
தமிழக அரசு மருத்துவர்களின் ஓய்வூதியத்தை ஒவ்வொரு மாதமும் ரூபாய் 20,000 ஆயிரத்தை குறைக்க அரசு வெளியிட்ட உத்தரவுக்கு மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த சங்கத்தின் சட்ட போராட்டத் தலைவர் பெருமாள் பிள்ளை வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழக அரசு மருத்துவர்கள் ஓய்வு பெற்ற பின் அவர்களுடைய ஓய்வூதியத்திலிருந்து மாதம் தோறும் ரூ 20,000, குறைக்க அரசாணை வெளியிட்டது.
அதற்கு தமிழக மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதே நிலையை தான் அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இப்போது இவரே இதை செய்கிறார் என்று மருத்துவ சங்கம் எதிர்ப்பு தெரிவித்து,இதை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.