
பிஜேபி தமிழ்நாட்டில் வளர வேண்டும் என்று மத்தியில் ஆளுகின்ற கட்சியாக அதனுடைய அதிகாரத்தை பயன்படுத்தி, எவ்வளவோ முயற்சித்தும், இங்கு வளர்ச்சியை கொண்டு வர முடியவில்லை.
இதற்கு என்ன காரணம் ?என்று அவர்களுக்கும் சரியாக புரியவில்லை.மேலும்,தமிழ்நாட்டுக்கும் ,டெல்லி அரசியல் பிஜேபி தலைவர்களுக்கும், இருக்கக்கூடிய ஒரே பிரச்சனை லாங்குவேஜ் பிராப்ளம் (language problem ) அவர்களுக்கு தமிழ் நன்றாக தெரிந்திருந்தால், இந் நேரம் யாரும் பாஜகவில் சரியான நிர்வாகிகளை தேர்வு செய்து பணியமர்த்திருப்பார்கள் .

மேலும், அவர்களிடம் பேச யாருக்கு இந்தி தெரியுமோ ,அவர்கள் மட்டுமே அவர்களிடம் பேசி, அவர்கள் சொல்வது தான் உண்மை என்று கேட்டுக் கொள்கிறார்கள். அடுத்தது, இங்கே ஃபீல்டு ஒர்க்கர் அதாவது அரசியலில் மக்கள் பணியாற்ற கூடியவர்கள் இல்லை. அதற்கேற்ற தகுதியானவர்களுக்கு பொறுப்புக்களை கொடுப்பதில்லை.
மேலும்,யாருக்கெல்லாம் மைக்கை பிடித்துக் கொண்டு ,பேசத் தெரிகிறதோ ,அவர்களுக்கு இவர்கள் பொறுப்புக்களை கொடுத்து விடுகிறார்கள். மற்றொரு பக்கம் யார் டெல்லியில் இருந்து வந்தால், காக்கா பிடிக்க தெரிகிறதோ ,அவர்களுக்கு பொறுப்பை கொடுத்து விடுகிறார்கள்.

அப்படிதான் எல்.முருகன் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழ்நாட்டு கோவிலுக்கு வரும் போது, இவரை அவருக்கு கைடாக பிஜேபி நியமிக்கிறார்கள். இருவருக்குள் ஒரு ரகசிய ஜாதி பந்தம் உருவானது.
அதைப் பிடித்துக் கொண்ட முருகனுக்கு பிரதமர் மோடி இடம் ராம்நாத் கோவிந்த் ,இவருக்கு அமைச்சர் பதவி கொடுங்கள் என்று பரிந்துரை செய்கிறார். மோடியும் அவருடைய பேச்சை தட்ட முடியாது என்று இவருக்கு 10 ஆண்டுகளாக அமைச்சர் பதவி கொடுத்து, அதற்கு மதிப்பு மரியாதை இல்லாமல் ஆக்கிவிட்டார்.

மேலும்,ஒரு அமைச்சருக்குள்ள தகுதி என்ன ?என்று தெரியாதவர்களிடம் பதவியை கொடுத்து, அதில் அவர் எந்த செயல்பாடும் இல்லாமல், உட்கார வைப்பது எதற்கு? ஒரு பத்திரிக்கை தகுதியோ, அது சம்பந்தமான நாலெட்ஜோ ,இல்லாதவரை எதற்காக? அவருக்கு பத்திரிக்கை துறையை கொடுக்கிறீர்கள்?

மேலும்,அதே போல் தான் கட்சியிலும் கமலாலயத்தில் மாநில பொறுப்பில் ஊடகப் மாநில பொறுப்பாளராக ரங்காயிலு என்பவரை நியமித்திருக்கிறார்கள். இப்படி எல்லாம் பொறுப்புக்களை கொடுத்து, அவர்களை பணி செய்ய சொன்னால், அவர்களுக்கு என்ன தெரியும்?
அவர்கள் வந்த வரைக்கும் பிஜேபியை வைத்து வருமானத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த வேலையும் கடமைக்கு செய்தால், அதில் எந்த முன்னேற்றமும் இருக்காது .அதுதான் பிஜேபியில் தற்போது இருப்பவர்களின் நிலைமை.

மேலும்,அண்ணாமலை இன்னொரு youtuber. அவர் ஐபிஎஸ் படித்ததினால் பல விஷயங்கள் தெரியும். இது தவிர சில பத்திரிகைகளில் பணியாற்றுபவர்களின் தொடர்பும் இருக்கிறது. அதை வைத்து மைக்கிப் பிடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்.
அதனால், தமிழ்நாட்டில் பிஜேபி வளர வேண்டும் என்றால் சரியான மாநில தலைவரை பொறுப்பில் அமர்த்தப்பட வேண்டும். நைனார் நாகேந்திரன் பொறுப்பேற்றதிலிருந்து அவராலும் எந்த மாற்றமும் செய்ய முடியவில்லை.

அந்த அளவுக்கு ஏற்கனவே இருப்பவர்கள் முட்டுக்கட்டை. சொல்லப்போனால் கேசவ விநாயகம் தமிழ்நாட்டில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றினால் பிஜேபி மாற்றங்களை கொண்டு வர முடியும்.
அதேபோல் பழைய ஆட்களான தமிழிசை சௌந்தரராஜன் எல்லாமே மைக்கை பிடிப்பவர்களாக தான் இருப்பார்கள். ஏதாவது ஒரு பிரச்சனையை கொண்டு சென்றால், அதை தலைமைக்கு கொண்டு சென்று ,அந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்று ஒருவர் கூட நினைப்பதில்லை. பிறகு எப்படி இந்த கட்சி தமிழ்நாட்டில் வளரும் ஆட்சியைப் பிடிக்கும்?

அடுத்தது திமுக, அதிமுக கட்சியினர் வாய்ச்சவடால் மிக்கவர்கள் .அதிலும் திமுக மிக, மிக வாய்ச்சவடல்காரர்கள் . அவர்கள் இதற்கு மதவாத கட்சி என்று முத்திரை குத்தி வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் ,
அடித்தட்டு மக்களுக்கு அரசியல் தெரியாதவர்கள். தெரிந்தவர்களிடம் அவர்கள் பேச மாட்டார்கள். அவர்களுடைய லாங்குவேஜ் சீப்பஸ்ட் அரசியல் லாங்குவேஜ் . DMK political language is very cheapest language. அந்த அளவிற்கு தரம் தாழ்ந்து பேசக்கூடிய ஒரு கூட்டம். அது அரசியல் தெரியாதவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ,அரசியல் தெரிந்தவர்கள் எப்படி பேச வேண்டும் என்று நாகரீகம் தெரிந்தவர்கள். இங்கே தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் அதற்கு தகுதியான, திறமையான, அதிர்ஷ்டமிக்க ஒரு தலைவரை தேர்வு செய்ய வேண்டும்.

இப்போது எப்படி விஜயின் ஜாதகம், திமுக ஸ்டாலினையும், எடப்பாடி பழனிசாமியும் வீழ்த்தி ,விஜயை முதலமைச்சராக உட்கார வைத்துள்ளதோ, அதேபோல், விஜய்க்கு போட்டி போடக்கூடிய ஜாதக அமைப்பு உள்ளவர்களை, திறமை உள்ளவர்களை ,தகுதி உள்ளவர்களை கொண்டு வந்து, பிஜேபி தமிழ்நாட்டில் மாநில தலைவராக நியமிக்க வேண்டும்.
அதுவரை தமிழ்நாட்டில் பிஜேபிக்கு எந்த அரசியல் மாற்றமும் ஏற்படுத்த முடியாது. தவிர நாயினார் நாகேந்திரன் எளிமையான ஒரு தலைவராக இல்லை.
முதன் முதலில் அண்ணாமலைக்கு தலைவர் பொறுப்பு கொடுத்த போது, நான் அவரை பார்க்க சென்றேன். அண்ணே வாங்க என்று நன்றாக மரியாதை கொடுத்து பேசி செல்பி எடுத்துக் கொண்டோம் .
பிறகு அவருக்கு கூட்டம் அதிகமாக மணிக் கணக்காக காக்க வைக்கிறார். இந்த பந்த அரசியல் எல்லாம் விட்டு ,விட்டு மக்களின் அரசியல், எளிமையான அரசியல்வாதி மக்களை சந்திக்க கூடிய அரசியல் செய்யாமல் ,பிஜேபி தமிழ்நாட்டில் வளர முடியாது.
இதை டெல்லி தலைவர்கள் புரிந்து கொண்டால் சரி.