
பொய் வழக்கு பதிவு செய்தால், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட வருவாய் துறை அலுவலரும், விசாரித்து, எஸ்.ஐ. மற்றும் காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்ய சட்டம் கொண்டு வரப்படுமா?
2020 இல் மதுரையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த காரியப்பட்டி கிராமத்தின் தவ கண்ணன் சம்பந்தப்பட்ட காவல்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

விசாரணைக்கு அழைக்கப்பட்ட அவர் மீது வாக்கி டாக்கி திருடியதாக அவர் மீது பொய் வழக்கு பதியப்படுகிறது. பதியப்பட்டது மட்டுமல்ல ,அவரை காவலர்கள் தாக்கியும் இருக்கிறார்கள். பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தவக்கண்ணன் சம்பந்தப்பட்ட காவல்துறை எஸ்ஐ மற்றும் காவலர்கள் மீது மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்கிறார்.

சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணையில் ,அந்த வாக்கி, டாக்கி சம்பந்தப்பட்ட காவல்துறை அலுவலகத்திலே கிடைத்துள்ளது. ஆனால், பாஸ்போர்ட் விண்ணப்பித்த தவக்கண்ணன் மீது பொய் வழக்கு போட்டு அவரை காயப்படுத்தி, சித்திரவதைக்கு உள்ளாக்கி ,அனுப்பி இருக்கும், இந்த கொடுமை காவல்துறையின் அதிக அதிகாரம் மட்டுமல்ல, சட்டத்திற்கு புறம்பானது, அதிகார துஷ்பிரயோகமானது ஒருவர் மீது நடத்த இவர்களுக்கு என்ன அதிகாரம்? மேலும்,
இப்படிப்பட்ட கொடுமையான செயல்களை காவல் துறை யாருக்காக செய்கிறது? ஒன்று தங்களை கேட்பதற்கு ஆள் இல்லை என்று செய்கிறார்களா? இன்னொரு பக்கம் மேலதிகாரியின் அழுத்ததால் செய்தேன் என்கிறார்கள்,அடுத்தது பொலிட்டிக்கல் பிரஷர் அதாவது அரசியல் அழுத்தம் என்கிறார்கள்.
இப்படி சொல்லக்கூடிய இந்த காரணங்கள், சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறை சட்டத்தையே குழி தோண்டி புதைத்து கொண்டிருக்கிறார்கள். சட்டம் என்பது காவல்துறையின் கையில் ஒப்படைக்கப்பட்ட கேடயம் அல்ல. மேலும், இவர்கள் அரசியல் கட்சிகளின் கைக்கூலிகளாக செயல்படுவதற்கு சட்டம் அனுமதிக்க கூடாது. மேலும், காவல்துறைக்கு கொடுக்கப்பட்ட சட்ட விதிமுறைகளை மீறினால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை கொண்டு வரப்பட வேண்டும்.
அப்போது தான் இந்த பொய் வழக்கிற்கு எல்லாம் ஒரு தீர்வு. இதை காவல்துறை எஸ் பி கையில் இருப்பதைவிட, அந்தந்த மாவட்ட ஆட்சியரும், வருவாய்த்துறை அதிகாரியும் இணைந்து இந்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அவர்கள் கையில் அந்த அதிகாரத்தை ஒப்படைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஏனென்றால் காவல் துறை எஸ். பி. அவர்களை காப்பாற்ற தான் பார்ப்பாரே ஒழிய, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்காது. இப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தால், பொய் வழக்கு போடுவதும், அரசியல் கட்சியினர் கூறுகின்ற அழுத்தத்திற்காக இவர்கள் பொய் வழக்கு போடுவதும், அதற்கு ஒரு செக் வைக்கும் வேலையை மத்திய அரசு கொண்டு வருமா?
மேலும்,இதுவும் இல்லை என்றால், சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகத்திடம் இப் பிரச்சனைக்கு வழக்கு பதிவு செய்ய அதிகாரம் வழங்க வேண்டும். அப்போதுதான் நாட்டின் காவல்துறை தங்களுடைய கடமை என்ன ?என்று உணர்ந்து செய்வார்கள் .
இதற்காக நீதிமன்றம் சென்று 2020 இல் நடைபெற்ற சம்பவத்திற்கு 2025 ல், அதற்கு நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருப்பதும் , சட்டப் போராட்டத்திற்கு , நீதிமன்றம் வரை நடந்து கொண்டிருப்பதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகப் பெரிய கஷ்டமான வேலை.
அதனால், சட்டம் என்பது அரசியல்வாதிகளை, அரசியல் கட்சியினரை பாதுகாக்க சட்டம் அல்ல, சாமானிய மக்களையும் பாதுகாக்க சட்டம் இருக்கிறது .

அதை மத்திய அரசு! சாமானிய மக்களையும் ,பாதுகாக்கின்ற வழக்கையில், இந்த சட்டத்தை கொண்டு வந்தால், பொதுமக்கள், அப்பாவி மக்கள், பாதிக்கப்பட மாட்டார்கள்.