
காவல்துறைக்குள் இருக்கின்ற கருப்பு சட்டங்கள் அகற்றப்படாத வரை சமான்ய மக்களுக்கு ஞாயம் கிடைக்காது. அந்த கருப்பு சட்டங்களால் தான் சாமானிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அது என்ன?

சட்டத்தை தங்களுக்கு சாதகமாக வளைக்கின்ற வேலையா? இவர்கள் எஃப் .ஐ .ஆர், ல் எழுதிக் கொள்வது தான் சட்டமா ? இதில் நியாயமும் இருக்கலாம். அநியாயமும் இருக்கலாம். சட்டம் என்பது ஒரு கத்தி போல் உள்ளது. அந்தக் கத்தி நல்லதுக்கும் பயன்படும் .கெட்டதுக்கும் பயன்படும். அதை பயன்படுத்தக்கூடிய நபரின் கையில் தான் சட்டம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதை எப்படி காவல்துறை அதிகாரிகள் எப்படி பயன்படுத்தினார்கள் ?என்பதுதான் நீதிமன்றத்தில் குற்ற வழக்கு விசாரணைகள் போய்க் கொண்டிருக்கும். மேலும்,

இங்கே நிரபராதியிடம் சாட்சியங்கள் இருக்காது. குற்றவாளியிடம் சாட்சியங்கள் இருக்கும். குற்றவாளிக்கு ஆதரவாக சாட்சிகள் இருப்பார்கள். அதாவது ஒன்று பணத்தால் விலைக்கு வாங்கி இருக்கலாம் .அல்லது அதிகாரத்தால் மிரட்டப்படலாம். இந்த சூழ்நிலையில் ஏழை எளிய, நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். சிறிய விஷயங்கள் நீதிமன்றம் வரை எடுத்துச் செல்லும் போது, அதனால் பாதிக்கப்படுவது ஏழை ,எளிய நடுத்தர மக்களின் பொருளாதாரம் மிகவும் முக்கியமானது.
அவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை நோக்கி, அவர்கள் பயணிக்கும் போது, நீதிமன்ற செலவுகள், வழக்கறிஞர் செலவுகள், மற்றும் போய் வரக்கூடிய நாட்கள், நேரம்,அதனால், பாதிக்கப்படும் அவர்களுடைய பொருளாதார இழப்புகள், இத்தனையும் இதற்குள் இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க,

இன்று வரை காவல்துறையில் இன்னும் எழுதப்படாத சட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. இது காவல்துறை அதிகாரிகளுக்கே பாதிப்பை ஏற்படுத்துகிறது. எத்தனையோ நேர்மையான காவல் துறை அதிகாரிகள் பாதிக்கப்படுகிறார்கள். உயர் அதிகாரிகளின் அழுத்தம், அரசியல் அழுத்தம், என்றுதான் அவர்கள் வெளியில் சொல்வார்கள். அதற்குள் என்ன அரசியல்? எத்தனையோ போர் இந்த வேலையை வேண்டாம் என்று விஆர்எஸ் கொடுத்தவர்கள் உண்டு.

இப்படி காவல்துறையின் செயல்பாடுகள் ,வெளிப்படத் தன்மை இல்லாமல் இருப்பது தான், இதற்கு முக்கிய காரணம்.மேலும்,
நீதிமன்ற உத்தரவை கிடப்பில் போட்டு, செயல்பட்டுக் கொண்டிருக்கும், பல காவல்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது ?என்பதுதான் சாமானிய மக்களின் கேள்வி?

இது தவிர, காவல் நிலையங்களில் காவல் அதிகாரிகளின் விசாரணையை வீடியோ எடுக்கவும், தடையில்லை என்று மும்பை உயர்நீதிமன்றம் 25. 11 .2022 அன்று ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. காவல் நிலையம் என்பது ரகசிய இடம் அல்ல, அது ஒரு பொது இடம் .(public place)
மேலும், காவல் நிலையத்தில் குற்றங்களை விசாரிக்கும் போது வீடியோ ஆதாரங்கள் மற்றும் நிரூபிக்கப்பட்ட சாட்சியங்கள் அனைத்தும் தகவலாக கேட்டால் கொடுக்கப்பட வேண்டும். அதேபோல், அதை எடுக்கும் உரிமையும், அதாவது வீடியோ எடுக்கும் உரிமையும், செல்போன் எடுக்கும் உரிமையும், பொதுமக்களுக்கு உண்டு. இதை நடைமுறையில் எத்தனை காவல் நிலையங்களில் ,காவல்துறை அதிகாரிகள் இதை பின்பற்றுகிறார்கள்?

மேலும், காவல் நிலையத்தில் உள்ள கோப்புகள், ஆவணங்கள் போன்றவற்றை பொதுமக்கள் உரிய கட்டணம் செலுத்தி, தகவல் பெறலாம் என்று மத்திய தகவல் ஆணையமும், தெரிவித்துள்ளது.
இவ்வளவு சட்டங்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டிருந்தும் , ரவுடிகளால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். பாலியல் குற்றங்களால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்கள், அரசியல் வாதிகளால் ஏழை ,எளிய நடுத்தர மக்களுக்கு ,நடுநிலையான நியாயம் கிடைக்காமல், இன்றும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இவை அத்தனைக்கும், இதற்குள் இருக்கின்ற அரசியல் என்ன? காவல்துறையின் அதிகாரமா? அல்லது அரசியல்வாதிகளின் அதிகாரமா? இங்கே சட்டம் கேலிக் கூத்தாக்கப்படுகிறதா? நாட்டில் பாதிக்கப்படுவோர்கள் கேள்வி? இதற்கு நீதிமன்றம் என்ன தீர்வு தரப் போகிறது ?