
வாக்காளர்கள் பட்டியலைச் சுத்திகரிப்பது ,தேர்தல் ஆணையத்தின் முக்கிய கடமை. அதே நேரத்தில், தகுதியுள்ள ஒரு வாக்காளர்கூட தனது வாக்குரிமையை இழக்காமல் பாதுகாப்பதும் ,தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு.
ஆனால், இதில் அரசியல் கட்சிகள் தங்களுக்கு வேண்டிய நபர்களை சேர்க்க சொல்லி ,அதிகாரிகளை மிரட்டுவார்கள் அல்லது எடுக்கச் சொல்லி , ஒரு பட்டியலை தயார் செய்து,அவர்களை போட வைப்பார்கள். இங்குதான் தவறுகள் நடக்கிறது.

மேலும்,அதிகாரிகள் தவறு செய்தால், அரசியல் கட்சிகள் கேட்கலாம். ஆனால், தவறு செய்ய வைப்பவர்களே அவர்கள் தான். இங்குதான் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடுநிலையாக செயல்பட முடியுமா? ஏனென்றால், அவர்கள் தான், தமிழ்நாட்டிலே எல்லாத் துறையிலும் பணியாற்றக் கூடியவர்கள்.
அவர்கள் வருவாய் துறையில் இருந்து வந்திருக்கலாம். அல்லது உள்ளாட்சி நிர்வாகத் துறையில் இருந்து வந்திருக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ,தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதுதான் ஒரு சிக்கலான கேள்வி?
ஏனென்றால், இந்த பிரச்சனை உச்ச நீதிமன்றம் மற்றும் இந்திய அளவில் பேசப்படும் ஒரு பிரச்சனை. இப்போது வாக்காளர்கள் பெயர் நீக்கம் குறித்து உச்சநீதிமன்றத்திலே கேள்வி எழுப்பப்பட்டுள்ளதால், தேர்தல் ஆணையம், தற்போது இரண்டு (2%) சதவீதத்திற்கு மேல் வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்தால், அது குறித்து தேர்தல் ஆணையரை நேரில் சென்று பார்வையிட்டு ,அதை ஆய்வு செய்து ,அதற்கான விளக்கத்தை அவர் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அப்போது எதற்காக விடுபட்டார்கள்? எதற்காக நீக்கப்பட்டார்கள்? எத்தனை பேர் நீக்கப்பட்டார்கள்? என்பது குறித்த விளக்கம் தேர்தல் ஆணையம் அதில் குறிப்பிட வேண்டும். எதிர்க்கட்சிகளின் முக்கிய குற்றச்சாட்டு .

மேலும்,வாக்காளர்களின் பெயர் நீக்கம் பொத்தாம் ,பொதுவாக சொல்லிவிடுகிறார்கள். இந்த வாக்காளர்கள் பெயர் நீக்கம் எதற்காக நீக்கப்பட்டார்கள் ?என்பது குறித்த அவர்களுடைய கேள்வியும் நியாயமானது தான். அதில் மறுக்க முடியாது .
ஏனென்றால், தகுதி உள்ள வாக்காளர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வாக்குரிமையை ,தேர்தல் நேரத்தில் ,ஜனநாயக கடமை ஆற்றுவதற்கு ,அந்த உரிமையை அவர்களுக்கு நிச்சயம் தேர்தல் ஆணையம் கொடுக்க வேண்டும். அதுதான் அவர்களுடைய கடமை.
ஆனால், இங்கே ஒரு தெருவில் திமுக ஓட்டு எத்தனை !அதிமுக ஓட்டு எத்தனை !பிஜேபி ஓட்டு எத்தனை? தவெக ஓட்டு எத்தனை? என்று கணக்கெடுத்துக் கொண்டு, ஓட்டு பிச்சைக்கு சுற்றி வரக் கூடிய கட்சிக்காரர்கள், இதையெல்லாம் கணக்கு போட்டு, அதிகாரிகளை வைத்து ,எந்த ஓட்டு நமக்கு போட மாட்டார்களோ அவர்களை எல்லாம் நீக்குவார்கள்.
இதை அதிமுக கட்சிக்காரர்களும் செய்வார்கள். திமுக கட்சிக்காரர்களும் செய்வார்கள். இது தவிர, இவர்களுக்கு என்ன வேலை இருக்கிறது ?இதை விட்டால், இவர்கள் என்ன சமூகப் பணியை செய்ய வந்தவர்களா? ஊர்ல யார் ?யார்? என்ன பண்ணிட்டு இருக்கான்? யார் எந்த கட்சிக்கு ஓட்டு போடுவான்? இந்த அரசியல் கட்சிகளின் புரோக்கர் வேலையை தான் இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்களால் தான், இந்த பிரச்சனையே உருவாகிறது. இதை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ,அவர்களை எல்லாம் ஒரு பக்கமாக ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு, கொடுக்கின்ற விண்ணப்பங்களை வாங்கி வைத்து, எது உண்மை? எது போலி? என்பதை இனி நடுநிலையாக செயல்பட்டால் தான் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.
இல்லையென்றால், இவர்கள் இறந்தவர்கள் ,இல்லாதவர்கள் வாக்குகளை எல்லாம் சேர்க்க சொல்லி, கள்ள ஓட்டு போட்டு போடுவதற்கு, வாக்காளர்கள் பெயரை நீக்கி விட்டார்கள் என்று பேசிக் கொண்டிருப்பார்கள். இதுதான் தற்ப்போதய எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.
அதற்குத் தேர்தல் ஆணையம் தற்போது சரியான வழி முறையை பின்பற்ற கொண்டு வந்து வந்துள்ளது. அந்த வழிகாட்டு நடைமுறையில், ஒரு குறிப்பிட்ட நபர் ,ஐந்து பெயர்களை அல்லது அதற்கு மேற்பட்ட பெயர்களை நீக்க கோரினால், அது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து அது உண்மையா? பொய்யா? என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இந்த நடவடிக்கை குறித்து தேர்தல் ஆணையத்தின் இனையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற புதிய வழிகாட்டு நெறிமுறையை வகுத்து உத்தரவிட்டுள்ளது. அப்போது அரசியல் கட்சிகள் வாய் திறக்க முடியாது. இதில் அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட்டால் தான், இனி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.