
வன்னியர் சமூகத்தை பாட்டாளி மக்கள் கட்சி ! ஜாதி கட்சி என்ற அங்கீகாரத்தோடு ஜாதியை ஏமாற்றி பிழைப்பு நடத்தி சொத்துக்களை சேர்க்கின்ற ஒரு கட்சியாக தான் இருந்து வருகிறது.
இதே சமூகத்தில் எவ்வளவு பேர் இவர்களுடைய தவறுகளை சுட்டிக்காட்டி, சோசியல் மீடியாக்களில் கமெண்ட் செய்திருக்கிறார்கள் என்பதாவது இவர்களுக்கு தெரியுமா? இவையெல்லாம் இவர்கள் பார்க்கிறார்களா? இல்லை கேட்கிறார்களா?என்னவோ முட்டாள்கள் அதிகம் இருக்கிற சமூகம் என்று நினைத்து விட்டார்களா? இல்லை, சுயநலமாக சமுதாயம் இருக்கிறதா? இல்லை பணத்தை காட்டினால், இவர்கள் பின்னால் வந்து விடுவார்கள் என்ற நினைப்பில் ராமதாஸ் மீண்டும் ஒரு கட்சி துவங்குகிறார?

அதை பற்றி கவலையில்லை, ராமதாஸ் எத்தனை கட்சி வேண்டுமானாலும், ஆரம்பித்து கொள்ளட்டும், ஏனென்றால், பணம் சேர்ந்து விட்டது. இன்னும் பத்து கட்சி கூட ஆரம்பிக்கலாம். தவறில்லை. இன்னும் பத்து வப்பாட்டிகளுக்கும் ராமதாஸ் கோடிக்கணக்கில் பணத்தை கொடுக்கலாம்.

மானமுள்ள வன்னியர்கள் ஐயா வாழ்க, ஐயா வாழ்க என்று கத்திக் கொண்டிருப்பார்களா? அரசியலில் உங்களுடைய தகுதி என்ன என்பதை தர்மபுரி மாவட்டத்திலே வன்னியர்கள் பார்த்து விட்டார்கள்.
அப்படி கண்ணை மூடிக்கொண்டு வாக்களிக்கிற மக்களே இவர்களை தேவையில்லை என்று கடந்த தேர்தலில் தோற்கடித்து விட்டார்கள். இது கூட தெரியாத காட்டுவாசி கூட்டம் போல், பேசி படித்தவனை கூட ஏமாற்றுகிறா சாமர்த்தியம் இனிமேல் வேலை ஆகுமா? மேலும்,
45 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு வைத்து அரசியல் செய்து வன்னியர் சமுதாயத்தை ஏமாற்றியுள்ள ராமதாசை பார்த்து, சமுதாயம் திருந்தாவிட்டால் ,யாருக்கு நஷ்டம்? உங்கள் தலையில் நீங்களே மண்ணள்ளிப் போட்டுக் கொள்கிற வேலை .
அதனால், சமுதாய உணர்வோடு ஓட்டு கேட்டு வந்தால், ஏமாந்தால் ஏமாறுபவர்களுக்கு தான் நஷ்டம்.மேலும்,
இனி வன்னிய சமுதாயத்தின் பெரும்பான்மை மக்களை, நீங்கள் பத்து கட்சி ஆரம்பித்தாலும், ஏமாற்ற முடியாது. அது தர்மபுரி மாவட்டத்திலே உங்கள் குடும்பம் பார்த்து விட்டது. கையிலே, காலிலே, விழுந்து பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. தோல்விதான் கண்டார்கள்.
இப்போதும் இந்த கொடியை பிடித்துக் கொண்டு, பிழைப்பு நடத்தலாம், இல்லன்னா சமுதாயத்தை ஏமாற்றலாம் என்று உங்கள் பின்னால் போகிறவர்கள் கனவு கண்டால், அது பலிக்காது. மேலும்,எப்படியோ உங்களுக்கு ஒரு அதிர்ஷ்டம் சமுதாயத்தை ஏமாற்றி பல கோடிகளை அரசியலில் பார்க்க வேண்டும் என்று வரம் வாங்கி வந்தீர்களா? என்று தெரியவில்லை.

இல்லையென்றால் இந்த சமுதாயம் ஏமாந்து இவ்வளவு நாள், உங்களுக்கு வாக்களித்து இருக்காது. அதனால், ஏமாந்தது போதும், ஏமாற்றுபவர்கள் பின்னால் இனி வன்னியர் சமுதாயம் செல்லுமா? இல்லை, இவர்களை விட்டால் வேறு வழி இல்லை என்று மதிப்பு தேடுவீர்களா? இவர்களால் எந்த மதிப்பும் வராது. எந்த மரியாதையும் வராது.
அதனால், உங்களுடைய உழைப்புதான் உங்களுக்கு மரியாதை. உங்களுடைய திறமை தான் உங்களுக்கு மரியாதை, உங்களுடைய கல்விதான் உங்களுக்கு மரியாதை என்பதை உணர்ந்து, எப்போது இந்த சமுதாயம் விழித்துக் கொள்ளும்? – வன்னியர் சமூக உணர்வாளர்கள் .