ராணுவத்தில் ஆட்கள் சேர்ப்பு முகாம் – ஈரோடு வ.உ.சி. பூங்கா.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பயணங்கள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

இந்திய ராணுவத்தின் அக்னிவீர் ஆட்கள் சேர்ப்பு முகாம் வருகிற ஆகஸ்ட் 26ம் தேதி முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை மற்றும் தேனி உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த முகாமில் பங்கேற்கவுள்ளனர். இதில் அக்னிவீர் ஜெனரல் டூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் கிளர்க்/ஸ்டோர் கீப்பர், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் போன்ற பிரிவுகளுக்கான தேர்வுகள் நடைபெறும்.

மேலும், மத்திய பிரிவுகளில் சிப்பாய் தொழில்நுட்ப நர்சிங் உதவியாளர், சிப்பாய் பார்மசி, ஹவில்தார், ஜூனியர் கமிஷன் அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகள் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்தோருக்கு நடைபெறவுள்ளது.

தேர்வு அட்டவணை:

ஆக. 26: தர்மபுரி, திண்டுக்கல்

ஆக. 27: கிருஷ்ணகிரி

ஆக. 28: கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை

ஆக. 29, 30: மதுரை

ஆக. 31: கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தேனி, மதுரை

செப். 1: நாமக்கல், தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தேனி, மதுரை

செப். 2: கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, திண்டுக்கல், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, தேனி, மதுரை

செப். 3, 4: தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி (மத்திய வகைகள்)

செப். 5: மருத்துவ பரிசோதனை

செப். 6, 7: ஒதுக்கீட்டு நாட்கள்

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி அட்டைகள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

— கோபிநாத் அ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *