
தமிழக முதல்வர் விஜய் தொகுதி மறுசீரமைப்புக்கு மத்திய அரசு கொண்டு வரும் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டமன்றத்திலே தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.
இந்தத் தீர்மானம் தமிழகத்தின் உரிமைப் பிரச்சனை என்று தெரிவித்துள்ளார். உண்மைதான் ஏனென்றால் தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிக அளவில் இருந்தால் தான் ,தமிழகத்தின் உரிமை பிரச்சினைகளுக்கு டெல்லியில் குரல் கொடுக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

மேலும்,இதில் எதிர்க்கட்சியான திமுக இதை வரவேற்று உள்ளது. அதிமுக, பாமக, பாஜக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் ,இந்த மசோதாவில் என்ன இருக்கிறது ?என்று தெரியாமல் தமிழக வெற்றிக்கழகம் அவசரம் காட்டுவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தவிர, மசோதா பரிசீலனையில் தான் உள்ளது. வந்த பிறகு தான் அதை ஆய்வு செய்ய முடியும் .அல்லது அது பற்றி பேச முடியும் என்று பாஜகவின் எம்எல்ஏவும் தெரிவித்துள்ளார். இப்படி தொகுதி மறு சீரமைப்பு மசோதாவுக்கு ஒரு முடிவு வராமலே, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும்,இது நன்மையா? தமிழகத்திற்கு தீமையா ?என்பது மசோதா வெளி வந்த பிறகு தான் தெரியும். இது தவிர, நீட் எதிர்ப்பு மசோதா, தமிழ்த்தாய் வாழ்த்து முன்னுரிமை, இது எல்லாம் சட்டமன்றத்திலேயே தீர்மானமாக, மத்திய அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதில் தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழகத்தின் உரிமை பிரச்சனை அதற்கு முன்னுரிமை கொடுப்பது அவசியமானது. அதற்கு அடுத்தது நீட் தேர்வு என்பது ஏழை மாணவர்களை வைத்தும், பணக்கார மாணவர்களையும் வைத்தும், அரசியல் கட்சிகள், அரசியல் செய்யக்கூடிய களமாக ,இன்றைய நீட் தேர்வு அமைந்துவிட்டது.

இதற்கு முக்கிய காரணம் ,மாணவர்கள் இடையே நீட் பற்றிய புரிதல் இல்லாமல் இருப்பது தான் இந்த அரசியலுக்கு முக்கிய காரணம் . மேலும்,அரசியல் கட்சிகள் !நீட் இல்லாமல் எத்தனை ஏழை, நடுத்தர மாணவர்கள், அப்போது டாக்டர்களாக உருவாகி இருக்கிறார்கள் ?என்பதை சரியான புள்ளி விவரம் மாணவர்களிடம் கொடுக்க வேண்டும்.

மேலும், நீட் வந்த பிறகு எவ்வளவு ஏழை, நடுத்தரமானவர்கள் மருத்துவர்களாக ஆகியிருக்கிறார்கள்? என்பதை சரியான புள்ளி விவரம் தர வேண்டும்.
அதுவரை, இந்த நீட்டைப் பற்றிய அரசியல்! தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் ஓட்டிக் கொண்டு தான் இருக்கும் என்பதை மாணவர்கள் புரிந்து கொண்டால் சரி.
