திமுக ஆட்சியில்! நல்லவர்கள் வாழ முடியுமா? – கொடியவர்கள் கொடி கட்டி பறந்தார்கள் .

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் விவசாயம் வெளிநாட்டு-செய்திகள்

திமுக ஆட்சியில் எவ்வளவோ ஊழல், எவ்வளவோ லஞ்ச லாவண்யகள், நடந்தும் ஊடகங்கள் வாய் மூடிக்கொண்டு, மௌனமாக இருந்தது.

மேலும் ,சவுக்கு சங்கர் போன்ற youtuber ர்கள், சொல்ல முடியாத துன்பங்களை அடைந்தார்கள். நீதிநெறி தலைகீழாக மாறி இருந்தது. நீதிபதிகள் சொல்லும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து கொண்டிருப்பார்கள்.

அதுவே இவர்களுடைய தவறு என்று ஊழல் வழக்கு வந்தால் ,அங்கே நீதிபதிகளின் காலில் விழுந்து, அதற்கு மேல்முறையீடு செய்து கொண்டு ,சட்டத்தை ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள்.

மேலும் மத்திய அரசின் அமலாக்க துறையை சிபிஐ ரெய்டு வருமான வரித்துறை ரெய்டு அத்தனையும் எங்களை பழிவாங்குவதற்கு மத்திய அரசு ஏவுகின்ற ஒரு கேடயம் என்றார்கள். அப்போதும் ஒன்று சமரசம் செய்து விடுகிறார்கள் .

இல்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு போடுகிறார்கள் அந்த வழக்கை பல ஆண்டுகாலம் இழுத்தடிக்கிறார்கள் இப்படி சட்டத்தின் ஓட்டைகளை வைத்து ஆட்சி அதிகாரத்தில் ஆட்டம் போடுகிறார்கள்.

மேலும்,மக்களின் அதிகாரத்தை நாம் வாங்கி விட்டோம். அதனால், மக்கள் நம்மை கேள்வி கேட்கக் கூடாது. கேள்வி கேட்டால், நம்முடைய கட்சியின் அடியாட்களை துவைத்து அடக்குமுறை செய்வார்கள். எப்படியோ ஐந்தாண்டு காலம் மக்களுக்கு அது மிகப்பெரிய சோதனையான காலம் அந்த சோதனையான காலத்தை தாண்டி வந்திருக்கிறார்கள்.

அதுதான் ,தமிழக வெற்றி கழகத்திற்கும் ,விஜய்க்கும் கொடுத்த மக்கள் பரிசு. ஆட்சி! அதிகாரம்.மேலும், இருக்கின்ற கட்சிகளில் யார் ?தகுதியானவர்கள் என்று பார்த்து தான் மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். இவர்களுக்கும் ,மக்களின் உணர்வுகள் புரிந்து இருக்கிறது.

இந்த ஊழல்வாதிகளை, ஊழல் என்று சொல்லி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், அதை நியாயப்படுத்துவதற்கு, எவ்வளவு வேண்டுமானாலும்,பேசுவார்கள் என்பதை இனி தமிழகம் பார்க்கத்தான் போகிறது.

மேலும்,நேற்று ஏ.வா .வேலுவின் வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுக்கே ,ஆ ராசா நான் அரசியலைக் கடந்து பேசுகிறேன் என்று தெரிவிக்கிறார். இவர் என்ன அரசியலை கடந்து விட்டார்? அதைக் கடந்து இவர் பேசுகிறாரம்?நீங்கள் தவறு செய்தால், உங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது .

ஆனால், சாமானிய மக்கள் தவறு செய்தால் ,அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு அதிகாரி தவறு செய்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இவர்கள் தவறு செய்தால் ,அது நியாயமானது .இவர்கள் கொள்ளையடித்தால், அது நியாயமானது .சட்டம் இவர்களுக்கு தனி சட்டமா? அதுதான் அரசியல் தெரிந்தவர்களின் கேள்வி?

இதுவே தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் கட்சியினரோ அல்லது விஜயோ செய்திருந்தால் விடுவார்களா? ஒன்று பணத்தை பறிப்பார்கள் இல்லையென்றால் ஜெயிலில் தூக்கி போடுவார்கள்.

ஆனால், இவர்கள் தவறு செய்தால், மட்டும் அது நியாயமானது என்று மக்களையும், இவர்களுக்கு ஏற்ற சில பத்திரிகை ,தொலைக்காட்சிகளும் அதை நியாயப்படுத்திக் கொண்டிருப்பார்கள். ஒருவேளை இவர்கள் தியாகப் பரம்பரை வம்சத்தில் வந்தவர்களோ ,அவர்கள் கூட தவறு செய்தால் ,அவர்களுக்கும் தண்டனை கிடைக்கிறது.

ஆனால் ,இவர்களுக்கு மட்டும் தண்டனை என்பதை அரசாங்கம் கொடுக்கக் கூடாது .அப்படி கொடுத்தால், அது அரசியல் பழிவாங்கும் வேலை. அரசியல் நாகரீகம் கிடையாது.

கொள்ளையடித்த பணத்தை வெளிநாடுகளில் முதலீடு என்ற பெயரில் செய்து மீண்டும் அந்த பணத்தை இங்கே கொண்டு வருவார்கள். எப்படிப்பட்ட விஞ்ஞான ஊழல்?

மேலும் எப்படியோ மக்கள் ஐந்தாண்டு காலம் உங்களால் எவ்வளவு பழி வாங்கப்பட்டார்கள்? அந்த உண்மை தெரியுமா? காலம் தெரியாமல் செய்த பிழைக்கு காத்திருந்து கொடுக்கப் போகிறது !உங்களுக்கான தண்டனை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *