அரசியல் கட்சிகளின் வேலை மீடியா மற்றும் சோசியல் மீடியாக்களில் பேசுவது தானா ? செயல்படுவது யார் ?எந்தெந்த கட்சி தமிழ்நாட்டில் மக்களுக்காக செய்தது என்ன அதை பட்டியலிட முடியுமா ?
மக்கள் அதிகாரம் தொடர்ந்து அரசியலில் ஏமாறும் மக்களுக்காக விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பத்திரிக்கை . நேற்று கூட ஒரு சீனியர் வழக்கறிஞரிடம் பேசும் போது, படிப்பறிவு இல்லாத மக்கள் வாழ்ந்த காலத்தில், அரசியலுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்தார்கள்.
ஆனால், தற்போது படித்து பல பட்டங்களை பெற்று, செல்போன், கம்ப்யூட்டர் போன்ற கருவிகளை உபயோகப்படுத்தக்கூடிய அறிவு ஜீவிகளாக இருக்கக்கூடிய மக்கள், இன்று அரசியலில் தகுதியானவர்களை தேர்வு செய்யாமல், தகுதியற்றவர்களை தேர்வு செய்து, அரசியலில் ஏமாந்து கொண்டு இருக்கிறார்கள்.
கட்சி என்பது யாருக்காக ? அரசியல் கட்சி என்பது அந்த கட்சியின் உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் ஆட்சிக்கு வருவது, அரசியல் என்பது கொள்ளையடிக்கும் வேலையா? இல்லை அரசியல் தெரியாதவர்களை அரசியல் கட்சிகள் ஏமாற்றிக் கொண்டிருக்கும் வேலையா? கட்சிக்கு அர்த்தம் தெரியாமல் ரவுடிகள் கட்சி என்கிறார்கள், சமூகவிரோதிகள் கட்சி என்கிறார்கள் ,சோம்பேறிகள் ,வெத்து வெட்டுகள் கட்சி என்கிறார்கள். ஊழல்வாதிகள் கட்சி என்கிறார்கள் ,பொது சொத்துக்களை கொள்ளையடிப்பவர்கள் கட்சி என்கிறார்கள், ஊரை மாற்றுபவர்கள் கட்சி என்கிறார்கள் .
ஆனால், உழைத்து சாப்பிடுபவர்கள் மட்டும்தான் கட்சியை தற்போது சொல்வதில்லை. எல்லோரும் ஏதோ ஒருகட்சி பெயரை சொல்லி, மக்களை மிரட்டலாம் என்றால், இந்த அரசியல் கட்சிகளில் மக்களுக்காக பணியாற்றக் கூடியவர்கள் யார்? என்ற கேள்வி எழுகிறது அல்லவா ? கட்சி என்பது கரைவேட்டி கட்டிக் கொண்டால் கட்சி ,கொடி பிடித்துக் கொண்டால் கட்சி, கூட்டத்துக்கு சென்றால் ,போராட்டத்திற்கு சென்றால் கட்சி ,
இது தவிர, ஒரு கட்சியை இன்னொரு கட்சியின் ஊழல்களை, தவறுகளை பேசிக் கொண்டிருப்பதற்கு கட்சி .ஆனால், மக்களுக்காக ,அவர்களின் குறைகளை கேட்பதற்கு எந்த கட்சியும் இல்லை. அவருடைய கோரிக்கைகளை கேட்டு செயல்படுத்துவதற்கு எந்த கட்சியும் இல்லை. அதற்கு எந்த கட்சி காரனும் இல்லை. ஆனால் ,வாயிலே பேசிவிட்டு போவதற்கு நாட்டில் எத்தனை கட்சிகள் இருக்கிறது? இத்தனை கட்சிகள் இருப்பதால், மக்களுக்கு என்ன பயன் ?ஒரு பயனும் இல்லை. இவர்களால் நாட்டில் ஊழல்கள் அதிகரிக்கிறது .வன்முறைகள் அதிகரிக்கிறது. மக்களிடையே பிரிவினைகள் அதிகரிக்கிறது. சொந்த பந்தங்கள் இடையே வேற்றுமைகள் அதிகரிக்கிறது .இதுதான் தற்போதைய தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் நிலைமை,
இப்படிப்பட்ட கட்சிகளின் உண்மை தெரியாத மக்கள், இந்த அரசியல் கட்சிகளிடம் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். மேலும், இப்படி ஏமாற்றிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் சொல்வதெல்லாம் கார்ப்பரேட் கம்பெனி பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் விளம்பரப்படுத்திக் கொண்டு வருமானம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதாவது
This is mediator job for the public. What is truth? இவர்கள் பேசுவது உண்மையா? அப்படியே உண்மையாக இருந்தாலும் ,சொன்னதை செயல்படுத்தக் கூடியவர்களா ? கட்சியும் கட்சித் தலைவனுமே செயல்படுத்தாதபோது ,தொண்டன் என்று சொல்லிக் கொள்பவர்கள் எப்படி செயல்படுத்துவான்? கொள்கை, லட்சியம், கோட்பாடு, விளக்கம் இதையெல்லாம் பேசி விட்டு, நாடகம் முடிஞ்சதும் கலைந்து விடுவார்கள். அது போல் இன்றைய பத்திரிகை தொலைக்காட்சியில் இவர்கள் பேசிய டிராமாவை பார்த்துவிட்டு மக்கள்திருப்தி அடைந்து கொள்வதா? அல்லது ஊரில், நகரில், இவர்களுடைய பேனர்கள்,
போஸ்டர்கள், சுவற்றில் எழுதி வைப்பதை பார்த்து மக்கள் இவர்களெல்லாம் சமூகப் போராளிகள் என்று நினைத்து படித்து பார்த்துக் கொள்வதா ? அல்லது இவர்கள் உடம்பை பார்த்து சமூகப் போராளி என்று நினைத்துக் கொள்வதா? இதுதான் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் அடையாளமா ? இதுவா? அரசியல் கட்சியின் சமூகத் தொண்டு என்று இதில் அரசியல் தெரிந்தவர்கள் புலம்புகிறார்கள். தெரியாதவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். சிலர் நன்றாக பேசுகிறார்கள் என்று நம்புகிறார்கள் .
சிலர் குடிப்பதற்கு குவாட்டர் மற்றும் பிரியாணி இருந்தால் போதும் என்று இருப்பவர்களும் உண்டு. இப்போது கூட ,ஒரு சாதாரண டிரைவர் என்னிடம் தகுதி இல்லாதவர்களுக்கு எல்லாம் ஓட்டுரிமை கொடுத்து அரசியலில் நாம் ஏமாந்து கொண்டிருக்கிறோம் என்கிறார். அது உண்மை .அடிப்படை தகுதி கூட தெரியாதவர்கள் எல்லாம் வாக்குரிமை கொடுத்தது, அம்பேத்கரின் முட்டாள்தனம். வெள்ளைக்காரன் இந்த நாட்டை அடிமையாக ஆண்டு கொண்டிருக்கும் போது கூட, அவன் பட்டதாரி, படித்தவர்களுக்கு மட்டும்தான் வாக்குரிமை கொடுத்தான்.
இங்கே ஒரு பக்கம் ஜாதி ,அந்த ஜாதிக்கும் விசுவாசம் ஆக இருக்கிறார்களா? இல்லை. ஜாதியை எப்படி எல்லாம் ஏமாற்றலாம் என்று திட்டம் போட்டு பேசி கவிழ்த்து கொண்டிருக்கிறார்கள். அப்படி கவிழ்ந்தது தான் வன்னியர் சமுதாயம். இன்று வரை அந்த சமுதாயம் உழைத்து முன்னுக்கு வர முடியாமல் ஏமாந்து கொண்டிருக்கிறது. இதற்கு 40 ஆண்டு காலம் அரசியல் வரலாறு வேற ராமதாஸ் சொல்கிறார். எப்போதெல்லாம் தேர்தல் வருகிறவருகிறதோ, அப்போது இந்த ஜாதி மக்களிடையே இட ஒதுக்கீடு அரசியல் அறிக்கை விடுவார். அந்த மக்களும் பல காலம் ஏமாந்து, தற்போது இவருடைய பொய் வேஷம் புரிந்து கொண்டார்கள்.
இதே பாணியை கடைப்பிடித்து இன்று எத்தனையோ சங்கங்கள், அமைப்புகள் உருவாகி விட்டது. எதுவும் இந்த சமுதாயத்திற்காக, தன்னலமற்ற சேவை செய்பவர்கள் இல்லை. எல்லாம் செல்போன், சோசியல் மீடியா, பத்திரிக்கை, இதிலே அரசியல் செய்து விட்டு தங்களுக்கு விளம்பரம் இருந்தால் போதும் ,அதை வைத்து நாம் பெரிய கட்சிகளிடம் தேர்தல் வந்தால், பெட்டிகளை வாங்கி பெரும் பணக்காரர்களாக ஆகிவிடலாம் .இதுதான் இந்த ஜாதி கட்சிகளின் தற்போதைய நிலைமை. இதில் ஏமாறும் கூட்டம் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறது .புத்திசாலிகள் சொன்னால் புரிந்து கொள்வார்கள். புரியாதவர்களுக்கு எப்படி சொன்னாலும் புரியாது .
