
சென்னை விமான நிலையத்தின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதில், நிலத்தை தேர்வு செய்ய தமிழக அரசு ,கும்மிடிப்பூண்டி வட்டத்திலும் ,மதுராந்தகம் வட்டத்திலும் ,தேர்வு செய்யப்பட்ட இடங்கள் சுற்றுச்சூழல் பிரச்சனைக்கு சவால்களாக உள்ளது.
மேலும்,தற்போது இரண்டாவது விமான நிலையத்திற்கு செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மணலூர் இரண்டு பகுதிகளை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த இரண்டு பகுதியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தடையில்லா சான்று போன்றவற்றிற்கு சவால்களாக உள்ளது. மேலும்,செய்யூர் பகுதி தேர்வு செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் அந்தப் பகுதியில் ஏற்கனவே மின் திட்டத்திற்கு 623 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தப்பட்டுள்ளது.
அதனுடன் 300 ஏக்கர் புறம்போக்கு நிலமும் சேர்த்து இதை தேர்வு செய்திருக்கிறார்கள். ஆனால் ,அந்தப் பகுதிக்கு சுற்றுச்சூழல் மிகப்பெரிய சவால்களாக உள்ளது. அந்த இடத்திலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது.

இது தவிர, தாம்பரம் பகுதியில் அமைந்துள்ள விமான பாதுகாப்பு படையின் எல்லை கண்காணிப்பு வரையறைக்குள் சில பகுதிகள் வருவதால், அதனால், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், தடையில்லா சான்று வழங்குவதில் மத்திய அரசுக்கு இது சட்ட சிக்கலை ஏற்படுத்தி வரும் ஒரு பிரச்சனை. அடுத்தது சுற்றுச்சூழல் நடந்த அந்த பறவைகள் சரணாலயம் ஏற்படுகிறது.

இது தவிர ,கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள மணலூர் அங்கே பழவேற்காடு ஏரி உள்ளதால், அதுவும் சுற்றுச்சூழல் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தேர்வு செய்யப்பட்ட இரண்டு இடங்களிலும், விமான நிலையம் அமைப்பதில் சிக்கலா?
