
சட்டமன்றத்திலே இன்று விவாதத்தின் போது, சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் பரந்தூரில் தான் விமான நிலையம் வேண்டும் என்பது திமுகவினரின் ஜி. ஸ்கொயர் மாப்பிள்ளைக்காகவா? என்று சொன்னவுடன், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கொந்தளிக்கும் காட்சி மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அவர் சொன்னது உண்மைதான் பொய்யல்ல, இந்த குடும்பம் தான் அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் போட்டு உள்ளது. இதில் ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை விமான நிலையத்தின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு அனைத்தும் செயல்படுத்த போடப்பட்ட ஒப்பந்தம் இன்று கேன்சல் ஆனதால் திமுக கொந்தளிக்கிறது.
சட்டமன்றத்தில் கூட ,இவர்களுடைய ரவுடித் தனங்களை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ கருணாநிதியால், கருணாநிதி குடும்பத்தால் ,இவர்களுக்கு எல்லாம் அதிர்ஷ்டம் அடித்து ,தமிழக மக்கள் முட்டாள்களாக வாக்களித்து விட்டார்கள் .அதனுடைய பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,தீய சக்தி என்று ஜெயலலிதா சொன்னார் .அதைத்தான் இன்று தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் விஜயும் தீய சக்தி திமுக என்று அடையாளப்படுத்தி இருக்கிறார்.
மக்கள் இன்னும் இந்த தீய சக்தியிடம் ஏமாறுவார்களா? மீண்டும் தீய சக்தி வந்திருந்தால், தமிழ்நாட்டை இந்நேரம் கதற விட்டிருப்பார்கள். இது அரசியல் தெரிந்த மக்கள்! இன்றும் பேசுவதை நம் காதுகளில் ஒலிக்கிறது.
மேலும், திமுக சொல்வது பொய்யான தகவல் என்று இதற்கு முன் போடப்பட்ட செய்திகளில் சொல்லியிருந்தோம். அதே போல் தான், தற்போது 90% நிலம் கையகப்படுத்திய விட்டோம் என்பதை சட்டத்துறை அமைச்சர் 48% நிலம் தான் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை மக்களிடம் வெளிப்படுத்தி உள்ளார்.
மேலும், நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து போராடி வந்த போராட்டக் குழுவினர் தமிழக முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இனி அந்த சுற்று வட்டார பகுதி முழுவதும் தமிழக வெற்றி கழகத்திற்கு தான் வாக்களிப்பார்கள் என்பது உறுதி.
மேலும்,திமுக வாய்வத்தை காட்டுவதில் அவர்களை மிஞ்ச ஆள் இல்லை .உ.தார் விடுவதில் அவர்களை மிஞ்ச ஆள் இல்லை .இப்படி தான் அவர்களுடைய அரசியல். இது யாரிடம் காட்ட முடியும் ?அரசியல் என்றால் என்ன ?என்று தெரியாத, படிக்காதவனிடம் காட்ட முடியும். இவர்களுடைய அரசியல்! அங்கு தான் இருக்கிறது. ஏமாந்த மக்கள் இனி விழுத்துக் கொள்வார்களா?
