திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த பரந்தூர் விமான நிலையத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தும், திமுக ஏன் ?இதை செயல்படுத்த அவசரப்படுகிறது?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பயணங்கள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம் வெளிநாட்டு-செய்திகள்

திமுகவின் ஆட்சி போன பிறகும் பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஏன்? இதில் இவ்வளவு அவசரப்படுகிறது? பரந்தூர் விமான நிலையம் அமைத்தால், அதனுடைய நிர்வாகம் திமுகவுக்கு பலன் , அடுத்தது சபரீசன் இதில் ஆதானி குழுமத்துடன், ரகசிய ஒப்பந்தமும் , பல கோடி பணமும் கைமாறி இருக்கிறது என்ற தகவல்.

மேலும்,திமுக எப்போதும் ஒரு திட்டத்திற்கு குரல் கொடுக்கிறது என்றால், அதற்கான பலன் இல்லாமல், அவர்கள் கொடுக்க மாட்டார்கள். அதற்காக தான் எத்தனை ஆயிரம் விவசாயிகள்? தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்தாலும், தங்களுடைய பூர்வீகத்தை இழந்தாலும், இவர்கள் ஏரோப்ளேனில் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் சாமானிய அடித்தட்டு மக்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டும் .

இதற்காக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் மற்றும் தற்போதைய முதல்வர் ஜோசப் விஜய் எதிர்ப்பு தெரிவித்து,முதன் முதலில் குரல் கொடுத்தவர் .

அதனால், இந்த பரந்தூர் விமான நிலையம் வராமல் தடுத்து நிறுத்தி சுற்றுச்சூழலையும் ,விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும். இந்த திட்டத்தை வேறு எங்காவது கொண்டு போய் அதை நிறைவேற்ற சொல்லுங்கள் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கை.

அதுமட்டுமல்ல, இதனால் எத்தனையோ விவசாயிகள் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், சுற்றுவட்டார பகுதிகளில் இந்த விமான நிலையம் அமைக்கப் போகிறார்கள் என்று நிலத்தை வாங்கி பினாமி பெயரில், திமுக ஆட்சியில் எம் எல் ஏ, எம் பி ,மந்திரிகள் போட்டு வைத்திருக்கிறார்கள். இதை சிபிஐ விசாரிக்காது.

ஏனென்றால், மத்திய அரசுக்கும், விவசாயிகளின் நலன் முக்கியமல்ல, கார்ப்பரேட் தான் முக்கியம் என்கிறார்கள். கார்ப்பரேட் ஆல் மக்கள் பயனடைகிறார்களா? இல்லை அவர்களால் சமூக மாற்றமா? இல்லை,அவர்களுடைய உழைப்பால் சமூக மாற்றமா ? மக்களால் தான் கார்ப்பரேட்டுகள் பயனடைகிறது.

உதாரணத்துக்கு எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகளும், இந்த கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கும், ஒரு இடைவெளியான போராட்டம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

மேலும், இந்த கார்ப்பரேட் ஆல் சமூக மாற்றத்திற்கு பயனா? இல்லை அவர்களுக்கு பயனா? இல்லை ஆட்சியாளர்களுக்கு பயனா? இல்லை ஊழல்வாதிகளுக்கு பயனா? இதற்குள் தான் கார்ப்பரேட் இருக்கிறது. இதுதான் கார்ப்பரேட் பத்திரிகைகளின் நான்காவது தூண் லட்சணமா?

தவிர,தற்போது மக்கள் அதிகாரத்தில் ஒரு செய்தி போட்டால், இரண்டு நாட்கள் கழித்து நேற்றிரவு ,ஒரு தொலைக்காட்சியை பார்க்கிறேன். அதை அடிப்படையாகக் கொண்டு ,மைக்கை நீட்டி ,அதைப் பற்றி மக்களிடையே கருத்து கேட்டு, கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,இதே கார்ப்பரேட் பத்திரிகைகள் தான் ,திமுக ஆட்சியில் ,திமுக தான் வரும். திமுக தான் நல்லாட்சி கொடுத்தது. திமுகவின் அத்தனை ஊழல்களை நியாயப் படுத்தியது. ஆனால்,_அதை எதிர்த்து போராடியது குறிப்பிட்ட சில சமூகநலன் பத்திரிகைகள். எனவே! மக்களுக்கும், தமிழக அரசுக்கும், புரிகிறதா?உண்மை என்ன என்று ….?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *