மகா சிவராத்திரியில்!ஜோதி ரூபமாக இருக்கும்,சிவனை வணங்கினால், அவன் அருள் பெறலாம் .

அரசியல் ஆன்மீகம் உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு பிரபலமான செய்தி மாவட்டம் முக்கிய செய்தி

12 மாதங்களில் வரக்கூடிய சிவராத்திரியை காட்டிலும், இந்த மகா சிவராத்திரி மிகவும் முக்கியமானது.

இந்த மகா சிவராத்திரியில், சிவன் ஜோதி ரூபமாக காட்சி கொடுத்த இடம்தான் திருவண்ணாமலை. அதனால்தான், அந்த மலையே ஜோதி மலை என்று கூட சித்தர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த மலையில் சிவன் ஜோதியானதால், இது பஞ்சபூத ஸ்தலங்களில், அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.

மேலும், திருவண்ணாமலையின் வரலாறே விஷ்ணுவும் ,பிரம்மாவும் தங்களுக்குள் யார் பெரியவர்கள்? என்ற போட்டியில், சிவன் யார்? முதலில் என்னுடைய அடியையும், முடியையும், தொடுகிறார்களோ ,அவர்களே பெரியவர்கள் என்ற ஒரு போட்டிக்குள் திருவண்ணாமலையின் ஆன்மீக தல வரலாறு . மேலும்,

சிவன் திருவண்ணாமலையில் ஜோதியாகி இருக்கும் போது, இரண்டு பேருமே, அவருடைய அடியையும் ,முடியையும் பார்க்க முடியாமல் போகிறது. இப்படிப்பட்ட சிவனின் ஜோதி ரூபத்தை காணாத விஷ்ணுவும், பிரம்மாவும் தங்கள் தோல்வியை ஒத்துக் கொள்கிறார்கள்.

இப்படிப்பட்ட மகா சக்தி வாய்ந்த சிவனின் ஜோதி ரூபம் ஏற்பட்ட நாள் தான், மகா சிவராத்திரி. இந்த நாளில் சிவனை வணங்குவதற்கு மிகப்பெரிய கோடீஸ்வரர்கள், தொழிலதிபர்கள், முதல் சாதாரண ஏழை ,எளிய நடுத்தர மக்கள் வரை சிவனின் அருள் பெற, சிவ ஆலயங்களில் சிவனை வணங்குகிறார்கள். எல்லோருக்கும் சிவனை வணங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதா? நிச்சயம் இருக்காது. அதாவது,

இந்த சிவதரிசனம் அவன் அருள் இல்லாமல், அவனை வணங்க முடியாது. அதாவது, ஒருவன் சிவனை வணங்க வேண்டும் என்றால், சிவன் அருள் இருந்தால் மட்டுமே, சிவனுடைய கோயிலில் காலடி எடுத்து வைக்க முடியும். சிவனை வணங்க முடியும். நீங்கள் திருவண்ணாமலைக்கு போகலாம், வரலாம் ஆனால், சிவன் உத்தரவு இல்லாமல், அண்ணாமலையார் கோயிலில் காலடி எடுத்து வைக்க முடியாது.

மேலும்,திருவண்ணாமலையில் ஏகப்பட்ட மகான்கள் ,சித்தர்கள், ஜீவசமாதிகள் இருக்கின்றன. குறிப்பாக சேஷாத்திரி, ரமண மகரிஷி, யோகி ராம்சுரத்குமார், இப்படிப்பட்ட மகான்களின் ஜீவ சமாதி, திருவண்ணாமலைக்கு வருகின்ற பக்தர்களுக்கு, இவர்கள் சூட்சம வடிவத்தில் அருள்பாளித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

தவிர, இந்த சித்தர்களும், மகான்களும் பிரபஞ்சத்தோடு கலந்தவர்கள். இந்த உலகத்தை வழிநடத்தும் பொறுப்பை இறைவனே, இவர்களிடம் தான் ஒப்படைத்து இருக்கிறார்.

கலியுகம் ,மனிதப் பிறவியில் இறைவனை நினைப்பது, வணங்குவது, மிகவும் கஷ்டமானதாக தான் இருக்கும். காரணம் !அவர்களின் பாவ கணக்கு அதிகமாக இருந்தால், கடவுளை நினைக்க முடியாது.இதிலும் மீறி இறைவனை வணங்கி, அவன் அருளை பெறுகிறான் என்றால், அந்த ஆத்மாக்கள் எல்லாம் புண்ணிய ஆத்மாக்கள். புண்ணியாத் மக்கள் மட்டும் தான் இறைவனே நினைக்க முடியும். இறைவனை பூஜிக்க முடியும்.

மீதி எல்லாம் ஏதோ ஒரு ஆசையில் அது பதவியாக இருக்கலாம், பணமாக இருக்கலாம், சொத்து சுகங்களாக இருக்கலாம், அதன் மீது அதிக பற்று வைத்து ,இறைவனை நினைக்காமல், அலட்சியமாக இருந்து கொண்டிருப்பார்கள். இதுதான் கலியுகத்தின் கணக்கு .

இதையும் மீறி சிவாலயங்களில், பல லட்சக்கணக்கான பக்தர்கள், சிவ தரிசனம் செய்ய பல மணி நேரங்கள் காத்துக் கொண்டு, எவ்வளவு சிரமங்களுக்கு பிறகும், சிவனை தரிசனம் செய்கிறார்கள் திருவண்ணாமலையில், சுமார் ஐந்து மணி நேரம், 6 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் நின்று, சிவ தரிசனத்திற்காக மக்கள் கூட்டம், லட்சக்கணக்கான பக்தர்கள் காத்துக் கிடந்தார்கள் . இது தான் சிவனின் பெருமை . மேலும்,சிவனடியார்களும், சிவ பக்தர்களும் போட்டி ,போட்டு சிவனை சிவராத்திரியில் வணங்கி சிவன் அருள் பெற்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *