அதிமுக , திமுகவுக்கு ,மாற்று அரசியலின், புதிய அத்தியாயத்தை தொடங்கும்! தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் மற்றும் முதல்வர் விஜய்! – பதவி ஏற்பு விழாவில் அவரது பேச்சு .

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டில் இதுவரை அதிமுக, திமுக ஆட்சியில் ஊழலும், லஞ்ச லாவண்யங்களும், புரையோடிப் போய் கிடந்தது .

அதுமட்டுமல்ல, சட்டம், ஒழுங்கு பிரச்சனை, போதைப்பொருள் கலாச்சாரம், இப்படி பல விஷயங்கள் மக்கள் சகித்துக் கொண்டு தான், அவர்களுடைய ஆட்சி காலத்தை தள்ளி வந்தார்கள்.

அதற்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் மற்றும் முதல்வர் விஜயின் ஆட்சி இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

மேலும்,அவர் பதவியேற்ற முதல் நாளே எனது ஆட்சியில் வெளிப்படை தன்மை இருக்கும். இங்கு ஒரு பவர் சென்டர் தான்.அங்கு ஒரு பவர் சென்டர், இங்கு ஒரு பவர் சென்டர், என்று எதுவும் இருக்காது .ஒரே பாவர் சென்டர் தான் என்று சொல்லிவிட்டார். அது மட்டுமல்ல,

நாம் அரசியலில் ஜெயித்து விட்டோம், என்று ஆட்டம் போடலாம் என்று உங்கள் மனதில் இருந்தால், உடனே அதை எரேஸ் பண்ணி விடுங்கள் என்று எம்எல்ஏ, மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் அனைவருக்கும் இந்த வார்த்தை ஒரு சூசகமான ஒரு வார்த்தையாக மேடையிலே முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும்,அவருடைய ஆட்சி ! வெளிப்படையான ஆட்சியாக தான் இருக்கும். அதில் ஒன்றும் மாற்று கருத்து இல்லை. அது மட்டுமல்ல, என்னால் என்ன செய்ய முடியுமோ, அதை நிச்சயம் செய்வேன்.

தவிர,இங்கே கடந்த ஆட்சியில் கஜானாவை காலி செய்து, 10 லட்சம் கோடி கடனும், வைத்து விட்டு போயிருக்கிறார்கள். இனிமேல் தான் அதை போய் பார்க்கணும் .எது? எது? எந்தெந்த நிலைமையில் இருக்கிறது? என்று எனக்கே தெரியவில்லை.

அதனால், தமிழ்நாட்டின் நிலைமை என்ன ?என்று தமிழ்நாட்டு மக்களுக்கு வெள்ளை அறிக்கையாக வெளியிட இருக்கிறேன். இருப்பினும், ஏதோ பொடி வைத்து பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம்.

எல்லாவற்றையும் சரி செய்து ,தமிழ்நாட்டு மக்களுக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ ,அதை அதிகப்படியாக செய்ய நினைக்கிறேன். மக்களுடைய பணத்தை ஒரு போதும், தொட மாட்டேன்.மேலும்,

என்னை சினிமாவில் வெற்றி பெற வைத்தீர்கள். அதையும் தாண்டி அரசியலில் எனக்கு ஒரு இடத்தை கொடுத்து, தமிழக மக்கள் என்னை வெற்றி பெற வைத்த உங்களுக்கு என்றும் மறக்க மாட்டேன்.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி மக்களுக்கும், நான் பாதுகாப்பு கொடுப்பேன். முதல்வர் விஜயின் ஆட்சி! தமிழ்நாட்டில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கும் என்பது உறுதி .

மேலும், பதவியேற்பு முடிந்ததும், இன்றைய தலைமைச் செயலகத்தில் உள்ள அவருடைய இருக்கையில் அமர்ந்து ,முதல் கையெழுத்து 200 யூனிட் இலவசம் மின்சாரம், இரண்டாவது கையெழுத்து சிங்கப்பெண் பாதுகாப்பு படை அமைக்க கையெழுத்து, மூன்றாவது மாவட்டம் தோறும் போதைப்பொருள் ஒழிப்பு கையெழுத்து, இது மூன்றுமே முக்கியமாக தேர்தல் அறிக்கையில் அவர் குறிப்பிடப்பட்ட ஒன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *