
ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தி அன்று, கிராம சபை கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டிலும் ,இந்த காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது.
சில இடங்களில் ,நடத்தாமலே கணக்கு காட்டப்படுகிறது. இது ஒரு புறம் இருக்கட்டும், காந்தியைப் போன்று நேர்மையான முறையில் ,இந்த கிராம சபை கூட்டம் நடத்துவதற்காக இந்த நாளை தேர்வு செய்யப்பட்டுள்ளதா? அப்படி இருந்தால், நேர்மையான கணக்கு வழக்குகள் பஞ்சாயத்து நிர்வாகத்தில் இன்னும் ஏன் மக்களுக்கு தெரியாமல் இருக்கிறது?
மேலும்,மக்கள் அதிகாரம் பத்திரிக்கை தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு மேலாக போராடி, கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தில், பல்வேறு மாற்றங்களை, கொண்டு வந்துள்ளது.

இருப்பினும் அந்த மாற்றம் இன்னும் முழுமை அடையாமலே இருக்கிறது. கடந்த திமுக ஆட்சியில் எவ்வளவோ கிராம நிர்வாக பஞ்சாயத்து சம்பந்தமாக பல்வேறு செய்திகள் வெளியிட்டிருந்தும்,இது பற்றி நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக ஊழல் ஆட்சி! என்பதை ஒத்துக் கொள்ள வேண்டிய ஆட்சி. அதனால், அதற்கு எத்தனை செய்திகள் எழுதினாலும் ,அதை காதில் வாங்க மாட்டார்கள். மேலும்,

தற்போது தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில், கிராம நிர்வாகத்தில் என்ன வரவு, செலவு ?என்னென்ன திட்டங்கள்? தினந்தோறும் நடைபெறுகின்ற வேலைகள் அதற்கான செலவுகள் வரவுகள் என்ன? இது பற்றிய விரிவான கணக்கு ,வழக்குகளை ஆன்லைன் மூலம் பஞ்சாயத்து கிராம செயலாளர்கள் பொது மக்களின் பார்வைக்கு இணையதளத்தில் ஏற்ற வேண்டும்.
இவர்கள் எத்தனை நாளைக்கு எங்களுக்கு கம்ப்யூட்டர் தெரியாது என்று ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள்? தெரியவில்லை என்றால், வேலை விட்டு வெளியே போங்கள், தெரிந்தவரைக் கொண்டு அரசு அந்த வேலையை செய்ய வைக்கட்டும் என்கிறார்கள் ,கிராமத்தினர்.மேலும்,

இந்த நிர்வாகத்தின் கணக்கு வழக்குகள் கிராம மக்களுக்கு எப்போது இவை அனைத்தும் வெளியே வருகிறதோ ,அப்போதுதான் கிராம பஞ்சாயத்தின் நிர்வாகம் மக்களிடம் முழுமை பெறுகிறது.
ஏனென்றால், இன்னும் பல கிராமத்தில் கட்டப்பஞ்சாயத்து கூட்டம், அரசியல் கட்சிகளை வைத்து நடத்திக் கொண்டிருக்கிறது. அதற்கு ஒரு சில துறைகளில், அதிகாரிகள் துணை போய்க் கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக கூட்டுறவுத் துறை! இதை தனியாக கவனிக்க வேண்டிய ஒரு துறை! இருப்பினும், இந்தத் துறையில் சமீபத்தில் தான் என்னுடைய காதுக்கு வந்த ஒரு செய்தி! திருவள்ளூர் மாவட்டம் ,கடம்பத்தூர் வட்டத்தை சேர்ந்த ஒரு கிராமத்திற்கு கூட்டுறவு துறை மூலம், அந்த கிராமத்திற்கு ஒரு டிராக்டர் பொதுவாக கொடுக்கப் பட்டுள்ளதாம்.

மேலும்,இன்று வரை கிராம மக்களுக்கு அது எப்போது கொடுத்தார்கள்? என்பது தெரியாது. யாருக்குமே தெரியாமல் ,அந்த டிராக்டரை ரகசியமாக மறைத்து வைத்திருக்கிறார்கள். இப்படியெல்லாம், கிராமங்களில் நடக்கிறது என்றால்!

இன்னும் எத்தனை ஆண்டுகள் ?இந்த கிராம பஞ்சாயத்தின் நிர்வாகங்கள் கிராம மக்களுக்கு மறைத்து வைக்கப் போகிறது தமிழக அரசு ? இது பற்றி முதல்வர் விஜய் தனிக் கவனம் செலுத்தி ,கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தை மக்களின் வெளிப்படை தன்மைக்கு கொண்டு வருவாரா? என்பது தான் கிராம மக்களின் முக்கிய கோரிக்கை.