இப்போது ஜாதியை எப்படி ஏமாற்றுவது ? அரசியலில் எப்படி ஏமாற்றுவது? சட்டத்தில் எப்படி ஏமாற்றுவது? சமூகத்தில் எப்படி நல்லவர்கள் வேஷம் போடுவது? அரசியலில் எப்படி நல்லவர்கள் வேஷம் போடுவது ? இந்த நல்லவர்கள் வேஷங்களை சோசியல் மீடியாக்களிலும் ,பத்திரிகைகளிலும், விளம்பர வியாபாரம் செய்வது எப்படி? அதற்கு பதிலாக,
நாட்டில் ஏதோ ஒரு சாதாரண கட்சிக்காரர்கள் முதல் மாவட்ட ,மாநில பொறுப்பாளர்கள் வரை, தன்னால் இந்த சமூகத்திற்கு என்ன நல்லது செய்ய முடியும்? என்பதை சிந்திக்கவில்லை. ஒவ்வொரு நாளும் எவ்வளவு சம்பாதிக்கலாம் ?எந்தெந்த வழியில் சம்பாதிக்கலாம் ?அதற்கு ஏதாவது ஒரு குறுக்கு வழி உள்ளதா? இப்படிதான் அரசியல். இப்படிப்பட்ட அரசியல் கட்சியினருக்கு காவல்துறை முழு ஒத்துழைப்பு தந்து நல்ல வருமானம் பார்க்கிறது.
அரசியல் தெரியாதவர்கள் இவர்கள் எது சொன்னாலும் நம்பி ,ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட அரசியல் கட்சிகளையும், அரசியலையும் பற்றி தெரியாமல் படித்தவர்களும், படிக்காதவர்களும் எல்லோரும் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதன் விளைவு மக்களின் வாழ்க்கை போராட்டத்தில் கொண்டு வந்து சேர்த்துள்ளது என்பது இன்று வரை இவர்களுக்கு புரியாத உண்மை. அரசியல் சிறப்பான முறையில் ஆட்சி நடத்தினால் தான் அந்த மாநிலமோ, நாடோ, நாட்டு மக்களோ முன்னேறுவார்கள்.
அந்த முன்னேற்றம் தொழில் முன்னேற்றம், பணப்புழக்கம் ,உழைப்புக்கேற்ற ஊதியம் ,திறமை, தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, அமைதி, உணவு போன்ற பல்வேறு வாழ்க்கையின் அடிப்படை தேவைகள் அனைத்தும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது புரியாமல், அரசியல் அடிப்படை தகுதி இல்லாமல், வந்ததை தின்று வந்தவரை பேசிக் கொண்டிருக்கும் மக்களுக்கு வாக்குரிமை கொடுத்தது தவறு.
அவர்கள் தகுதியற்றவர்களை தேர்வு செய்து ,நாட்டில் ஊழல் கலாச்சாரம், ரவுடிகள் கலாச்சாரம், இவையெல்லாம் அரசியல் என்று நினைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் புரிந்து கொள்ளாத வரை, அரசியல் என்பது ஏமாற்று வேலை ஆகிவிட்டது .எப்போது புரிந்து கொள்வார்களோ, யாருக்கு தெரியும்? புரிந்து கொண்டால் ஏமாற்று அரசியலில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் .
மேலும் வாக்களிக்க உங்களை வீடு தேடி வந்து கூட்டமாக கட்சியினர் கையெடுத்து கும்பிடுவதும், ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், இவையெல்லாம் தகுதியான அரசியல் கட்சியினரின் வேலை இல்லை .இது அரசியல் தெரியாதவர்களை ஏமாற்றும் வேலை .இது தெரியாமல் சிலர் கொள்ளை அடித்த பணம் என்று வாங்கிக் கொள்கிறார்கள். சிலர் நம்ம பணம் என்று பேசுகிறார்கள். எந்த பணமாக இருந்தாலும் ஓட்டுக்கு பணம் வாங்கி வாக்களித்தால், அவர்கள் வாக்களிக்க தகுதியற்றவர்கள். அவர்களுக்கு அடிப்படை அரசியல் தகுதி இல்லை .
இது பற்றி தேர்தல் ஆணையத்துக்கு பலமுறை செய்திகள் மூலம் மக்கள் அதிகாரம் தெரிவித்துவிட்டது .ஆனால் ,எந்த நடவடிக்கையும் இல்லை. அது ஒரு கடமைக்கு தேர்தல் நடத்தும் வேலை .காலத்திற்கு ஏற்றவாறு,மக்களின் மனநிலைக்கு ஏற்றவாறு, சட்டங்களை மாற்றுவது தான் மனித வாழ்க்கைக்கு ஏற்றது என்பதை தேர்தல் ஆணையம் புரிந்து கொண்டால் சரி .