாக இருக்கப் போகிறது. இந்த காலம் .எனவே, மக்கள் தொடர்ந்து ஏமாளிகளாக இருக்க மாட்டார்கள் என்பதை எல்லா அரசியல் கட்சிகளும், புரிந்து கொள்ள வேண்டும்.மேலும்,
இந்த தேர்தல் ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறேன். இது அரசியல் கட்சிகளுக்கு கடினமான தேர்வு. இந்த தேர்வில் தகுதியானவர்கள் மட்டும்தான் தேர்வில் வெற்றி பெற முடியும். அதிலே கடும் போட்டியாக தான் ஒவ்வொரு தொகுதிக்கும் உள்ளது. அதிலும், திமுக அண்ணாமலையை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று முனைப்போடு செயல்படுவதாக தெரிய வந்துள்ளது .அது அரசியல் போட்டி . இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது, தோல்வி அடைவது கடும் போட்டியாக இருப்பதற்கு காரணம்? வாக்காளர்கள் இந்த அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள்.
எப்படி இந்த பத்திரிகை, தொலைக்காட்சிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லையோ ,அதே போல் தான், இந்த அரசியல் கட்சிகள் மீதும் நம்பிக்கை இழந்து விட்டார்கள் .ஒரு பக்கம் ஊழல், இன்னொரு பக்கம் ரவுடிசம், விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு,போதைப் பொருள்பிரச்சனை, அரசு ஊழியர்கள் பிரச்சனை,கனிம வள கொள்ளை, இவ்வளவும் திமுக ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, அதைப்பற்றி நல்ல விதமாக சில கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் மக்களிடம் சொன்னால், முட்டாள்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், விவரமானவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா? இது தவிர, பண பலத்தால் ஜெயிக்க முடியும் என்பதுதான் இந்த திமுக, அதிமுக கட்சியினரின் நம்பிக்கை. இன்று அந்த நம்பிக்கையே ஆட்டம் கண்டுள்ளது.
ஏனென்றால் பணத்தை வாங்கிக் கொண்டு யாருக்கு போடுவானோ என்ற நிலையில் வாக்காளர்களின் நிலைமை இருக்கிறது. இவர்களெல்லாம் (கட்சிக்காரர்களை) ஏதோ ஒரு பெரிய தியாகி போல நினைப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் .இந்த இளைய சமுதாயம் அதுவும் படித்த இளைஞர்கள் துளி கூட மதிக்கவில்லை. அவர்கள் பட்டியல் போட்டு பார்க்கிறார்கள் .இந்த கட்சி என்ன செய்தது? அந்த கட்சி என்ன செய்தது? அதனால், இவர்களுடைய பழைய பஞ்சாங்கம், பழைய கட்சி வரலாறுகளை கேட்டுக் கொண்டு, இவர்கள் போடுகின்ற நல்லவர்கள் வேஷங்களை பார்த்துக் கொண்டு ஏமாந்து கொண்டிருக்க மாட்டார்கள்.
அதனால், எல்லா மக்களும் மாற்றங்கள் தேவை என்று தான் நினைக்கிறார்கள். ஆனால், அந்த மாற்றத்திற்கான தகுதியான ஆட்கள் யார் என்பது தான் இன்னும் தமிழ்நாட்டு மக்களின் கேள்வியாகவே உள்ளது? பிஜேபி ஊடகங்களில் அந்த பிம்பத்தை காட்டுகிறது. தமிழ்நாட்டில் ஊடக பிம்பம் எடுபடாது. அதிலும், குறிப்பாக இந்த கார்ப்பரேட் ஊடகங்களை மக்கள் நம்ப தயாராக இல்லை. நீங்கள் சொல்லி மக்கள் எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கு எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், வெற்றி நடை போடுகிறது தமிழகமே என்ற விளம்பரகள் வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது.
அதனால், மக்கள் தொடர்ந்து அரசியல் கட்சிகளிடம் ஏமாறுவார்கள் என்று கனவு காணாதீர்கள்.இங்கே செயல்பாடு என்ன? உங்களுடைய தகுதி ,நேர்மை, ஒழுக்கம் என்ன? இதையெல்லாம் மக்கள் கால்குலேஷன் போட்டு வைத்து தான் இனி அரசியல் கட்சிகளில் யார் வந்தாலும், அவர்களுக்கு சமுதாயம் வாக்களிக்கும். பல தொகுதிகளில் நோட்டாவின் வாக்கு இந்த முறை அதிகமாகவே இருக்கும்.எனவே ,அரசியல் கட்சிகள்
அடியாட்களுக்கு எல்லாம் கட்சியில் பொறுப்பு கொடுத்து விட்டு,அவன் மக்களை மதிக்காமல் சண்டைக்கு மல்லு கட்டுவான். தற்போதைய அந்த அரசியல் ஒருபோதும் மக்களிடம் எடுபடாது. மக்களும் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்பதை என்பதை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் புரிந்து கொண்டு சரி செய்து கொள்வார்களா?