முதல்வர் விஜய் எதிர்பார்க்கும் நல்லாட்சியை நிலை நிறுத்துவது யார்?- தலைமைச் செயலாளர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர்.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டில் மக்களால் பேசப்படும் ஒரு நல்லாட்சியின் நிர்வாகத்திற்கு யார் காரணம் ? ஐஏஎஸ் அதிகாரிகள் தான் முக்கிய காரணம்.

தமிழக முதல்வர் விஜய் என்ன? எதிர்பார்க்கிறாரோ ,அந்த மாற்றத்தை கொண்டு வருவதற்கு முக்கிய காரணம் தலைமைச் செயலாளர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் விஜயகுமார் ஐ.ஏ.எஸ்.இன்று ஆட்சி என்பது மக்களுக்கானது. அரசியல் கட்சிக்காரர்களுக்கு அல்ல, அதேபோல் முதலமைச்சர் குடும்பத்திற்கானதும் அல்ல.

கடந்த ஸ்டாலின் ஆட்சி அவர்கள் குடும்பத்திற்கும் ,அவர்கள் கட்சியினருக்குமான ஆட்சி !இந்த மாற்றத்தை தான் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும், மக்களை ஏமாற்றி, எப்படியோ பேசி பிழைப்பு நடத்தி வந்தோம். இனிமேல், அப்படி நம்மால் நடத்த முடியாது என்று புலம்பி தவிக்கிறார்கள். மக்களும் உண்மையை புரிந்து கொண்டார்களே! அதுதான் தற்போதைய அவர்களின் கவலை.

மேலும், மக்களுக்கும் உண்மை புரிந்து விட்டது இது அரசியல். ஆனால், அரசாங்கத்தின் நிர்வாகம் அதற்கு தகுந்தார் போல், அந்த மாற்றத்தை நடைமுறையில் கொண்டு வர வேண்டும் என்றால் ,அதற்கு தகுதியான தலைமைச் செயலாளர்கள் அமைந்தால் மட்டும் தான், மக்களுக்கான ஆட்சியை கொடுக்க முடியும் .

அந்த வகையில் நான் தலைமைச் செயலாளரை சந்திக்கவில்லை. கூடுதல் தலைமைச் செயலாளர் விஜயகுமார் ஐஏஎஸ் ஐ தான் சந்தித்தேன் . அப்பா! நானும் எவ்வளவோ ஐஏஎஸ் அதிகாரிகளை, 30 ஆண்டுகளுக்கு மேலாக பத்திரிகை துறையில் பார்த்திருக்கிறேன்.

மாவட்ட ஆட்சியர்களை பார்த்திருக்கிறேன். இயக்குனர்களை பார்த்திருக்கிறேன்.இவரைப் போன்ற ஒரு ஐஏஎஸ் அதிகாரியை நான் பார்க்கவில்லை. அவ்வளவு எளிமை . அவ்வளவு பவர் !இதெல்லாம் இயற்கையிலே, இவர்களுக்கு அமைந்து இருக்கிறது. கடவுள் கொடுத்த ஒரு வரம் என்று தான் சொல்ல வேண்டும்.

உக்காருங்க ராஜேந்திரன் .எனக்கு அப்படியே ஒரு மாதிரியா ஆயிடுச்சு. ரொம்ப நீண்ட நாள் ஒரு தொடர்பு இருப்பது போல், எனக்கு பட்டது. எனக்கே ஆச்சரியம்! என்னடா இது, சார் இந்த அளவுக்கு இவ்வளவு எளிமையா இருப்பார் என்று நான் எதிர்பார்க்கலை. ஆனால், இவரைப் பற்றி மட்டும் கேள்விப்பட்டேன். இவரெல்லாம் நல்ல மனிதர் என்றுதான் சொல்லுவார்கள் . ஆனால், நேரில் பார்த்ததில்லை . உங்களுடைய கோரிக்கை என்னன்றது எழுதி கொடுங்கன்னு சொன்னார். உடனடியாக அதை சம்பந்தப்பட்ட செய்தி துறைக்கு அனுப்பி விட்டார்.

மேலும்,ஒருவருடைய தகுதி ,திறமை, ஆற்றல், எல்லாவற்றையும் பார்த்த மாத்திரத்தில், எடை போட்டு விடுகிறார்கள். அது மட்டுமல்ல ,நம்முடைய புத்தகத்தில் நம்முடைய திறமை என்ன ?என்று அதையும் எடை போட்டு விடுகிறார்கள். இதுதான் ஐஏஎஸ் க்கும் , மந்திரிகளுக்கும் உள்ள வித்தியாசம். அவர்களுக்கு அதிகாரிகள் சொன்னால் தான், புரியுமே ஒழிய, புரியாதவர்களும் உண்டு.மேலும்,

இதை ஏன் சொல்கிறேன்? என்றால், இன்று ஆட்சி மாறினாலும், அதற்கான ஆட்சியின் நற்பெயருக்கு முக்கிய காரணமாக இப்படிப்பட்ட அதிகாரிகள் இருக்கிறார்கள். இவர்கள்தான் நல் ஆட்சி நிர்வாகத்தை மக்களுக்கு கொடுக்க முடியும் . இதைத் தேர்வு செய்து தான் முதல்வர் விஜய் எடுத்திருக்க வேண்டும் .

மேலும், இவர் எல்லாம் தலைமைச் செயலாளராக உட்கார்ந்தால், தமிழ்நாட்டில் இருக்கிற ஐஏஎஸ் அதிகாரிகளை பெயர் சொல்லியே கூப்பிடுவார். அந்த அளவுக்கு ஃபிங்கர் டிப்ஸில் வைத்திருப்பார். எங்கே எந்த தவறு நடந்தாலும், அந்த தவறை உடனடியாக சரி செய்து நல்லாட்சியை கொடுக்க முடியும்.

தவிர, ஒரு திட்டத்தை எப்படி செயல்படுத்துவது? அந்த வரைமுறையை வகுத்துக் கொடுப்பார்கள். அந்த திட்டம் தோல்வி அடையக் கூடாது . அதில்தான் ,அவர்கள் திறமை . சீனியர் ஐஏஎஸ் !விரைவில் தலைமைச் செயலாளராக வருவார் என்ற பேச்சும் அடிபடுகிறது.

மேலும், இப்படிப்பட்ட திறமைசாலிகளுக்கு,பத்திரிக்கை துறையில் மாற்றம் என்பதெல்லாம் இவரிடம் ஒரு பெரிய விஷயமே அல்ல . தகுதியான பத்திரிகைகளுக்கு நிச்சயம், இந்த ஆட்சியில் அதற்கான அங்கீகாரம் நிச்சயம் கொடுப்பார்கள் என்பது உறுதி.மேலும், கடந்த காலத்தில் பத்திரிக்கை துறை! பட்ட வேதனை! இனி மேல் இருக்காது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *