தாராபுரம் மதுராந்தகம் இடைத் தேர்தல் ! தமிழக வெற்றி கழகத்திற்கு திமுக,அதிமுக டஃப் கொடுக்கப் போகிறதா?- அரசியல் ஆய்வாளர்கள் கருத்து .

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி மோட்டார் உலகம் ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

நாளுக்கு நாள் மகளிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது அதை மறுக்க முடியாது.

இருப்பினும், தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல், தமிழக வெற்றி கழகத்திற்கு மிகவும் கடுமையான போட்டியாகத் தான் இது இருக்கப் போகிறது .

மேலும்,விஜயின் ஆட்சி! மக்களுக்கு இன்னும் 100% நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. இருப்பினும், அதிமுக, திமுகவுக்கு இது பரவாயில்லை அப்படிதான் மக்கள் நினைக்கிறார்கள்.

தவிர,இதில் வேட்பாளரின் தேர்வு மிக முக்கியமானது. இங்கே, அதிமுகவில் வெற்றி பெற்ற வேட்பாளர் மரகதம் குமரவேல் தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ,தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இது மக்கள் மத்தியில், ஒரே வேட்பாளர் தனது அதிமுகவின் வெற்றியை ராஜினாமா செய்து விட்டு, தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டு, மீண்டும் அதே தொகுதியில் களமிறங்குகிறார்.

இது மக்கள் மத்தியில், அரசியல் தெரிந்தவர்கள் மத்தியில், பேசு பொருளாக மாறி இருக்கிறது. கடந்த முறை வாக்கு சதவீதம் அதிமுகவுக்கு இருந்த செல்வாக்கு ,இந்த முறை வேட்பாளர்கள் பொறுத்து ,இந்த வாக்கு சதவீதம் மாறலாம். அல்லது குறையலாம்.

மேலும்,இது அதிமுகவின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து போட்டியிடுவது, ஜனநாயகத்தை ஏமாற்றும் வேலை என்றுதான் மக்களின் பேச்சு.

அதேபோல் தான், தாராபுரம் சட்டமன்ற தொகுதியும், விஜய்க்கு அது டஃப் கொடுக்கப் போகிறது. காரணம் கடந்த முறை திமுக இனி வரக்கூடாது என்று வாக்களித்து விட்டார்கள். இப்போதும் திமுக மூன்றாவது இடத்திற்கு தான் இதில் தள்ளப்படும்.

மேலும் , இந்த இடைத்தேர்தலில் வேட்பாளர்களின் தகுதி, அவர்களுடைய அரசியல் செல்வாக்கு, சேவை, இது அத்தனையும், இந்த தேர்தலில் எதிரொளிக்கும்.

அதனால், இந்த இடைத் தேர்தல் மட்டும் திமுகவுக்கு மைனஸ் இல்லை. இனி எல்லா தேர்தலிலும் மைனஸ் என்றாலும் ,அதிமுக கடும் போட்டியை ஏற்படுத்துமா? என்ற கருத்து அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எனவே,இது வேட்பாளர்கள் அவர்களுடைய தனிப்பட்ட செல்வாக்கு, மக்கள் சேவை, குற்றப் பின்னணி, ஊழல் பிரச்சனை, இதில் முக்கிய கருத்துகளாக வாக்காளர்கள் மத்தியில் வேட்பாளர்கள் ஆய்வு செய்யப்படுவார்கள் என்பது இந்த ஆய்வின் முடிவு. மேலும், இந்த இடைத்தேர்தல் சினிமா ரசிகர்கள் முடிவு செய்ய முடியுமா?

ஒரு வரியில் சொன்னால்!
இரு தொகுதிகளிலும் இந்த இடைத்தேர்தலின் மிகப்பெரிய “வாக்கு மாற்று காரணி” அதிமுகவிலிருந்து தவெகவுக்கு சென்றுள்ள முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்தான். அதனால், 2026 பொதுத்தேர்தல் முடிவை !அப்படியே நகலெடுத்து இடைத்தேர்தல் முடிவை கணிக்க முடியாது.மேலும்,

(தாராபுரம்:
சத்யபாமாவின் தனிப்பட்ட செல்வாக்கு இந்தத் தேர்தலில் அது வெற்றியாக மாறுமா? தவிர,அதிமுகவின் பழைய 80,248 வாக்குகள் எந்த அளவுக்கு தவெகவுக்கு மாறப் போகிறது ?என்பதுதான் இந்த தேர்தல் முடிவு தீர்மானிக்கக் கூடியது.மேலும்,
மதுராந்தகம்!
இங்கு தவெக வேட்பாளர் மரகதம் குமாரவேலுக்கு தொகுதியில் ஏற்கெனவே இரண்டு முறை வெற்றி பெற்ற, தனிப்பட்ட தேர்தல் அடித்தளம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அதே வாக்கு சதவீதம் தமிழக வெற்றி கழகத்தின் மூலம் பெற முடியுமா? ஆதலால், இரண்டு தொகுதிகளிலும், வேட்பாளர்களுக்குள் ஒரு கடும் போட்டி!
)

இதில் யாருக்கு வெற்றி என்பது தான் கணிக்க முடியாத ஒரு தேர்தல் ….!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *